Thursday, 10 March 2011
உலகப் பணக்காரர் பட்டியலில் பில் கேட் 2-ம் இடம் அம்பானி 9-ம் இடம்
Forbes சஞ்சிகை உலகச் செல்வந்தர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் மெக்சிக்கோவைச் சேர்ந்த கார்லோஸ் சிலிம் ஹெலு இம்முறையும் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 74பில்லியன் அமெரிக்க டொலர்கள். சென்ற ஆண்டு இவரது சொத்து மதிப்பு 53.5பில்லியன் டொலர்கள். இதன்படி இவரது சொத்து 38% அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டு அதிக சொத்து சேர்த்தவரும் இவரே. பொருளாதாரப் பிரச்சனை உனக்கும் எனக்கும் தாண்டா தம்பி!!
Microsoft இன் பில் கேட்ஸ் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார். இவரது சொத்து மதிப்பு 53பில்லியன் டொலர்களில் இருந்து 56 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
முதல் பத்து செல்வந்தர்களி இருவர் இந்தியர்
BRIC நாடுகள் எனப்படும் சனத் தொகை மிகுந்த நாடுகளான பிரேசில், இரசியா, இந்தியா, சீன ஆகிய நாடுகளில் இருந்து பல செல்வந்தர்கள் உருவாகி வருகிறார்கள். ஆனால் முதல் பத்து செல்வந்தர்களில் சீனர் எவரும் இல்லை. இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு 25 பில்லியன் டொலர்களுடன் நாலாம் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி இந்த ஆண்டு 23 பில்லியன்களுடன் 9-ம் இடத்திற்கு இறங்கியுள்ளார். சென்ற ஆண்டு 28 பில்லியன்களுடன் 5-ம் இடத்தில் இருந்த லக்ஷ்மி மிட்டல் இந்த ஆண்டு 31.1 பில்லியன்களுடன் 6-ம் இடத்தில் இருக்கிறார்.
பில்லியன் டொலர் சொத்துள்ளவர்கள்
பிராந்திய ரீதியில் ஐக்கிய அமெரிக்கா அதிக பில்லியன் டொலருக்கு மேல் சொத்துக் கொண்ட நாடாக இருக்கிறது.
ஐக்கிய அமெரிக்கா 413
மற்ற அமெரிக்கா 76
ஐரோப்பியா 300
ஆசிய பசுபிக் 332
ஆபிரிக்கா ம/கிழக்கு 89
அதிக செல்வந்தர்களைக் கொண்ட நகரமாக மொஸ்க்கோ திகழ்கிறது.
இரசியாவில் 101 பில்லியன் சொத்துக்கு மேல் உள்ளவர்கள் இருக்கிறார்கள். சினாவில் இத்தொகை 115.
Facebook நிறுவுனர் Mark Zuckerberg
Facebook நிறுவுனர்களில் ஒருவரான Mark Zuckerberg இந்த ஆண்டு பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் உலகப் பணக்காரர் பட்டியலில் 52-ம் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 13.5பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"
அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.
Post a Comment