சுற்றி வளைப்புக்கள்
ஆசைகளின் ஆக்கிரமிப்புக்கள்
முடிவுறாத் தேடல்கள்
நெஞ்சில் அணையாத்தீயாகின

பலதைப் பார்த்து
ஒன்றை தேர்வதல்ல காதல்
ஒன்றைப் பார்த்து
ஒன்றையே தேர்ந்து
ஒன்றிலேமுடிவது காதல்
ஒவ்வொரு நாளும் பூக்கும்
புதுப் பூக்கள் போல்
புதுப் புது வார்த்தைச் சரசங்கள்
புதுப்புது உணர்வுப் பரிமாற்றங்கள்
தேங்கி எங்கும் நிற்காது
என்றும் ஓடும் நதியே காதல்.
அணைக்க அணைக்க எரியும்
அணைப்பிலே புரியும்
உணர்வுகளின் உச்சக்கட்ட
வெப்பச் சங்கமமே காதல்
வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நீ போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொரு நிகழ்வும்
நெஞ்சில் நிலைத்து
நினைவாய் இனிப்பது காதல்
தூரங்கள் தொலைந்து
இடைவெளிகள் மறைந்து
காற்றுக்கும் இடமின்றி
காற்றோடு காற்றாய்
கனவோடு கனவாய்க்
கலக்கும் காதல்
3 comments:
வந்த வழியிழந்து,
நின்ற இடம் மறந்து,
உன்பாதை நான் போக,
என்பாதை நான்போகப்,
பிரிவதில்லை காதல்,
ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு நிகழ்வும்,
நெஞ்சில் நிலைத்து,
நினைவாய் இனிப்பது காதல்
superrrrrr
புறத்தில் தெரிந்தது
அகத்தில் நுழைந்தது
உடலில் கலந்தது
பின்,
உயிரில் பிறந்தது காதல்...
மனித உயிரில் பிறந்தது காதல்...
வந்த வழியிழந்து
நின்ற இடம் மறந்து
உன்பாதை நான் போக
என்பாதை நான்போகப்
பிரிவதில்லை காதல்//
அருமையான கவிதை நண்பா..
Post a Comment