Monday, 2 January 2012

இலங்கையின் போர்க்குற்றமும் இந்தியாவும்

2009 மே மாதம்இலங்கையில் போர் முடிந்த பின் சில இந்திய நடு நிலை ஆய்வாளர்கள் இலங்கைப் போர்க் குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்குண்டு அது வெளிவராமல் மறைக்கப்படலாம என்று எழுதினர். ஒருவர் போர் முடிந்த பின்னர் இலங்கையை இனி நாம் சொல்லும் படி நீங்கள் கேட்கவேண்டும் அல்லாவிடில் நீங்கள்  தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவித்தமைக்கான செய்மதி ஒளிப்பதிவு ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன அவற்றைப் பகிரங்கப்படுத்துவோம் என இந்திய வெளியுறவுத் துறை இலங்கையை மிரட்டியது. பதிலுக்கு இலங்கை நீங்கள் எம்முடன் நடாத்திய உரையாடல்களின் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எம்மிடம் உள்ளன என்று மிரட்டியது என்று எழுதினார். அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன் மொழியப்பட்டபோது இந்தியா அதை இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. 2010 அக்டோபரில் வி. எஸ் சுப்பிரமணியம் எழுதியது:

In a subtle master stroke Gothabhaya Rajapakse more than anyone else was the principal architect of the defeat of the Tamils in Sri Lanka in May 2009. A greater achievement was his diplomatic coup that bought Delhi’s ‘stilled silence’ on SL war crimes that included the locking away of incriminating RAW evidence on the Mullivaykkal war crimes. Though details relating to the South Block Delhi’s involvement in the Mullivaykkal massacres  is  in the open now, the ‘personal caprice (Bellamy)  of the Sonia Delhi’s ‘in the loop’ proxies that stalled the international community’s war crimes initiatives  against SL began to collapse when other (non RAW) incriminating evidence began to unravel. These pointed to SL acting as South Block Delhi’s proxy in the killings of Tamils in Mullivaykkal. Gothabhaya had reasons to be angry over Delhi’s subtle blackmail using RAW aerial pictures of the massacres when in fact SL acted in good faith on ‘in the loop’ Narayanan-Menon’s instructions during that stage of the war.  Though RAW pinpointed the presence of the core LTTE leadership in the midst of heavy civilian concentrations in Mullivaykkal,  Narayanan-Menon gave Gothabhaya the go-ahead to launch the massive final assault in the ‘no fire zone’ in Mullivaykkal. The ‘no fire zone’ itself isolated and away from prying witnesses is the brain child of Narayanan.. The final assault according to Fonseka was originally planned for August to avoid heavy civilian casualties but the revengeful Narayanan-Menon (Sonia-proxies) keen on eliminating the LTTE leadership totally acted recklessly to abort the US rescue plans to save the lives of the LTTE leadership and civilians. The result was the massacres that was a precedent setting Delhi-Colombo trade off model for wiping off the entire Tamil militancy/resistance and treating the massive civilians casualties as acceptable ‘collateral’ damage.  Accordingly, morally the blame for the massacre was not Gothabhaya’s alone. He acted indirectly as the Sonia Delhi’s proxy then.

A Delhi stunned by an angry Gothabhaya Rajapakse took his ‘loop’ signals as lethal enough to implicate Delhi’s South Block  in the war crimes should SL ever be forced to face such charges. A harried and alarmed Delhi reacted speedily to appease Colombo launching  a swift diplomatic offensive to save the murderous SL regime by killing off the international community’s war crimes initiatives in the UN specifically supporting the infamous May 2009 UNHRC resolution. Colombo was now in possession of a dreaded leverage that Delhi has to live with for the longer term.

போர் முடிந்தவுடன் சில பார்ப்பன ஆய்வாளர்கள் தமிழர்கள் இனிப் பிச்சைக்காரர்கள் மாதிரி அவர்கள் இனி தெரிவு செய்யும் தகமையை இழந்து விட்டனர் என்றும் தமிழர்களுக்கு உள்ளது Hobson Choice மட்டுமே என எழுதினர். ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு இப்போது அரசுடன் நடாத்தும் பேச்சு வார்த்தை ஒரு பிச்சைக்காரன் நிலையில் இருந்து பேசுவது போல் இல்லை என்பது உண்மை.

சனல்-4 இன் முதற் காணொளி - பதறிய இந்தியா
2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய சனல்-4 தொலைகாட்சி கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சனல்-4 தொலைகாட்சியின் படுகொலைகள் சம்பந்தமாக தாம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்தார். இன்று வரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த காணொளியை கண்ட இந்தியத் தரப்பு ஏன் அதிர்ச்சியடந்தது? இலங்கை படையுடன் இந்தியப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா? அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கலாம் என்று இந்தியா அதிர்ச்சியடைந்ததா?

 ஐநா நிபுணர் குழு அறிக்கை - கலங்கிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த 2008/09 நடந்த இலங்கைப் போரின் இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் மனித உரிமைகள் மீதான வகைசொல்லல் தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கை இலங்கைக்குக் கிடைத்தவுடன் இலங்கை தொடர்பு கொண்ட முதல் வெளிநாடு இந்தியா. அறிக்கை வெளிவந்தவுடன் தமிழின விரோதிகளான வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ், தேசிய பதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், பதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இப்போது இலங்கைக்கு விரைந்தோடிச் சென்றனர்.


இந்தியாவின் இரு பெரும் பொய்கள்
1. இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தால் அது இந்தியாவின் தேசிய ஒருமப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் 2. தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு இந்தியா உதவாவிடில் இலங்கையில் சீன ஆதிக்கம் வலுவடையும் என்ற இரு பெரும் பொய்களைச் சொல்லியே இந்தியா இலங்கைக்கு உதவி வந்தது. ஆனால் 02-01-2012இலன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக இந்தியா என்ன செய்ய வேண்டும் என உத்தரவிட்ட முடியாது என்று  தெரிவித்ததாகக் கூறியது.  தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா இலங்கையின் ஒரு கைக்கூலி போலவே செயற்பட்டது. சீனாவின் திட்டங்கள் இலங்கையில் விரைந்து நிறைவேற்றப் படுகின்றன ஆனால் இந்தியாவின் திட்டங்களோ இழுத்தடிக்கப் படுகின்றன.

அண்மையில் உதயன் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் வெளி விவகார அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இலங்கை மீது எந்தவித அழுத்தங்களும் கொடுக்கும் நிலையில் இந்தியா இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்தியப் பிரமுகரகள் இலங்கை வருவதும் போவதும் தொடர்கதைபோல் நடக்கும் ஆனால் அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கடந்த காலத்தில் ராஜபக்ஷவின் அரசாங்கத்தை விமர்சித்திருந்த எம்.மனோகரன், எஸ்.இராமகிருஷ்ணன் ஆகிய  இரு எம்.பி.க்களும் இந்தியப் பயணத்தை மேற்கொண்டபின்னர் தங்கள் கருத்துக்களை மாற்றி சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசினால் மட்டுமே தீர்வுகாண முடியும் வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். அவர்கள் அத்துடன் நிற்கவில்லை தேவையேற்படின் இந்த நோக்கத்திற்காக இலங்கை அதிகாரிகளுடன் நாங்கள் கரம் கோர்க்க விருப்பத்துடன் இருக்கிறோம் என்றும் கூறினர். இலங்கையப் பொறுத்தவரை இந்தியா வெளியில் சொல்வது வேறு திரைமறைவில் செய்வது வேறு.

2011இன் கடைசி வாரத்தில் மீண்டும் இந்தியா இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு அமைய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது. 13வது திருத்தம் 1987-ம் ஆண்டு ராஜிவ்-ஜே.ஆர் ஒப்பந்தத்திற்கு அமைய செய்யப்பட்டது. அதை இலங்கை அரசு கடந்த 24 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை. அந்த ஒப்பந்தத்திற்கு அமைய தமிழ்ப்போராளிகள் தங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்  அப்படி ஒப்படைக்கவில்லை என்பதற்காக இந்தியா தமிழர்களுக்கு எதிராக பெரும் ஆயுத பலத்துடன் பெரும் போரத் தொடுத்து எண்ணாயிர்த்துக்கு மேற்பட்டோரைக் கொன்று குவித்து மூவாயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறக்கு உள்ளாக்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரை வீடற்றவர்களாக்கியது. ஆனால் 13வது திருத்தத்தை நிறைவேற்றாதமைக்காக இந்தியா இலங்கை அரசுக்கு எதிராக சுண்டு விரலைத்தன்னும் அசைக்கவில்லை. அசைக்கும் நிலையிலும் இந்தியா இல்லை.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பாராட்டியதில் இந்தியாவைன் பங்களிப்பி எந்த அளவுக்கு இருக்கிறது?

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று இந்தியா கூறியது இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

இந்தியா இலங்கையைப் பொறுத்தவரை கையறு நிலையிலேயே இருக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...