Friday, 4 March 2011
கடாபியுடனான தொடர்பால் தலை கவிழ்ந்த இலண்டன் பல்கலைக் கழகம்.
எகிப்தின் முன்னாள் அதிபர்கள் அன்வர் சதாத்தும் ஹொஸ்னி முபராக்கும் மேற்கத்திய சார்பானவர்களாக மாற்றப்பட்டவர்கள். அன்வர் சதாத் துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர். இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்த ஒரே ஒரு அரவு நாடு எகிப்துத்தான். எகிப்த்து ஒரு மேற்குலக சார்பு நாடாக இருப்பதை உறுதி செய்ய எகிப்தியப் படைவீரர்கள் பலருக்கு அமெரிக்காவில் பயிற்ச்சி அளிக்கப்பட்டது.
லிபியத் தலைவர் கடாபியை ஒரு மேற்கத்திய சார்பாளராக மாற்ற பல சதிகள் திரை மறைவில் நடந்தன. கடாபி வித்தியாசமான பேர்வழி தனது படைவீரர்களுக்கு அவர் பயிற்ச்சி அளிப்பது குறைவு. தன்னையே கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சம். இதற்காக அவர் மேற்குலகம் அவரை இந்தப்பாணியில் அணுகிய போது அவர் வேறு விதமாக செயற்பட்டார். தனது மகன் சயிf அல் இஸ்லாமிற்கு London School of Economics கல்வி பயில ஏற்பாடு செய்தார். சயிf கடாபி London School of Economicsஇல் "பயின்று" கலாநிதிப்பட்டமும் பெற்றார். சயிf கடாபி ஒரு மேற்கத்திய ஆதரவாளராக உருவெடுப்பார் என்று அமெரிக்க பிரித்தானியக் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பினார்கள். சயிf கடாபி லிபியாவில் மேற்குலக அரசு பாணிச் சீர்திருத்தங்களை செய்வார் என்றும் நம்பினர். ஆனால் கடாபி தனது மகனையே நம்பவில்லை. சயிf கடாபி தன்னைக் காவிழ்க்கலாம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. அதனால் தனது மற்ற மகனாகிய முத்தாசிம் கடாபியை ஒரு தீவிர மேற்குலக எதிர்ப்பாளராக உருவாக்கி அவரையே படைத்துறைக்கும் பொறுப்பாக்கினார். ஆனால் லிபியாவில் மக்கள் எழுச்சி தொடங்கிய பின் சயிf கடாபி ஆற்றிய உரை அவரும் லிபியாவில் ஆட்சி முறை மாற்றத்தை வெறுப்பவர் என்றும் தந்தையின் ஆட்சி முறையையே அவர் நம்புகிறார் என்றும் சுட்டிக்காட்டியது. இவரை London School of Economics சரியாக மூளைச் சலவை செய்யவில்லையா என்ற கேள்வி எழுந்து விட்டது. உலகப் பிரசித்த பெற்ற பல்கலைக் கழகங்களுள் London School of Economicsஉம் ஒன்று. இதற்கு சயிf கடாபி கலாநிதிப் பட்டம் பெற்றபின் ஒன்றரை மில்லியன் பவுண்கள் இனாமாக லிபியாவில் இருந்து கிடைத்தது. அது மட்டுமல்ல 2.2மில்லியன் பவுண்கள் பெறுமதியான ஒப்பத்தம் ஒன்றை லிபிய அரசும் London School of Economicsஉம் செய்து கொண்டன. அதன்படி லிபிய அரச அதிகாரிகளுக்கு London School of Economics பயிற்ச்சி வழங்கும். அதுவும் மூளைச் சலவைதான். அந்தச் சலவையும் வேலை செய்யவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
லிபிய அரசுடன் London School of Economicsக்கு இருக்கும் தொடர்புகள் இப்போது அம்பலப் படுத்தப் பட்டு இப்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. London School of Economicsஇன் இயக்குனர் ஹாவார்ட் டேவிஸ் லிபிய அரசிற்கு பொருளாதார ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார். இந்தத் தொடர்புகளால் London School of Economicsஇன் இயக்குனர் ஹாவார்ட் டேவிஸ் பதவி விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவிடம் இருந்து இனாமாகப் பணம் பெற்றமையும் London School of Economicsஇன் இயக்குனராக இருந்து கொண்டு லிபிய அரசின் ஆலோசகராகவும் செயற்பட்டமை தனது தவறு என்கிறார் ஹாவார்ட் டேவிஸ்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment