லிபியாவின் மிசரட்டா நகரின் பிறந்தவரான அதியா அப் அல் ரஹ்மான் அல் கெய்தா இயக்கத்தின் பின் லாடன் கொலைக்குப் பின்னர் இரண்டாம் தலைவராகக் கருதப்படுபவர். இவரை அமெரிக்கா கொன்றுவிட்டதாக அறிவித்துள்ளது. எந்த நாள் எந்த விதமாகக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. இவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் குண்டு வீசிக் கொன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாக்கிஸ்தானின் அரச கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் உள்ள வஜிரிஸ்த்தான் என்னும் இடத்தில் இவர் 22-ம் திகதி திங்கட்கிழமை கொல்லப்பட்டார். ஆனல் இது தொடர்பான செய்தி சனிக்கிழமையே வெளிவிடப்பட்டது.
அதியா அப் அல் ரஹ்மான் பற்றிய தகவல்கள்:
- இவரது இயற்பெயர் ஜமால் இப்ராஹிம் இஸ்தாவி
- லிபிய மிசரட்டா நகரில் பிறந்தவர். அங்கு பொறியியலில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்
- 1988இல் ஆப்கானித்தானில் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் இணைந்தவர்.
- சிறந்த பேச்சாளரும் சிந்தனையாளரும்.
- சிறந்த அமைப்பாளரும் நிர்வாகியும்
- அல் கெய்தாவின் உயர் மட்டத்திற்கும் செயல் வீரர்களுக்கும் இடையில் தொடர்பாளராகச் செயற்பட்டவர்.
- பல நாடுகளின் அல் கெய்தாவின் செயற்பாடுகளில் ஈடுபட்ட அனுபவம் மிக்கவர்.
- தங்கு தடையின்றி ஈரானுக்குள் நுழையவும் வெளியேறவும் இவரால் முடியும்.
- அல் கெய்தாவின் பல செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.
- அமெரிக்கா பின் லாடனின் மாளிகையில் கைப்பற்றிய கணனிப்பதிவேடுகளின் படி அல் கெய்தா இவரில் நிறையத் தங்கி இருந்தது.
பின் லாடனுடன் அதியா அப் அல் ரஹ்மான் |
பின் லாடன் கொலைக்குப் பின்னர் அல் கெய்தா இயக்கம் அதற்கான பழியை இன்னும் தீர்த்துக் கொள்ளவில்லை. பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறதா அல்லது பெரிய தாக்குதல் எதுவும் செய்ய முடியாது என்று இருக்கிறாதா என்பது தெரியவில்லை.
ஜூலை மாதம் பாக்கிஸ்த்தான் சென்ற அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலரும் பின் லாடன் கொலையின் போது அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இன் தலைமைப்பதவியில் இருந்தவருமான லியோன் பாணெற் அல் கெய்தாவை ஒழித்துக் கட்டும் வாய்ப்பு இப்போது கைக்கு எட்டிவிட்டது என்றார்.
ஆனால் அதியா அப் அல் ரஹ்மானைப் போல் இன்னும் இருபது அல் கெய்தாத் தலைவர்கள் இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment