Friday, 30 December 2011

70 ஆண்டுகளுக்கு முன் விட்ட தவறு: 99 வயதுக் கணவன் 96 வயது மனைவியை விவாக இரத்து

99 வயதான இத்தாலியக் கணவர் தனது 96 வயது மனைவியை 1940-ம் ஆண்டு செய்த தவறுக்காக விவாக இரத்துச் செய்துள்ளார்.
1940களில் தற்போது 96 வயதான ரோசா தனது இரகசியக் காதலனுக்கு எழுதிய கடிதங்கள் அவரது 77 ஆண்டு விவாகத்தை முறித்து விட்டது

ரோசா தனது கணவன் அண்டோனியோவை தனது தவறை மன்னிக்கும் படி மன்றாடினார். ஐந்து பிள்ளைகளும் 12 பேரப்பிள்ளைகளும் ஒரு பூட்டப் பிள்ளையும் கொண்ட தம்பதிகளின் 77 ஆண்டுகள் நிரம்பிய விவாகத்தை பழைய காதல் கடிதங்கள் கணவரின் கையில் சிக்கியமை முறித்துவிட்டது.

பழைய பெட்டிகளை சுத்தம் செய்யும் போது அண்டோனியோவின் கைகளில் ரோசா தனது காதலனுடன் பரிமாறிய கடிதங்கள் சிக்கிவிட்டது.

காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ரோசா-அண்டோனியோ தம்பதிகள் இணைபிரியாமல் இருந்து வந்தனர். 10 ஆண்டுகளின் முன்னர் தன் மகனுடன் சிலகாலம் தங்கி இருந்த அண்டோனியோ தனது மனைவியின் பிரிவித்துயர் தாங்காமல் மகனை விட்டு மீண்டும் வந்து ரோசாவுடன் இணைந்து கொண்டார்.

நீண்டகாலத் தம்பதிகளின் விவாக இரத்துச் சாதனை
இதற்கு முன்பு 36 ஆண்டுகள் தம்பதிகளாயிருந்த பிரித்தானியாவைச் சேர்ந்த பேர்ட்டி - ஜெசி தம்பதிகளின் விவாகரத்தின் சாதனையை ரோசா-அண்டோனியோ தம்பதிகளின் 77ஆண்டுச் சாதனை முறியடித்து விட்டது.


2012

கல்லுக்கும் மண்ணுக்கும் முன்னிருந்து
யாண்டும் ஆண்டு வந்த இனத்தின்
கண்ணிரண்டில் நீர் வற்றிய நிலை
பன்னிரண்டில் தன்னும் மாறுமா

உலகுக்கென உழுதுண்டு விருந்தாகி
திருக்குறள் எனும் மறையை மருந்தாக்கி
உலகாண்ட இனம் நடுத்தெருவில் நிற்கும் நிலை

பன்னிரண்டில் தன்னும் மாறுமா


யாயும் ஞாயும் நாயிலும் கேவலமாகினர்
எந்தையும் நுந்தையும் கந்தலாய் ஆயினர்
தந்தை நாடென இந்தியாவை நம்பி
இந்த நம்பிக்கைத் துரோக நிலை

பன்னிரண்டில் தன்னும் மாறுமா

நாடற்று வீடற்று  நாதியற்று
அவதியுற்று நிற்கையில்
ஊடுருவிகளோடு தூரோகிகளும்
கைகோத்துச் சதிசெய்யும் நிலை

பன்னிரண்டில் தன்னும் மாறுமா

ஒன்று பட்டுத் தோள் கொடுத்து
மீண்டெழுந்து  பன்னிரண்டில் தன்னும்
மாற்றுவோம் எம்மவர் இழிநிலை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...