அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளால் மட்டுமே பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்து உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று உணர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகள் தாம் ஒன்றிணைந்து ஒரு பெரும் சந்தையாகவும் அரசாகாவும் உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் என்ற பெயரில் இணைந்து கொண்டன. ஐரோப்பிய ஒன்றியம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் இன்றும் நாடுகளிடை கருத்து வேறுபாடுகள் உண்டு. சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உட்பட 27 நாடுகள் இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. இவையாவற்றையும் ஒன்றிணைத்தால் மொத்த தேசிய உற்பத்தி ரீதியில் ஐரோப்பிய ஒன்றியம் உலக பொருளாதாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார் ரீதியில் ஒன்றிணைந்த 27 நாடுக்ளும் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுத்து ஒரு மத்திய அரசுக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க தயக்கம் காட்டுகின்றன. பதின் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு என்று யூரோ என்ற தனி நாணயம் உருவாக்கப்பட்டபோது 17 நாடுகள் மட்டுமே அதில் இணைந்து கொண்டன. முழு நாடுகளும் இணையாதது ஐக்கிய ஐரோப்பிய அரசு உருவாக்கத்திற்கு ஒரு பின்னடைவே. அடுத்த பெரும் பின்னடைவு ஒரு நாணயத்தை ஏற்றுக் கொண்ட 17 நாடுகளும் ஒரு நாட்டுப் பொருளாதரத்துக்குரிய கட்டுப் பாடுகளை இறுக்கமாகக் கடைப் பிடிக்காமல் தமது தேர்தல் அரசியலுக்கு ஏற்ப ஒவ்வொரு நாடுகளும் தமது பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடித்தன. சில நாடுகள் மக்களுக்கு பெரும் பணச் செலவில் அதிக சமூக நன்மைகளைச் செய்தும் சிலநாடுகள் தமது அரச செலவீனங்களை குறைத்தும் செயற்பட்டன. ஆனால் நாணய ஒன்றியமானது ஒரு சிறந்த பொருளாதாரக் கட்டுப்பாடுன் இருக்க வேண்டும். பொருளியலாளர்கள் கூறுகிறார்கள்: Currency union should go hand in hand with fiscal policy union.
பெரியண்ணன் வைத்ததுதான் சட்டம்.
யூரோ நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாடுகளை யூரோ வலய நாடுகள் என்று அழைப்பர். இந்த யூரோ வலய நாடுகளில் பொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் முதலாம் இடத்தில் இருப்பது ஜேர்மனியே. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் ஜேர்மனியப் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்புடையதாக நிர்ணயிக்கப்பட்டன. ஒரு நாட்டின் பொருளாதார சூழ் நிலைகளுக்கு ஏற்ப அதன் வட்டி வீதவும் நாணய மதிப்பும் இருந்தால்தான் அந்நாடு தன் பொருளாதார ஏற்ற இறக்கங்களைச் சரியான முறையில் எதிர் கொள்ள முடியும். ஜேர்மனை தனது நாட்டின் செலவீனங்களைக் கட்டுப்படுத்தி தொழிலாளர் உரிமைகளயும் நலன்களையும் மட்டுப்படுத்தி தனது நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரித்து உலகின் முதல்தர ஏற்றுமதி நாடாக தன்னை நிலை உயர்த்திக் கொண்டது. பிரெஞ்சு விவசாயிகளை வீடுகளில் ஜேர்மனியக் கார்கள் அழகு படுத்தின. யூரோ வலய நாடுகளிடை பெரும் பொருளாதார வேறுபாடுகள் தோன்றின. யூரோ வலய நாடுளில் மற்ற பெரிய நாடான பிரான்சில் வேலையற்றோர் தொகை 10% ஜெர்மனியில் 7%. பிரான்சில் ஒரு ஊழியர் ஒரு வாரத்தில் அதிக பட்சம் 35 மணித்தியாலங்கள் மட்டு மே வேலை செய்ய முடியும். ஜேர்மனியில் அது 39 மணித்தியாலங்கள்.பொருளாதாரத்தில் ஜேர்மன் பிரான்சிலும் பார்க்க பலமாக இருந்தாலும் சமூக உரிமைகளில் அது பிரான்சிலும் பின் தங்கியே உள்ளது. ஒரு நாட்டுக்குள் வேலையற்றோர் ஒரு பிரதேசத்தில் இருந்து மற்றப் பிரதேசத்துக்கு இடம் பெயர்வது போல் யூரோ வலய நாடுகளிலும் வேலையற்றோர் ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்குப் போய் வேலைசெய்ய முடியும். ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஊழியர்கள் இப்படி நாடுகளை மொழி கலாச்சாரப் பிரச்சனைகளால் மாற்றிக் கொள்வது குறைவு. பல நாடுகள் ஒன்றிணைந்து ஒரு நாணயக் கூட்டமைப்பை உருவாக்கும் போது இந்தப் பிரச்சனைகள் சமாளிக்கக் கடினமானவயே.
ஜேர்மனியின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப வகுத்துக் கொண்ட யூரோ நாணய மதிப்பும் யூரோ வலய வட்டி வீதமும் கிரேக்கம், வட அயர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளுக்கு ஒத்து வரவில்லை. இவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு அங்கு நிறுவனங்கள் மூடப்பட்டு வங்கிகள் வங்குரோத்து நிலையடைந்து, அரசுகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு கிரேக்கம். இது இப்போது கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் தள்ளாடுகிறது. கிரேக்கத்தின் கடன் முறிகளுக்கான வட்டி 60% மாக உயர்ந்துள்ளது. பொதுவாக இது ஐந்திலும் குறைவாக இருக்க வேண்டும். இப்போது கிரேக்கக் கடன் முறிகளை யாரும் வாங்கத் தயாராக இல்லை. யூரோ வலய நாடுகளுக்கு என்று ஒரு பொதுவான கடன் முறிகளை உருவாக்கி அதை விற்று வரும் பணத்தைக் கிரேக்கத்திற்கு கொடுக்க மற்ற யூரோ வலயநாடுகள் அதில் முக்கியமாக ஜேர்மனி தாயாராக இல்லை. ஜேர்மனி கிரேக்கத்திற்கு கடன் கொடுக்கவோ அல்லது மான்யம் வழங்கவோ தயாராக இல்லை. இதை ஜெர்மன் வாக்காளர்கள் விரும்பவில்லை என்பதை அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் கொள்ளும் ஜேர்மன் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். .இதனால் கிரேக்கம் பொருளாதாரம் எந்நேரமும் முறிவடையலாம என்று எதிர் பார்க்கம் படுகிறது. மற்ற யூரோ வலய நாடுகள் கிரேக்கம் முறிவடைவதைக் தடுக்க முயலவில்லை. கிரேக்கம் தனது பொருளாதார சீர்திருத்தங்களை உறுதி அளித்தபடி செய்யவில்லை என்பதை மற்ற நாடுகள் ஒரு சாட்டாகக் கொள்கின்றன. கிரேக்கம் முறிவடைந்தால் அதற்குக் கடன் கொடுத்த பிரெஞ்சு வங்கிகள் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படலாம். இது பிரான்சில் ஒரு நிதி நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம். பிரான்சின் நிதி நெருக்கடி மற்ற யூரோ வலய நாடுகளிற்குப்பரவி அது ஒரு உலகப் பொருளாதார நெருக்கடியாக உருவெடுக்கலாம்.
சீனாவிடம் கையேந்தும் இத்தாலி
கடன் நெருக்கடிக்கு கிரேக்கம் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க இத்தாலி தனது கடன் பிரச்சனையைத் தீர்க்க சீனாவை தனது நாட்டுக் கடன் முறிகளை வாங்கும் படி கேட்டு நிற்கிறது. சீனாவும் தனது பாரிய வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பான 3.2ரில்லியன் டொலகளை முதலிட நல்ல இடங்களைத் தேடி நிற்கிறது. இத்தாலிய கடன் முறிகள் 5% இற்கு மேல் இலாபம் தரக்கூடியவையாக இருக்கின்றன. யூரோ வலய நாடுகளின் ஆண்டுக்கடன் அதன் மொத்த தேசிய உற்பத்தியின் 3%இற்கும் குறைவாகவும் அதன் மொத்தக்கடன் 60% இற்கு குறைவாகவும் இருக்க வேண்டும் ஆனால் இத்தாலியின் கடன் அதன் மொத்தத் தேசிய உற்பத்தியின் 100%ஐத் தாண்டிவிட்டது
அவசர சிகிச்சைப் பிரிவில் சில நாடுகள்
இத்தாலி, வட அயர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் இப்போதும் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே இருக்கின்றன. வட அயர்லாந்து சிறிதளவு தேறியுள்ளது. பிரான்சும் பிரித்தானியாவும் எந்நேரமும் அவசர நோயாளர் காவு வண்டியில் ஏறலாம். பிரித்தானியாவிற்கும் பிரான்சுக்கும் வரும் நோய் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விரைவாகப் பரவும். பிரித்தானியாவின் ஓரளவு கட்டுக்கோப்பான நிதிக் கொள்கையும் அது யூரோ வலயத்தில் இல்லமல் இருப்பதும் அதன் கடன்களை கட்டுக்கடங்கி வைத்திருக்கிறது. ஆனால் அதன் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. பிரித்தானிய தனது வங்கித்துறைக்கு அவசர அவசரமாக சுயாதீன வங்கை ஆணைக்குளுவை அமைத்து கால் கட்டுப் போட்டுள்ளது.
யூரோ நாணயத்தின் எதிர்காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலமும்
கடந்த சில நாட்களாக யூரோ நாணத்தின் மதிப்பு குறைவடைந்து வருகிறது.யூரோ நாணக் கட்டமைப்பில் இருந்து சில நாடுகள் வெளியேறும் சூழ்நிலைகள் இப்போது உருவாகியுள்ளது. அவை வெளியேறி இன்னொரு நாணயக் கூட்டமைப்பை உருவாக்கலாம் அல்லது தமது பழைய நாண்யத்தை மீண்டும் கொண்டுவரலாம். யூரோவில் எஞ்சி இருக்கும் நாடுகள் அதிக பொருளாதாரக் கட்டுப்பாட்டை தமக்கிடையே உருவாக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment