Saturday, 12 March 2011

விஞ்ஞானம்: மூன்று பெற்றோர்கள் பெறப்போகும் ஒரு குழந்தை.


பிரித்தானியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகம் ஒரு தந்தை இரு தாய்களுக்கு ஒரு குழந்தை பெறும் முறைமையைக் உருவாக்கியுள்ளது. சில பரம்பரைக் குறைபாடுகளுடன் பிள்ளைகள் பிறப்பதைத் தவிர்ப்பதற்கு இந்த Three Parent IVF எனப்படும் இம் முறைமை பெரிதும் உதவும் என்று பேராசிரியர் அலிஸன் மேர்டோக் நம்புகிறார்.

இப்படித்தான் செய்கிறார்கள்
குறைபாடு கொண்ட பரம்பரை அலகுள்ள தாயின்(பெண்-1) சூலை அவள் கணவனின் விந்துடன் இணைத்து முதலில் கருவை உருவாக்குகிறார்கள். அதிலுள்ள குறைபாடுள்ள DNAக்களை நீக்கி அதிலுள்ள பரம்பரை அலகுகளை ஆரோக்கியமான பரம்பரை அலகுள்ள இன்னோரு பெண்ணின்(பெண்-2) சூலுடன் இணைத்து இன்னொரு கரு உருவாக்கப்படும். பின்னர் புதிய கருவில் உள்ள பெண்-2இன் பரம்பரை அலகுகளை நீக்குகிறார்கள். இந்தக் கரு பெண்-1இன் கருப்பையில் செலுத்தப் படும். இதன் மூலம் பிறக்கும் குழந்தை பெண்-1இனதும் அவள் கணவனினதும் பரம்பரை அலகுகளையே கொண்டிருக்கும் ஆனால் பெண்-1இன் பரம்பரை நோயால பாதிக்கப்படமாட்டாது.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி தீராத நோய்கள் பரம்பரை பரம்பரையாகத் தொடர்வதை இந்த Three Parent IVF முறைமை தடுக்கும். அதிலும் முக்கியமாக மூளை, இருதயம், ஈரல் போன்றவற்றில் ஏற்படும் பரம்பரை நோய்களில் இருந்து பிள்ளைகள் விடுபடுவார்கள். பெற்றோர்களின் 98%மான DNAஐப் பிள்ளை கொண்டிருக்கும். பிள்ளையின் தோற்றம் குணம் போன்றவை பெற்றோரைப் போலவே இருக்கும்.

Three Parent IVFமுறைமைக்கு எதிர்ப்பும் உண்டு. மனித DNA எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று வாதிடுபவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகம் Three Parent IVFமுறைமைக்கான அரச அங்கீகாரத்தைக் கோரி நிற்கிறது. அரச அங்கீகாரம் கிடைத்ததும் இது ஒரு ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்தப் படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...