கட்டுரைக்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?
காதலி சொல்வது கவிதை.
மனைவி சொல்வது கட்டுரை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஆண் தேவை.
வாழ்வில் நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும்
கடவுளையும் அரசாங்கத்தையும் குறை கூற முடியாது.
அதற்கென்று ஒருவர் எப்போதும் உடன் தேவை.
அவன்: நான் ஒரு தினசரிப் பத்திரிகையாக இருக்க விரும்புகிறேன். உன் கையில் நான் இருக்க.
அவள்: நீ ஒரு தினசரிப் பத்திரிகையாக இருப்பதையே விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக ஒவ்வொன்று.
ஆசிரியை: சேகர், நீ அளவுக்கு அதிகமாகப் பேசுகிறாய்.
சேகர்: அது எனது இரத்தத்தில் ஊறியது
ஆசிரியை: எப்படி
சேகர்: எனது பேரன் ஒரு சமயப் பிரசங்கம் செய்பவர். அப்பா ஒரு அரசியல்வாதி....
ஆசிரியை: உனது அம்மா?
சேகர்: ஒரு பெண்...
பணம்தான் உலகம் என்று வாழக்கூடாது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்...போதிய அளவு பணம்ம் சம்பாதித்த பின்னர்.
தம்மடித்தேன் சில வாரங்களில் அதற்கு அடிமையானேன்.
தண்ணியடித்தேன் சில மாதங்களில் அதற்கு அடிமையானேன்.
மூன்று வயதில் இருந்து படிக்கிறேன் அதற்கு ஏன் அடிமையாக முடியவில்லை.
அடங்காமல் திரிந்தவன்
ஆமென்று தலையாட்டுகிறான்
கல்யாணமாச்சு
"தொந்தரவு செய்ய வேண்டாம்
ஏற்கனவே நிறையத் தொந்தரவு எனக்கு"
கல்யாணமானவன் காரின் பின்னால் வாசகம்.
பெண்கள் ஆண்களிலும் அதிக காலம் வாழ்கின்றனர்.
கடைகளில் பொருள் வாங்குபவர்களுக்கு இருதய வியாதி வருவதில்லை
வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு இருதய வியாதி வரும்.
இவற்றை மொழிபெயர்த்தால் சுவை போய்விடுமா?1. Every wife is a MISTRESS for her husband. MISS for one hour and STRESS for the rest 23 hours.
2. Husband: Do you know the meaning of WIFE? It means, Without Information, Fighting Every time!
Wife: No darling, it means,
With Idiot For Ever
கடவுளும் நிற வெறியனாக இருந்தால்.
கடவுள் ஒரு ஆபிரிக்கச் சிறுமிக்கு சிறகுகள் கொடுத்தார்.
சிறுமி கடவுளிடம் வினவினாள்: நான் இப்போது தேவதையா?
கடவு: இல்லையடி கறுப்பி நீ இப்போது ஒரு வௌவால்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
3 comments:
நல்லாவே இருக்குங்க...
இதுவும் புது ஐடியாதான்...
வாழ்த்துக்கள்...
பதிவுக்கு ஸ்டில் புடிக்கிற உங்க ரசனை நல்லா இருக்கு...
தண்ணிக்கும் தம்முக்கும் அடிமையாகும் நாம் சிறு வயதிலிருந்து படித்தும் படிப்புக்கு அடிமையாவதில்லை. -இந்த வரிகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.
Post a Comment