Wednesday, 3 August 2011
அமெரிக்க கடன் உச்ச வரம்பு உயர்தப்பட்டதன் பின் என்ன நடக்கும்?
அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு உயர்த்தப் படுமா என்ற பிரச்சனையில் உலக நிதிச் சந்தையில் பலர் திணறிக் கொண்டிருந்தனர். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் பொருளாதாரப் பலவீனத்தை உலகெங்கும் பறைசாற்றிக் கொண்டிருந்தது அதன் கடன் நெருக்கடி. ஆனாலும் மனித வராலாற்றில் அமெரிக்காவைப் போல் உலக நிதி நடவடிக்கைக்கு உகந்த ஒரு நாணயக் கட்டமைப்பை வேறு எவரும் வழங்கியதில்லை என்று அமெரிக்கர்கள் மார்தட்டிக் கொள்கின்றனர். அமெரிக்க டொலர் நாணயம் இப்போது உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஒதுக்க நாணயம் (dominant reserve currency) ஆகத் திகழ்கிறது.
அமெரிக்காவின் இரு கட்சிகளுக்கும் இடையில் அமெரிக்க அரச கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்ப்பக ஒரு உடனபடிக்கை ஏற்பட்டிருக்க்காவிடில் உலக நிதிச் சந்தையில் பெரும் களேபரம் நிகழ்ந்திருக்கும். ஆனால் உடன்படிக்கை ஏற்பட்டதால் ஒன்றும்பெரிதாக நிகழ்ந்து விடப்போவதில்லை. மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பராக் ஒபாமாவிற்கு குடியரசுக் கட்சியினரைப் பெரும் பான்மையாகக் கொண்ட மக்களவை கடினமான நிபந்தனைகளை விதித்து கடன் உச்ச வரம்பை உயர்த்த சம்மதித்தது.
கடன் உச்ச வரம்பு உயர்த்தும் உடன்பாடு
1. அமெரிக்க பாதீட்டு பற்றாக் குறையை அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு ரில்லியர் டொலர்களால் குறைப்பது.
2. அமெரிக்க கடன் உச்ச வரம்பை 2.1 ரில்லியன் டொலர்களால் அதிகரிப்பது.
3. இரு கட்சிகளும் இணைந்து பற்றாக்குறையை 1.5ரில்லியன் டொலர்களால் குறைப்பது.
ஆகியவை உடன்பாட்டின் முக்கிய அம்சங்களாகும்.
அமெரிக்க கடன் நெருக்கடி பற்றிய முந்தைய பதிவு: கடன் பட்டுக் கலங்கும் அமெரிக்கா.
அமெரிக்காவை புல்லுருவி என்றது இரசியா
பழைய சோவியத் ஒன்றியத்தில் ஒன்றும் செய்யாமல் சமூகத்துக்கு பாரமாக இருக்கும் சோம்பேறிகளை புல்லுருவி என பொதுவுடமைவாதிகள் குறிப்பிடுவர். இப்போது அந்தச் சொல்லை இரசியப் பிரதமர் புட்டீன் அமெரிக்கர்களைப் புல்லுருவிகள் என்று அமெரிக்க கடன் நெருக்கடி பற்றிக் குறிப்பிடும்போது தெரிவித்தார்.
நிம்மதிப் பெருமூச்சு விடும் சீனா.
அமெரிக்கா சரியான நகர்வுகளை மேற்கொண்டது என்கிறது சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி என்னும் பத்திரிகை . உலக நிதிச் சந்தை பாதிக்கப்பட்டால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவது சீனப் பொருளாதாரமே. சீன அமெரிக்க அரச கடன் முறிகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. மூன்று ரில்லியன் டொலர் கணக்கில் உலகில் உயரிய அந்நியச் செலவாணி உபரியைக் கொண்ட சீனா தனது வெளி நாட்டுச் சொத்துக்களை டொலரிலேயே வைத்துள்ளது. சீன தனது வெளிநாட்டுச் சொத்துக்களில் மூன்றில் இரு பங்கை அமெரிக்க டொலரிலேயே வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனாலும் கடன் உச்ச வரம்பை உயர்த்த அமெரிக்கா பட்ட பாட்டையிட்டு சீனா அருவருப்படைந்ததாகத் தெரிவித்துள்ளது. சீனாவின் கடன்படு முகவரகம் அமெரிக்க கடன்படுத் திறனை ஏ+இல் இருந்து ஏஇற்கு இறக்கியுள்ளது. சீன மத்திய வங்கி அமெரிக்கா தனது கடன் முறிகளின் பெறுமதியைத் தக்க வைக்க பொறுப்பானதும் காத்திரமானதுமான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தைகளில் விலை சரிவு.
நேற்று டோக்கியோவில் இருந்து இலண்டன் ஈறாக நியூயோர்க் வரை சகல உலகப் பங்குச் சந்தைகள் யாவிலும் விலை வீழ்ச்சியையே கண்டன.
மத்திய வங்கிகள் மீண்டும் தங்கங்களை வாங்குகின்றன
அமெரிக்க கடன் நெருக்கடியைத் தொடர்ந்து தங்கத்தின் விலை உலகச் சந்தையில் விலை அதிகரிப்பை அடைந்தன. நேற்று பெரும் ஏற்று மதியைக் கொண்ட தென் கொரியாவின் மத்திய வங்கி 25 மெற்றிக் டொன் தங்கங்களை வாங்கியது. ஏற்கனவே மெக்சிக்கோ, இரசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கிவிட்டன.
உலகச் சந்தையில் பாதகமான சூழ்நிலை ஏன் ஏற்பட்டது?
1. அமெரிக்க மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிக்காது.
அமெரிக்க கடன் உடன்படிக்கையில் வரி விதிப்பு அதிகரிப்பைக் குறைத்தும் அரச செலவீனங்களை பெருமளவில் கட்டுப்படுத்தியுமுள்ளனர். ஊழியர்களின் வரிவீதங்களை அதிகரிக்காமல் அவர்களின் வரிக் குறியீடுகளை(Tax Code) மாற்றவுள்ளானர். இதனால் அவர்கள் அதிக வரி செலுத்த வேண்டி வரும். இது அமெரிக்க மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்காது. மக்கள் கையில் பணப்புழக்கம் இன்றி அவர்களின் கொள்வனவு அதிகரிக்காது. இதனால் தேசிய உற்பத்தி அதிகரிக்கும் வாய்புக்க்கள் குறைகின்றன. அமெரிக்க உற்பத்தி வளராமல் உலகப் பொருளாதாரம் வளர்வதற்கான வாய்ப்புக்களும் குறையும்.
2. அமெரிக்க மக்கள் செலவுகளைக் குறைத்தனர்.
அமெரிக்க மக்கள் தங்கள் செலவீனங்களை ஜூன் மாதத்தில் 0.2 விழுக்காட்டால் குறைத்தனர் என்று நேற்று வெளிவந்த புள்ளி விபரங்கள் தெரிவித்தன. அமெரிக்க பொருளாதாரத்தில் 70% பங்களிப்பைச் செலுத்தும் அமெரிக்க மக்கள் செலவீனம் குறைந்தம அமெரிக்கப் பொருளாதாரத்தை பாதிக்கும். உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் பொருளதாரம் பாதிக்கப் படும் போது அமெரிக்காவிற்கான ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கபப்டும்.
3. அரச் செலவு குறைந்தால் வேலை வாய்ப்புக்கள் குறையும்
அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களவையில் பெரும்பான்மையாக இருக்கும் குடியரசுக் கட்சி அரச செலவீனங்களைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்தே தேர்தலில் வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் அவர்கள் கடன் உச்ச வரம்பை உயர்த்த அரச செலவீனங்களைக் குறைக்கும் நிபந்தனை விதித்தனர். அரச செலவீனத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் நேரடித் தொடர்பு உண்டு. அரச செலவீனம் அதிகரிக்கும் போது வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பொருளாதாரம் நலிவடைந்திருக்கும் போது அரச செலவீனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் சில பொருளியன் நிபுணர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர். இப்போதைய அமெரிக்க நிலையில் அமெரிக்க வேலை வாய்ப்புப் பாதிக்கப்படுவது உலக பொருளாதாரத்திற்கு உகந்ததல்ல.
பராக் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு.
அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலை எதிர் நோக்குகிறார் பராக் ஒபாமா. அவர் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டமையில் இருந்து அவரது பிறப்புச் சாட்சிப் பத்திரம் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தனர் அவரது அரசியல் எதிரிகள். அவரது பிறப்புச் சாட்சியம் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. பின்னர் பின் லாடன் எங்கே என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மே இரண்டாம் திகதி பின் லாடன் கொல்லப்பட்டார். இப்போது கடன் நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் ஒபாமாவின் செல்வாக்கை சரித்து விட்டன. அமெரிக்க அரச செலவீனக் குறைப்பு மக்களுக்கான சுகாதார சேவையை பெரிதும் பாதிக்கும். இது ஒபாமாவின் தேர்தலுக்கு உகந்ததல்ல. ஒபாமா இப்போது தனது செல்வாக்கை உயர்த்த ஏதாவது செய்தே ஆகவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
2 comments:
உலக நிதிச் சந்தை பாதிக்கப்பட்டால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவது சீனப் பொருளாதாரமே. சீன அமெரிக்க அரச கடன் முறிகளில் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. மூன்று ரில்லியன் டொலர் கணக்கில் உலகில் உயரிய அந்நியச் செலவாணி உபரியைக் கொண்ட சீனா தனது வெளி நாட்டுச் சொத்துக்களை டொலரிலேயே வைத்துள்ளது. சீன தனது வெளிநாட்டுச் சொத்துக்களில் மூன்றில் இரு பங்கை அமெரிக்க டொலரிலேயே வைத்துள்ளது. useful info..
பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.
Post a Comment