Saturday, 4 June 2011

அல் கெய்தா முறைப்படி குண்டுக் கேக் தாயாரிக்கும் முறை


சுவையான குண்டுக் கேக் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ள அல் கெய்தாவின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். அல் கெய்தா திவிர வாத இயக்கம் ஒரு புனிதப் போருக்கான இன்ஸ்பையர் என்னும் பெயரில்இணையச் சஞ்சிகை(jihadist magazine "Inspire") ஒன்றை நடாத்தி வருகிறது. இதில் புனிதப் போரைப் பற்றி அறியப் போனவர்களுக்கு ஒரு ஆச்சரியம். அங்கு சுவையான கப் கேக் செய்யும் முறை பற்றி விளக்கம் கொடுக்கப் பட்டிருந்தது.

இன்ஸ்பையர் இணையத்தில் குண்டுகள் செய்யும் முறை பற்றி விளக்கப் பட்டிருந்தது. இதன் ஆபத்தை உணர்ந்த பிரித்தானிய உளவுத் துறையினர் அந்த இணையத் தளத்தை ஊடுருவல் செய்து குண்டு செய்யும் முறையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கப் கேக் செய்யும் முறைபற்றிய தகவல்களைப் பதிவு செய்து விட்டனர்.

இணையவெளிப் போர் இனிவரும் காலங்களில் அதிகரிக்கும் என்று இதிலிருந்து தெரிகிறது. இணையவெளிப் போர் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பைப் பார்க்கவும்:
இணையவெளிப் போர்

அமெரிக்காவில் இயங்கும் அல் கெய்தா இயக்கப் பிரிவுத் தலைவர் அடம் கதான் தங்கள் ஆதரவாளர்களுக்கு விடுத்த வேண்டு கோளில் தனிப்பட்ட முறையில் அவர்களை புனிதப் போரில் ஈடுபடும்படி கூறியுள்ளது.

பின் லாடனைக் கொல்லச் சென்ற அமெரிக்க சீல் படையினர் பின் லாடனின் மாளிகையில் இருந்து பெருமளவு கணனிப் பதிவுகளை எடுத்துச் சென்றனர். இது அல் கெய்தாவிற்கு பெரும்பின்னடைவை ஏற்படுத்தும். நேற்று முன் தினம் பாக்கிஸ்த்தான் எல்லையில் இலியாஸ் கஷ்மீரி என்ற பெயருடைய அல் கெய்தாவின் முக்கிய தளபதியை அமெரிக்கப் படையினர் கொன்றனர். இலியாஸ் கஷ்மீரி பின் லாடனுக்குப் பின் அல் கெய்தாவிற்கு தலமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. பின் லாடன் கொலைக்குப் பின்னர் அல் கெய்தாவிற்கு ஏற்பட்ட பெரிய இழப்பு இது என்று சொல்லப்படுகிறது.

மேற்குலகத்திற்கும் இசுலாமியப் போராளிகளுக்கும் இடையிலான போர் இனி இணையவெளியிலும் உக்கிரமடையும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...