Tuesday 10 January 2012

ராஜபக்சவின் பேச்சாளராக மாறிய பார்ப்பனப் பார்த்தசாரதி.

இந்திரா காந்தி இந்தியப் பிரதம மந்திரியாக இருந்தபோது இந்தியாவின் இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக இருந்த ஜி. பார்த்தசாரதி 1980களில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க திருமால் எடுத்த அவதாரமாகக் கருதப்பட்டவர். சிங்களவர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர். பங்களாதேசம் உருவாக்கப்பட்டபோது நடந்த இந்திய-பாக்கிஸ்தான் போரில் மிகத் திறமையாகச் செயற்பட்டு உலகின் சிறந்த அரசதந்திரிகளில் ஒருவராகக் கருதப்பட்ட ஹென்றி கிசிங்கரின் காய் நகர்த்தல்களை வெற்றீகரமாக முறியடித்தவர். பின்னர் அரசியல் கற்றுக் குட்டி ராஜீவ் காந்தியால் அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தனவின் வேண்டுகோளிற்கு இணங்க இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டவர்.

1977இல் ஜே. ஆர் ஜயவர்த்தன தலைமையில் வந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்கப்பூர் போல இலங்கையை சிறந்த நாடாக முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று தீவிர அமெரிக்க ஆதரவாளராக உருவெடுத்தது. திருகோணமலைத் துறைமுகத்தையும் சிலாபத்தையும் அமெரிக்காவிற்குத் தாரைவார்க்கத் தயாரானார். திருகோணமலையில் அமெரிக்கக் கடற்படையினருக்கு ஒரு எரி பொருள் மீள் நிரப்பு நிலையமும் சிலாபத்தில் அமெரிக்க நீர் மூழ்கிக்கப்பல்களுக்கான அதி-தாழ்நிலை அலைவரிசைத் தொடர்பாடல் நிலையமும் அமைக்கும் திட்டம் அமெரிக்காவிடம் இருந்தது. திருகோணமலைத் திட்டம் ஒரு சிங்கப்பூர் நிறுவந்த்தின் போர்வையிலும் சிலாபத்திட்டம் அமெரிக்காவின் வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா வானொலிச் சேவை அஞ்சல் நிலையம் என்ற போர்வையிலும் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்ச்சி கொடுத்தது. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விரோதம் மோசமான ஆயுத போராட்டமாக மாறியது. 

அப்போதும் கணிசமான அழுத்தத்தை இலங்கைமீது பிரயோகிக்க பெரிதும் சிரமப்பட்டார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல் வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.
..
ஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது.

அதன் பின்னர் இந்தியா தமிழர்களின் பரமவிரோதியாக மாறியது. தமிழ்நாட்டில் சோ, சுப்பிரமணிய சுவாமி, இந்து ராம் போன்றோர் தமிழர்களின் விடுதலைப் போரை ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டனர். இன்றும் செயற்படுகின்றனர். விசு, பாலச்சந்தர், மணிரத்னம், எஸ் வீ சேகர் போன்றோர் அவர்களின் பின்னால் தமிழர்களின் நண்பர்களைப் போல் தம்மைக் காட்டிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகச் சதி செய்கின்றனர்.

இப்போது இன்னொரு ஜீ பார்த்தசாரதி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை பற்றி திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். இவர் முன்னவரின் பேரன் என்றும் கூறப்படுகிறது.
08-01-2012இலன்று சென்னையில் கிண்டியிலுள்ள பொறியியல் கல்லூரியில் அதன் பழைய மாணவரான ஜீ பார்த்தசாரதி "இலங்கையுடனான உறவுகள் பற்றிய சொந்த நினைவுகள் - இந்திய அமைதிப் படையும் அதற்க்கு அப்பாலும்" என்னும் தலைப்பின் உரையாற்றினார். ஜீ பார்த்தசாரதி கூறியது:

  • அரசியலைப் பொருளாதாரம் துருப்பு வெட்டும் நிலை மாற்றமுடியாததாக இருக்கும் தற்காலத்தில் இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்விற்கு ஒரு நிலைத்திருக்கக் கூடிய தீர்வாக பொருளாதாரரீதியாக வலுச் சேர்ப்பது என்பதற்கு சாதகமாக இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மீள் சிந்தனை செய்ய வேண்டும். 
  • In the present-day world where politics is invariably trumped by economics, India has to have a drastic rethinking of its policy in favour of economically empowering the Tamils in Sri Lanka as a sustainable solution for their rehabilitation.
இதை வாசிக்கத் தலை சுற்றுகிறதா?   பார்த்தசாரதி அய்யங்கர் சொல்வது இதுதான்:
தமிழர்களுக்கு இந்தியா பொருளாதார உதவி செய்து அவர்களின் புனர் வாழ்விற்கு உதவ வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா தனது சிந்தனையை மாற்ற வேண்டும்.
ராஜீவ் காந்தி ஜே ஆர் ஜயவர்த்தனவுடன் ஒப்பந்தம் செய்து இலங்கைக்கு  ஒரு படையை அனுப்பி 8000இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று 3000த்திற்கு மேற்பட்ட பெண்களைக் கற்பழித்து இலங்கை அரசியல் அமைப்பிற்கு ஒரு 13வது திருத்தத்தைக் கொண்டுவந்தார். அது 2012இல் 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடப் போகிறது. ஆனால் அது இது வரை இலங்கையில் நிறைவேற்றப்படவில்லை. அதை இனி மறக்க வேண்டியதுதான்.

ராஜபக்சே சொன்னான் அய்யங்கர் பேசுகிறான்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே இப்போது அடிக்கடி சொல்லுவது: முதலில் தமிழர்களிற்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும். தமிழர்களுக்கு அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசக் கூடாது. தமிழர்கள் சிங்களவர்களுடன் இணங்கி இருக்க வேண்டும்.
ராஜபக்சே தமிழர் புனர்வாழ்வு என்ற போர்வையில் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற முயற்ச்சிக்கிறார். அதற்கு இசைவாகவே பார்த்தசாரதி அய்யங்கர் பேசுகிறார். இயற்கை அனர்த்தம் நிகழ்ந்த பிரதேசம், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் போன்றவை பொருளாதாரச் சுரண்டலுக்கு மிகவும் ஏதுவான இடங்களாகும். இதைச் சுரண்ட ராஜபக்சே முயல்கிறார். . அய்யங்கர்களும் அவற்றை சுரண்ட முயல்கின்றனர். அய்யங்கர் சொல்கிறார்:
“There has to be a basic rethink in Delhi to see in economic terms our neighbours as an extension of the Indian market,” .   "........setting up industrial training and engineering institutions in the North and East of Sri Lanka that would, within a generation, result in the economic integration of the markets in these areas with that of Tamil Nadu—something that Sri Lanka could be persuaded to see as not beneficial merely for Tamils but for the greater common good.

இந்தியாவின் சந்தை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அதன் அயலவர்களை பார்க்கும் படி இந்தியா பொருளாதார ரீதியில் மீள் சிந்தனை செய்ய வேண்டுமாம்.இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களும்  இயந்திரவியல் கல்வி நிலையங்களும் அமைக்க வேண்டுமாம்.
 
இந்தியாவில் அய்யங்கருக்கு வேண்டியவர்கள் இலங்கையில் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களும்  பொறியியல் கல்வி நிலையங்களும் அமைத்து இலாபம் ஈட்ட முனைகிறார்கள். கல்வி நிலையங்களை உருவாக்கலாம். பயிற்றுவிக்கலாம். கற்றவர்கள் வேலை வாய்ப்பிற்கு எங்கு போவது? நீங்கள் அமைக்கவிருக்கும் கல்வி நிலையங்களில் சிங்களவர்களை அனுமதிக்காமல் கல்வி நிலையங்கள் நடாத்த முடியுமா? முதலில் அரசியல் தீர்வு வேண்டும். அய்யங்கரே பின்னர்தான் பொறியியல் கல்லூரி.

பார்த்தசாரதி அய்யங்கரே அன்று இந்தியா இலங்கை இளைஞர்களுக்கு ஆயுதம் கொடுத்துச் சிங்களவனுடன் மோதுங்கள் என்று தூண்டிவிடாமல் கைத்தொழில் பயிற்ச்சி நிலையங்களையும் பொறியியல் கல்லூரிகளையும் தமிழர்களுக்கு கட்டிக் கொடுத்து அவர்களை வாழ வைத்திருக்கலாமே. உதவி செய்கிறேன் என்று வந்தீர்கள். மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொல்லப்பட்டனர். பல கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டன.  ஒரு இனத்தையே ஏதும் இல்லாத நிலைக்கு ஆக்கிவிட்டீர்கள். சும்மா ஆடுமா உங்கள் குடுமி?

3 comments:

Anand said...

நல்ல பதிவு

Sachithananthan_Maravanpulavu said...

இந்திரா அனுப்பிய பார்த்தசாரதி வேறு, கிண்டியில் பேசிய பார்த்தசாரதி வேறு. அவர் இவரல்ல, இவர் அவரல்ல. அவர் முதியவர், இவர் இளையவர்.

Vel Tharma said...

இருவரும் இரு வேறு பார்த்தசாரதி என்று சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
தவறுக்கு மன்னிக்கவும். திருத்தப்பட்டுள்ளது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...