Friday, 2 December 2011

காதலின்றி எதுவும் இல்லை

களத்தில் போராளிகளிடையும் காதல்
முகாம்களில் ஏதிலிகளிடையும் காதல்
புலத்தில் பெயர்ந்தவர்களிடையும் காதல்
ஆர்ப்பாட்டப் பேரணியிலும் காதல்
ஜெனிவா நோக்கிச் செல்கையிலும் காதல்
புறநானூற்றிலும் காதல் அகநானுற்றிலும் காதல்

காதலே இலக்கியம் காதலே இலட்சியம்
அன்றும் காதல் இன்றும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
காதலின்றி எதுவும் இல்லை

உருமாற்றத்தால் ஒரு கருவாய்
கருவறையில் ஒரு சிசுவாய்
என்னை ஈன்ற போதில்
அன்னை கொண்டாள் காதல்

தத்தி நடை பயில
கத்தி மொழி பேச
பெற்றோருடன் காதல்
உற்றோருடனும் காதல்

துள்ளித் திரிந்தோடி
பள்ளிக் கூடம் நாடி
நண்பர்கள் மீது காதல்
பல உணர்வுகளுடன் மோதல்

அரும்பும் மீசைப் பருவம்
கரும்பு போல் ஒரு உருவம்
ஓரவிழிப்பார்வை உசுப்பேற்றும்
இதயத்தை  ரணகளமாக்கும்
அவள் நினைவுகள் எப்போதும்
ரவுண்டு கட்டி என்னைத் தாக்கும்

தெருவிலும் தொடரும்
ஆலயத்திலும் வழிபடும்
மெழுகு திரியொளியில்
மெருகூட்டும்
நடனத்தில் இணைந்து
உடல்கள் உரசும்
தினசரி மூன்று வேளை
சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும்
பார்க்க வேண்டும் போல்இருக்கும்



டுவிட்டரிலும் தொடரும்
sms பல பறக்கும்
முகவேட்டில் அரட்டை அடிக்கும்
உடலெங்கும் ஏதோ போல் இருக்கும்
உணவையும் வாய் மறுக்கும்
நினைவிலும் காதல் கனவிலும் காதல்
எங்கும் காதல் எதிலும் காதல்
இதமான ஒரு வேதனை
அனுபவித்தவனுக்கே இது புரியும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...