Wednesday, 24 August 2011

மொழி பெயர்த்த நகைச்சுவைகள்

முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.

ஆசிரியர்: ஒரு நாளில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது நீங்கள் நித்திரை செய்ய வேண்டும்.
மாணவன்: உங்கள் விரிவுரை ஒரு மணித்தியாலம் மட்டுமே!

இரு மாணவிகளை இரு மாணவர்கள் டாவடித்து வந்தனர். ஒரு நாள் அப்பெண்கள் இருமாணவர்களுக்கும் ராக்கி கட்டிவிட்டனர். ஒரு மாணவன் சொன்னான் "மச்சி உன் தங்கையை நானும் என் தங்கையை நீயும் திருமணம் செய்து கொள்வோம்.

தங்கை: பாட்டியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசு கொடுப்போம்?
அண்ணன்: கால்ப்பந்து.
தங்கை: பாட்டி கால்பந்து விளையாடமாட்டா!
அண்ணன்: எனது பிறந்த நாளுக்கு அவ மட்டும் புத்தகம் பரிசாகத் தரலாமா?

பேருந்தில் இரு பெண்கள் ஒரு ஆசனத்தில் யார் இருப்பது என்பது பற்றி சண்டையிட்டுக் கொண்டனர். உங்களில் யார் முதியவரோ அவர் இருக்கலாம் என்றார் நடத்துனர். ஆசனம் வெறுமையாக இருந்தது.

பார்ட்டி ஒன்றில் ஒரு கவர்ச்சீகரமான கன்னி ஒரு இளைஞனைப்பார்த்து நீ நடனமாட விரும்புகிறாய என்றாள். இளைஞனும் மகிழ்ச்சியுடன் ஆம் என்றான். சரி போய் ஆடு உனது ஆசனத்தில் நான் இருக்க வேண்டும் என்றாள் அவள்.

புதிய கல்யாண உறுதிமொழி: இன்று முதல் எமது Facebook statusஐ married என்று மாற்றிக் கொள்வதாக இத்தால் உறுதிமொழி வழங்குகிறோம்.

ஒரு பிச்சைக்காரன் நூறு ரூபாத்தாள் ஒன்றைக் கண்டெடுத்தான். ஆடம்பர உணவகத்திற்கு சென்று மூவாயிரம் ரூபாக்களுக்கு உணவருந்தினான். பணம் கொடுக்காததால் உணவகம் அவனை காவற்துறையிடம் ஒப்படைத்தது. காவற்துறைக்கு நூறு ரூபாவைக் இலஞ்சமாகக் கொடுத்துத் தப்பித்துக் கொண்டான். இது இந்திய நிதி முகாமைத்துவம்.

கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்.

6 comments:

Anonymous said...

முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.

ஆசிரியர்: ஒரு நாளில் குறைந்தது ஆறு மணித்தியாலங்களாவது நீங்கள் நித்திரை செய்ய வேண்டும்.
மாணவன்: உங்கள் விரிவுரை ஒரு மணித்தியாலம் மட்டுமே!

நல்ல நகைச்சுவைகள்....

பி.அமல்ராஜ் said...

முதலைகள் நிரம்பிய குளத்துள் மனைவியை வீசிய கணவன் மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது.

கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்.

சூப்பர் அண்ணா..

முனைவர் இரா.குணசீலன் said...

சமூக நிலையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கிறான்

பிச்சைக்காரன்.

மாசிலா said...

Nice post. I liked the first crocodile's vice woman and the beggger's currupting the police. Thanx a lot.

kobiraj said...

அருமையான நகைசுவை தொகுப்பு .உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி

aotspr said...

\\"கணவன் தவறு செய்தான். மனைவி சத்தமிட்டாள். கணவன் மன்னிப்புக் கேட்டான். மனைவி தவறு செய்தான் கணவன் சத்தமிட்டான். மனைவி அழுது தீர்த்தாள். கணவன் மன்னிப்புக் கேட்டான்."//
சூப்பர் காமெடி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...