Sunday 3 July 2011

நகைச்சுவைக் கதை: இறுதி ஆசையாக ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்


அவர் எண்பது வயதான செல்வந்தர். சிலதினங்களில் இறந்து விடுவீர்கள் உங்கள் இறுதி ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறிய அவரது குடும்ப மருத்துவர் உங்கள் கணக்காளரையும் சட்டவாளரையும் அழைத்து ஆக வேண்டியவற்றைப் பாருங்கள் என்றும் வேண்டினார். ஆம் என்று தலையாட்டிய செல்வந்தர் மருத்துவருடன் கணக்காளரையும் சட்டவாளரையும் அழைத்து தனக்கு என்ன விலை கொடுத்தாவது ஒரு மருத்துவர் பட்டம், ஒரு கணக்காளர் பட்டம், ஒரு சட்டவாளர் பட்டம் வேண்டும் என்று வேண்டினார். அவர் விருப்பம் மூவராலும் மிகைப்படுத்தப் பட்ட விலைகளுடன் நிறைவேற்றப்பட்டது.

செல்வந்தரின் வாழ்வின் இறுதிக்கட்டம். மருத்துவப்பட்டம், சட்டவாளர் பட்டம், கணக்காளர் பட்டம் ஆகியவற்றிற்கான சான்றிதழ்கள் மூன்றையும் கையில் வைத்துத் தடவியபடியே முகத்தில் ஒரு திருப்தியுடன் காணப்பட்டார் அந்தச் செல்வந்தர். அதைப் பார்த்த மருத்துவருக்கும் சட்டவாளர்க்கும் கணக்காளருக்கும் ஆச்சரியம். இதில் என்ன அப்படி ஒரு திருப்தி என்று அவர்கள் அச்செல்லவந்தரிடம் ஆச்சரியத்துடன் கேட்டனர். "என்னை வாழ் நாள் முழுவதும் ஏமாற்றியவர்கள் இம்மூன்று வகையினரும். எனது இறப்பில் என்னுடன் சேர்ந்து அவர்களில் மூவர் இறக்கிறார்கள் என்பது எனக்குப் பெரிய திருப்தி" என்றார்.

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

nice

ப.கந்தசாமி said...

அப்படி அந்த மூணு பேரும் ஏமாத்தியும் சாகும்போது அவர் செல்வந்தராக இருந்தது பெரும் விந்தையே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...