Monday, 28 February 2011

கடாபி பற்றிய நகைச்சுவைகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றம் வேண்டுமென்று மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். தமக்குத் தாமே தீ மூட்டுகிறார்கள். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு ஒரு ஆலோசனை: நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி மக்கள் மாற்றம் வேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள். உங்கள் நாட்டிலுள்ள மக்களைக் விரட்டி விட்டு தென் இந்தியாவிலும் வட கிழக்கு இலங்கையிலும் உள்ளது போல் சொரணையற்ற மக்கள் உங்களுக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள். உங்கள் போராட்டத்தின் உச்சக் கட்டமாக மும்மர் கடாபியை உயிரோடு கொழுத்துங்கள். 

கடாபிக்குத் இப்போது அவசியம் தேவையானவை. 
இரு வார்த்தைகள்: Diplomatic immunity (அரசதந்திரிகளுக்குரிய பாதுகாப்பு). 
இரு கருவிகள்: ஐ-போன்(புரட்சி எதிர்ப்பு Application) காலப் பயண இயந்திரம்(Time Travel machine) ஒரு 30 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல. 
இரு குழுக்கள்: நல்ல ஆடை வடிவமைப்பாளர்கள் ( அவர் இப்போது அணியும் மோசமான ஆடைகள்தான் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம்) பாதுகாப்பிற்கு இத்தாலியப் பிரதம மந்திரியின் இளம் காதலிகள். கடாபிக்கு பெண் பாதுகாவலர்கள் மீதுதான் நம்பிக்கை. இவை எதுவும் கைகூடாதவிடத்து இருபொருட்கள்: ஒரு போத்தலும் ஒரு நாயும். தேவதாஸ் போல். இரசியாவின் கிரெம்ளினைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உயர் அதிகாரி மும்மர் கடாபியை வாழும் பிணம் என்று வர்ணித்தார். கடாபி இறுதியில் தற்கொலை செய்து கொள்வார் என்று சொல்கிறார்கள். நான் நினைக்கிறேன் கடாபி கடைசியில் தன்னிடம் உள்ள பழைய சோவியத் ஒன்றிய விமானத்தில் தப்பி ஓடும் போது விமானம் பழுதடைந்து விழுந்து இறப்பார். 

கடாபி சொன்ன நகைச்சுவைகள்: 1. இந்தப் பூமிப்பந்தில் லிபியாவில் மட்டும்தான் மக்களாட்சி நிலவுகிறது. 2. நான் லிபியாவின் அதிபர் அல்ல நான் வெறும் லிபியப் புரட்ச்சியின் நாயகன் மட்டுமே. 3. "They love me. All my people with me, they love me," he said. "They will die to protect me, my people."  

கடாபி ஐபோன்களுக்குத் தேவையான அப்பிளிக்கேசன்கள்போல லிபியர்களுக்குத் தேவையானவை: "Top 10 iRevolt apps and innovations" 
10. iMob. 
 9. iRule. 
 8. facebook Coup. 
 7. Social Political Networking . 
 6. idemocracy. 
 5. iOverthrow. 
4 . iTweet-YouTube-WeAllMeetForIRevolt. 
 3. iRevolt. 
 2. iProtest. ... and the #
1 iRevolt yet toinvented is: 1. iLike-Freedom.  

கடாபி பற்றி உண்மையான ஒரு தகவல்: கடாபி 2009 செப்டம்பர் 26-ம் திகதி ஐநா சபையில் உரையாற்றும் போது அவரது மொழிபெயர்ப்பாளர் மயங்கி விழுந்தார். அவர் மயங்கி விழ முன் கூறிய வசனம்: "I just can't take it any more." என்னால் இனியும் தாங்க முடியாது. 

1 comment:

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...