2008ம் ஆண்டிலும் 2009ம் ஆண்டிலும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை இலங்கையும் இந்தியாவும் தீவிரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கையில் பல உலக அறிஞர்கள் ஒன்று கூடிக் இந்த இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையும் பன்னாட்டு சமூகமும் இணைந்து தடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். அந்த இன அழிப்பின் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணு மற்றும் ஏவுகணை விஞ்ஞானியும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவருமான ஏ பி ஜே அப்துல் கலாம் தான் இப்போது இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்தைப் பற்றி தமிழ் விரோதப் பார்ப்பனப் பத்திரிகை இந்து இப்படிக் கூறுகிறது: The former President, A.P.J. Abdul Kalam, will embark on a mission to promote peace, harmony and prosperity for all societal constituents in Sri Lanka and propagate an agenda for an inclusively developed nation.
அப்துல் கலாமின் பயணம் ஒரு நோயாளி வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் போது கண்டும் காணாதது போல் இருந்து விட்டு பின்னர் நோயாளி இறந்து புதைத்த பின்னர் அவனது சமாதியை அழகுபடுத்த வந்த மருத்தவரின் செயல் போல் இருக்கிறது.
கடந்த பல மாதங்களாக பல பெரியார் கொள்கை சார் ஊடகங்கள் அப்துல் கலாம் இப்போது பார்ப்பனரின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப செயற்படுகிறார் என்று எழுதி வந்துள்ளன. அப்துல் கலாமின் இலங்கைப் பயணமும் அதற்கு பார்ப்பன இந்துப் பத்திரிகை கொடுக்கும் முக்கியத்துவமும் அதை உறுதி செய்கின்றன.
மஹிந்த ராஜபக்சவின் திட்டத்தில் ஒன்று தமிழர்களின் அரசியல் பிரச்சனையை ஒதுக்கி விட்டு இப்போது அவர்களுக்கு பொருளாதார அபிவிருத்தி என்ற மாயைக்குள் மாட்டி தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்குவதே. இதனால்தான் அப்துல் கலாமின் நிகழ்ச்சியின் நோக்கங்களாக peace, harmony and prosperity அமைதி, ஒற்றுமை, செழுமை இருக்கின்றன அதிகாரப் பரவலாக்கம் பற்றி எதுவுமில்லை. இதற்குத் துணை போக அப்துல் கலாம் தமிழின அழிப்புக்குத் துணை போகும் பார்ப்பன சக்திகளால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்துல் கலாம் தமிழ் விரோதப் பார்ப்பன இந்துப் பத்திரிகைக்கு இலங்கையில் இருந்து கொண்டு மின்னஞ்சல் மூலம் ஒரு பேட்டியை வழங்கியுள்ளார். அவர் அப்பேட்டியில் அபிவிருத்தி, வளப் பகிர்வு, ஒற்றுமை போன்ற மஹிந்த ராஜபக்ச அடிக்கடி பாவிக்கும் வார்த்தைகளை கவனமாக கையாண்டுள்ளார். ஆனால் அதிகாரப் பகிர்வைப் பற்றி வாய் திறக்கவில்லை.
தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தை மீறிய கலாம்
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் தீர்மானத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் அப்துல் கலாம இலங்கை சென்றது மொத்த தமிழினத்தையுமே அவமதிக்கும் செயல்.
தமிழர் சிங்களம் படித்தால் நன்மை கிடைக்குமா?
1977-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடாளாவிய ரீதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு பல தமிழர்கள் கொன்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் கொள்ளையிடப்பட்ட போது குருநாகல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ பேசத் தெரியாத சிங்களம் மட்டும் பேசத் தெரிந்த தமிழர்கள் அங்கு தாக்கப்பட்டு விரட்டிஅடிக்கப்பட்டனர். தமிழர்கள் சிங்களத்தையும் சிங்களவர்கள் தமிழையும் படித்தால் இலங்கையில் இனப் பிரச்சனை இருக்காது என்று முன்பு அடிக்கடி கூறிவந்த பிரபல இடது சாரி அரசியல்வாதியான திரு வி பொன்னம்பலம் அவர்கள் இந்தக் குருநாகல் மாவட்ட சம்பவத்தின் பின்னர் தமது கருத்தை மாற்றிக்கொண்டார். அதை அவர பலதடவைகள் தெரிவித்திருந்தனர். பின்னர் சன்சோனி ஆணைக் குழுவிலும் இலைங்கை இனப்பிரச்சனை மொழிப் பிரச்சனைக்கு அப்பாற்பட்டது என்ற கருத்தைப் பல முன்னணி அரசியல்வாதிகள் முன் வைத்தனர்.
ஏன் இந்த மும்மொழித்திட்டம்?
தமிழ் மக்களை சிங்களம் பேசவத்து அவர்களை தமிழைப் பேசாமல் தடுக்க வேண்டும் என்பது சிங்களப் பேரினவாதிகளின் நீண்ட நாள் கனவு. ஏற்கனவே வடக்குக் கிழக்கில் இருக்கும் சிங்களப் படையினர் சிங்களத்தை தமிழர்களுக்கு போதிக்கத் தொடங்கிவிட்டனர். அதை இனி அரசு முறையாகாவும் திட்டமிட்ட முறையிலும் செய்யவே மும்மொழித்திட்டம என்ற போர்வையில் தமிழர்களுக்கு சிங்களம் போதிக்க சிங்கள ஆட்சியாளர்கள் முயல்கிறார்கள். மேலும்சிங்கள ஆசிரியர்கள் என்ற போர்வையில் மேலும் பல சிங்களவர்களை தமிழர் தாயகத்தில் குடியேற்றவும் சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர். இன அழிப்பு என்ற நஞ்சுக் கேக்க்கிறகு மும்மொழித்திட்டம் எனற ஐஸிங்கை சிங்களம் பூசியுள்ளது. அந்த ஐஸிங்கிற்கு மேல் வைக்கப் பட்ட அழகுப் பூதான் அப்துல் கலாம். தமிழ்மக்கள் அந்த கேக்கை உண்பார்களா? தமிழர்கள் சிங்களமும் சிங்களவர்கள் தமிழும் படித்த பின்னால் இலங்கையின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டுமே ஆக்கப்படுவது இலகுவாக இருக்கும். சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்பின் அடுத்த திட்டமான மும்மொழித்திட்டத்தை அப்துல் கலாம் ஆரம்பித்துள்ளார்.
இன்னும் ஒரு மொழியைப் படிப்பது எவ்வளவோ சிறப்பான ஒன்று.
"You live a new life for every new language you speak. If you know only one language, you live only once." - Czech proverb. ஒரு மொழி மட்டும் தெரிந்திருந்தால் நீ ஒரு வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறாய். நீ தெரிந்து கொள்ளும் ஒவ்வொரு புது மொழிகளாலும் நீ ஒரு புது வாழ்க்கையை வாழ்கிறாய். என்பது முற்றிலும் உண்மை. ஆனால் உன்னை அழிக்கவே இங்கு உன் மீது ஒரு மொழி திணிக்கப்படும் செயல் கடந்த 55 ஆண்டுகளாக நடக்கிறது என்பதைத் தமிழா நீ உணர்ந்து கொள். அப்துல் கலாமை ஒரு அறிஞனாகவோ அல்லது விஞ்ஞானியாகவோ மட்டும் பாராமல் ஒரு பார்ப்பனச் சதியின் ஒரு அம்சமாகப்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
என் நினைவு சரியாயின்,1947ல் S W R Dபண்டாரநாயக்கா மும்மொழித்திட்டத்தை ஆதரித்து உரையாற்றியிருந்தார்.அதன் மூலம் சிங்களத்தை தமிழரிடையே சுலபமாக செலுத்தலாம் என பேசியிருந்தார்.பின்னர் சிறிமாவின் அரசில் இருந்த Felix Dias பண்டாரநாயக்கா அந்த உரையின் பாராளுமன்ற பதிவேட்டை மேற்கோள் காட்டி தன் பேச்சுக்கு வலுச்சேர்த்தார்.இதனை சுதந்திரனில் கோவை மகேசன் நண்பருக்கு மடல் எனும் பகுதியில் பிரசுரித்தார்.இவற்றை எல்லாம் சொல்லி எழுத எம்மிடம் இன்று ஆள் இல்லை.யாரும் முயன்றால் நல்லது.
Post a Comment