Tuesday, 12 July 2011

முச்சந்தியில் மூச்சடக்கி நிற்கும் பாக்கிஸ்த்தான்


பாக்கிஸ்த்தானின் படைத்துறைக்கும் அங்குள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கும் தொடர்பு உண்டு என்று எழுதிய ஊடகர் சலீம் சஹ்ஜாட் கொல்லப்பட்டமை தொடர்பாக அமெரிக்கப் படைத்துறை அதிகாரி சலீம் சஹ்ஜாட்டின் கொலைக்கும் பாக்கிஸ்த்தானிய உளவுத் துறைக்கு சம்பந்தம் உண்டு என்று தெரிவித்த கருத்து அமெரிக்க-பாக் உறவை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

சலீம் சஹ்ஜாட் Asia Times Onlineஇல் பாக் உளவுத்துறையினருக்கும் தீவிர வாத அமைப்புக்களுக்கும் இடையினால தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் கடத்தப்பட்டு கொடூரமாக் கொல்லப்பட்டார். அவர் மீது விழுந்த அடிகள் அவர் விலா எழும்புகளை முறித்து ஈரலைக் கிழித்திருந்தன. அமெரிக்க கடற்படையின் Admiral Mike Mullen பாக்கிஸ்தானின் ISI எனப்படும் Inter-Service Intelligenceமீது வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் நாடுகளுக்கிடையிலான வரம்புகளை மீறி குற்றம் சுமத்தியது பாக் அரசை ஆத்திரமடையச் செய்துள்ளது. இது தொடர்பாக "The torture and murder “was sanctioned by the government,” Adm. Mullen told the Pentagon Press Association at an on-the-record luncheon, although he said he had no evidence trail that implicated the ISI. As a veteran Beltway warrior, there can be no doubt Adm. Mullen knew exactly the sort of diplomatic damage his bombshell would cause." என்று ஒரு ஊடகம் கருத்துத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அட்மிரல் அத்துடன் நிற்கவில்லை இந்த மாதிரியான கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன என்றார்.

ஏற்கனவே ஒரு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயின் முகவர் Raymond Davis பாக்கிஸ்த்தானிய மண்ணில் வைத்து ஒரு பாக்கிஸ்தானியரை சுட்டுக் கொன்றமை, அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பாக்கிஸ்தானிற்குள் அத்து மீறிப் பிரவேசித்து பின்லாடனைக் கொன்றமை, அமெரிக்க ஆளில்லா விமானங்கள் அடிக்கடி பாக்கிஸ்த்தானிற்குள் புகுந்து அடிக்கடி தாக்குதல் செய்பவை போன்றவற்றால் பாக்கிஸ்தானிய அரசு தனது மக்கள் முன் தலை குனிந்து நிற்கிறது.

அமெரிக்க அட்மிரலின் கருத்தும் பாக்கிஸ்த்தானுக்கான தனது உதவிகளை இடை நிறுத்தப் போவதாக அமெரிக்கா 10/07/2011இலன்று விடுத்த அறிக்கையும் அமெரிக்க-பாக் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது. 11/09/2001இல் அமெரிக்க இரட்டைக் கோபுரங்களின் மீதான தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து வளர்ந்து வந்த அமெரிக்க-பாக் உறவு 02/05/2011இல் அத்தாக்குதலின் காரணகர்தா பின் லாடனைக் கொன்றதைத் தொடர்ந்து மோசமடையத் தொடங்கியது. சிஐஏயின் முகவர் Raymond Davis பாக்கிஸ்த்தானிய மண்ணில் வைத்து ஒரு பாக்கிஸ்தானியரை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தான் தனது நாட்டில் தனது படையினருக்குப் பயிற்ச்சி வழங்கிக் கொண்டிருந்த  பல அமெரிக்கப் படையினரை வெளியேற்றியது. பின் லாடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் லாடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணனிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து பாக் படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும்இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. அவற்றின் அடிப்படையில் பாக்கிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

ஹிலரி கிளிண்டனின் பாக்கிஸ்தானியப் பயணம்
மே 2இல் பின் லாடன் கொல்லப்பட்ட சில வாரங்களுக்குள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டன் பாக்கிஸ்தானிற்கு ஒரு சடுதியான பயணம் மேற்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாக்கிஸ்தானிடம் ஹிலரியால் கையளிக்கப் பட்டது. பின் லாடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல் கெய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருக்கின்றனர். இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பாக்கிஸ்த்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி இந்த ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றும் அப்போது கருதப்பட்டது அந்த உதவி இப்போது இடை நிறுத்தப் பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான பாக்கிஸ்த்தானின் எல்லைக்குள் ஒரு இலட்சம் அமெரிக்கப் படையினர் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பாக்கிஸ்த்தனிற்கு அமெரிக்கா கொடுக்கும் கைக்கூலியே பலமில்லியன் டாலர்கள் உதவி. அந்த உதவி இடைநிறுத்தப் படுவது பாக்கிஸ்தானியப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலரும் முன்னாள் சிஐஏ இயக்குனருமான லியோன் பானெற்றா "அமெரிக்க பாக்கிஸ்த்தான் உறவு ஒரு மோசமான சவால். தேவையான உறவு. இருந்தும் மிகச்சிக்கலானதும் மிக ஏமாற்றமளிப்பதாகவும் இருக்கிறது.

பாக் பதிலடி
அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்தினால் தாம் தமது படைகளை ஆப்க்கனிஸ்த்தான் எல்லைகளில் இருந்து விலக்க வேண்டி வரும் என்று பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் அஹமட் முக்தார் அமெரிக்காவை 12-07-2011இலன்று மிரட்டினார். ஆனால் பாக் பாதுகாப்புத் துறை அமைச்சரிலும் பார்க்க படைத்துறைத் தளபதிகள் அதிக அதிகாரம் உள்ளவர்கள். இன்று (12-07-2011) பாக்கிஸ்த்தானுக்குள் வந்து தாக்கிய 3 ஏவுகணைகள் பல தீவிரவாதிகளைக் கொன்றன. இவை ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள அமெரிக்கப் படைகளால் ஏவப்பட்டிருக்கலாம்.



சீனாவின் பக்கம் பாக்கிஸ்த்தான் திரும்புமா?
பாக்கிஸ்த்தானின் தென் கிழக்கு மூலை மோசமான் எதிரியாகிய இந்தியாவைக் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தானியாவிற்கு பாதகமில்லா மூலை வட கிழக்கு மூலையே. பாக்கிஸ்தானிய மக்களில் 87%மானோர் சீனாவுடன் சிறந்த உறவைப்பேணுவதை விரும்புகிறார்கள். 12%மானவர்கள் மட்டுமே அமெரிக்காவுடன் சிறந்த உறவை விரும்புகின்றனர். சீன வர்த்தக ரீதியில் பாக்கிஸ்தானைச் சுரண்ட விரும்புகிறது.  சீனாவின் முத்து மாலைத் திட்டத்தில் பாக்கிஸ்தானிய குவாடர் துறைமுகமும் ஒன்று. அது கட்டி முடிக்கப்பட்டபின்னர் அப்பிரதேசம் அடுத்த துபாயாக மாறும் என்று அப்போதைய பாக்கிஸ்த்தனிய அதிபர் பார்வஸ் முஸரஃப் தெரிவித்தார். குவாடர் துறைமுகாம் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது. எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. அது பிரச்சனைக்குரிய பாலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் அமைந்தமையே இதற்கான காரணங்களில் முக்கியமானது. குவாடரில் ஒரு கடற்படையை அமைக்கும் படி பாக்கிஸ்தான் சீனாவை வேண்டியது சீனா அதை மறுத்துவிட்டது.சீனாவிற்கு இப்போது குவாடர் துறைமுகம் வர்த்தக நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தும் எண்ணம் மட்டும்தான் உண்டு. ஆனால் வருங்காலத்தில் இந்தியாவிற்கு எதிரான தேவை ஏற்படின் அது படைத்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தும். குவாடர் துறைமுகத்தை தனது ஹரக்ஹோரம் நெடுஞ்சாலையுடன் இணைத்த திட்டம் சீனாவிற்கு எதிர்பார்த வர்தக இலாபத்தைக் கொடுக்கவில்லை. சீனாவின் பூகோள அரசியலிற்கும் படைத்துறை உபாயங்களுக்க்கும் பாக்கிஸ்த்தான் முக்கியமானது. ஆனால் இப்போது அமெரிக்காவுடன் பாக்கிஸ்த்தானில் ஒரு ஆதிக்கப் போட்டிக்கு சீனா தயாரில்லை.

இசுலாமியத் தீவிரவாதம்
பாக்கிஸ்த்தான் அமெரிகாவிற்கு ஆதரவாகச் செயற்படுகிறது அது இசுலாமிய மார்கத்திற்கு எதிரானது என்ற உணர்வு பாக்கிஸ்தானில் வளர்வதைப் பாக் அரசு விரும்பவில்லை. அமெரிக்கா விரும்புவது போல் தனது படைத்துறையிலும் உளவுத்துறையிலும் உள்ள இசுலாமியத் தீவிரவாத இயக்க ஆதரவாளர்களைக் களையெடுத்தால் பாக்கிஸ்த்தானிய இசுலாமியத் தீவிரவாதம் பாக் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பெரும் அச்சுறுத்தாலாக அமையும்.

மூன்று தலைக் கொள்ளி எறும்பு.
ஒரு புறம் அமெரிக்கா மறுபுறம் சீனா உள்ளே இசுலாமியத் தீவிரவாதம் இந்த மூன்றுக்கும் நடுவில் வேகமாக வளரும் எதிரி இந்தியா. பாக்கிஸ்தான் அமெரிக்க வேண்டுதலான இசுலாமியத் திவிரவாதிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கையை நிராகரித்து சீன பக்கம் சார்வதா? ஒரு அமெரிக்க கைகூலி நாடாக செயற்படுவதா? இரண்டையும் விடுத்து நாட்டை இசுலாமியத் தீவிரவாதிகளிடம் பறி கொடுப்பதா? மூன்றாம் தெரிவை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்றும் விரும்பாது.

3 comments:

Unknown said...

பதிவு அருமை

Anonymous said...

LTTE ஐ ஆதரிக்கும் நீங்கள் ஏன் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை??

Anonymous said...

இரண்டுமே ஒன்றல்ல

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...