Sunday, 2 October 2011

மாற்று வழிகளில் மஹிந்தவை நீதியின் முன் மாட்ட வைக்கும் முயற்ச்சி


இலங்கைக் குடியரசின் அதிபர் மஹிந்த ராஜபக்சமீதான போர்க்குற்றச் சாட்டுகள் சம்பந்தமாக அமெரிக்க கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப் பட்ட வழக்கில் நீதி மன்றம் வழங்கிய அழைப்பாணையை அவர் இதுவரை ஏற்க்காமல் தவிர்த்து வருகிறார். நீதி மன்ற அழைப்பாணை அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவரகம், இலங்கை நீதி அமைச்சு, கொழும்பில் உள்ள மஹிந்தவின் உறைவிடம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டன. இவை எதையும் மஹிந்த ஏற்கவில்லை.

24-09-2011இலன்று மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருந்த போது அவரிடம் நியூயோர்க்கில் உள்ள பௌத்த விஹாரையில் வைத்து நீதி மன்ற அழைப்பாணை சமர்ப்பிக்கச் சென்ற போது அவரது மெய்ப்பாதுகாவலர்கள் அவரை அண்மிக்க விடாமல் சூழ்ந்து கொண்டனர்.

இப்போது புரூஸ் ஃபெயின் என்னும் சட்ட வல்லுனர் மாற்று வழிகள் மூலம் மஹிந்த ராஜபக்சவிடம் நீதி மன்ற அழைப்பாணை சமர்ப்பிப்பது தொடர்பான முன் மொழிவை அமெரிக்க கொலம்பியா மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார். இது முதல் தடவையாக ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புரூஸ் ஃபெயினின் முன் மொழிவில் மஹிந்த ராஜபசவிற்கு எட்டு வேறு வேறு வழிகளில் நீதி மன்ற அழைப்பாணை சமர்பிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது:

1. மஹிந்தவின் தபால் பெட்டி மூலம்: மஹ்ந்தவின் முகவர்கள் அமெரிக்காவில் மஹிந்தவின் 2010 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெற்றிருக்கும் தபால் பெட்டி மூலம் சமர்ப்பித்தல். "PO Box 34017 Washington, DC 20043 US,” என்பது அதன் முகவரியாகும்.

2. பிரசுரிப்பதன் மூலம்: அமெரிக்காவில் முல்லெனெ 339 வழக்கிலும் இலங்கையில் சந்திரத்திலக்க எதிர் முனசிங்க வழக்கிலும் பத்திரிகைகளில் பிரசுரிப்பதன் மூலம் நீதிமன்ற அழைப்பாணை வழங்கப்பட்டது. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்காவின் கொலையிலும் பத்திரிகைப் பிரசுரித்தல் ஒரு நீதிமன்ற அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதாக நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.

3. முகவேட்டினால்(FACEBOOK) சமர்ப்பிதன் மூலம்: மஹிந்தவின் முகவேட்டுப் பக்கத்திற்கு அழைப்பாணையை சமர்ப்பிப்பதன் மூலம் அழைப்பாணையை மஹிந்தவிற்கு சமர்ப்பித்ததாக ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறார் புரூஸ் ஃபெயின். இதற்கு அவர் அண்மையில் ஒரு அவுஸ்த்திரேலிய நீதி மன்றம் வழக்கின் பிரதிவாதிக்கு முகவேட்டின் மூலம் அழைப்பாணை வழங்குவது ஏற்றுக் கொள்ளப்பட்டதை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்.

4. டுவிட்டர் மூலம்: மஹிந்தவிற்கான அழைப்பணையை டுவிட்டர் மூலம் வழங்க முடியுமென்கிறார் என்கிறார் புரூஸ் ஃபெயின். இதற்கு அவர் அண்மையில் பிரித்தானையாவின் ஒரு பதிவருக்கு எதிரான தடை உத்தரவை நீதி மன்றம் டுவிட்டர் மூலம் வழங்கியதை உதாரணம் காட்டுகிறார்.

5. தமிழர்களின் இணையங்கள் மூலம்: பிரதிவாதி மஹிந்த ராஜபகசவும் அவரைச் சார்ந்தவர்களும் தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களது இணையத் தளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. மஹிந்தவிற்கான அழைப்பாணையை தமிழர்களின் இணையத் தளங்களில் பிரசுரிப்பதன் மூலம் அது மஹிந்தவைப் போய்ச் சேரும்.

6. மின்னஞ்சல் மூலம்: மஹிந்த ராஜபக்சவின் மின்னஞ்சலுக்கு அழைப்பாணையை அனுப்ப முடியும். Rio Properties, Inc. v Rio Intern. Interlink, 284 F. 3d 1007 (9th Cir. 2002) என்னும் அமெரிக்க வழக்கில் நீதி மன்றம் மின்னஞ்சல் மூலமான அழைப்பாணையை ஏற்றுக் கொண்டது. இது போன்ற வேறு பல வழக்குகளையும் புரூஸ் ஃபெயின் முன்னுதாரணமாகச் சமர்ப்பித்துள்ளார்.

7. தொலை நகல் (FAX) மூலம்: புரூஸ் ஃபெயின் The New England Merchants Court allowed service via telex as early as 1980. New England Merchants, 495 F. Supp. 73, 81, (S.D.N.Y. 1980). என்று குறிப்பிட்டுள்ளார்.


8. மஹிந்தவின் பிரச்சார முகவர்கள் மூலம்: இலங்கை அரசிற்காக அமெரிக்காவில் பல் வேறு பிரச்சார நிறுவனங்கள் அமர்த்தப்பட்டிருக்கின்றன அவற்றினூடாக மஹிந்த ராஜபக்சவிற்கான அழைப்பாணையை வழங்க முடியும் என்கிறார் புரூஸ் ஃபெயின்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...