Tuesday, 15 February 2011
எஸ் எம் கிருஷ்ணாவின் மொக்கை: ஐநாவில் கப்பலேறிய இந்தியாவின் மானம்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றி இந்தியாவையும் ஒரு வல்லரசாக்கும் எண்ணத்துடன் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபையிலும் அவர் பங்கு பற்று உரையாற்றுவது அவரது பயணத்தின் நோக்கம்.
ஐக்கிய நாடுகள் சபையில் பெருமை மிகு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா உரையாற்றுகிறார் அதாவது சில காகிதங்களை வைத்து வாசிக்கிறார். அங்கு அவர் ஆற்றும் முதலாவது உரை. அவரது உரை போர்த்துகீசியா சம்பந்தமாகப் போய் கொண்டிருக்கிறது. அவர் சுமார் மூன்று நிமிடங்கள் உரையாற்றுகிறார். திடீரென்று ஐநாவிற்கான இந்தியப் பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி எஸ் எம் கிருஷ்ணாவிடம் சென்று வேறு காகிதங்களைக் கொடுத்து முதலில் இருந்து மீண்டும் தொடங்கவும் என்று கூறுகிறார். இப்போது எஸ் எம் கிருஷ்ணா மஹாத்மா காந்தியின் வாசகத்துடன் தனது உரையை வாசிக்கிறார்.
நடந்தது இதுதான்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஒருவர் ஆற்றும் உரையை அச்சடித்து மற்ற உறுப்பினர்களுக்கு வழ்ங்குவார்கள். போர்த்துக்கீசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஆற்றிய உரை அப்படி வழங்கப்பட்டபோது அது எஸ் எம் கிருஷ்ணா உரையாற்ற வைத்திருந்த காகிதங்களுக்கு மேல் வைக்கப்பட்டது. உரையாற்ற அழைக்கப்பட்ட போது எஸ் எம் கிருஷ்ணா தன்முன்னால் இருந்த காகிதங்களை எடுத்துச் சென்று மேல் உள்ள காகிதத்தை வாசிக்கத் தொடங்கிவிட்டார். அது போர்துக்கீசிய உரை என்பதை அறியாமல். இங்கு கேள்வி என்னவென்றால் ஏன் அல்லது ஹர்தீப் சிங் பூரி அந்த உரை வேறு என்பதை உணர மூன்று நிமிடம் எடுத்தது. ஹர்தீப் சிங் பூரி சொல்லியிருக்காவிட்டால் எஸ் எம் கிருஷ்ணா முழுவதையும் வாசித்திருப்பாரா? தான் என்ன பேசப்போகிறேன் என்று அறியாமல் எஸ் எம் கிருஷ்ணா வெறும் வாசிப்பாளராக மட்டும் அங்கு சென்றாரா? உரைத் தயாரிப்பில் அவர் எந்தப் பங்கும் வகிக்கவில்லையா? இங்கு இரு போர்த்துக்கீசிய மொழி பேசும் நாடுகள் இருப்பதையிட்டு நான் பெருமை அடைகிறேன் என்று அவர் வாசிக்கும் போது(On a more personal note, allow me to express my profound satisfaction regarding the happy coincidence of having two members of the Portuguese Speaking Countries (CPLP), Brazil and Portugal, together here today,") அவர் ஏன் இது தனது உரை என உணரவில்லை? அல்லது அவர் மது போதையில் இருந்தாரா?
கிருஷ்ணா உரையாற்றமுன் போர்த்துக்கீசிய அமைச்சர் உரையாற்றியிருந்தார். அவர் பேசியதை கிருஷ்ணா காதில் வாங்கவில்லையா?
பின்னர் இதுபற்றி கிருஷ்ணா தெரிவித்த கருத்து இன்னும் வேடிக்கையானது: "இதில் எந்தத் தவறும் இல்லை. என்முன் பல பல காகிதங்கள் இருந்தன, தவறுதலாக பிழையான உரையை எடுக்கப்பட்டுவிட்டது." There was nothing wrong in it. There were so many papers spread in front of me so by mistake the wrong speech was taken out.
இப்படிப்பட்டவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்குமிடத்து இன்னும் எத்தனை மீனவர்களையும் இலங்கைக் கடற்படை கொல்லலாம்.
கிருணாவின் மொக்கையை காணொளியில் கீழுள்ள இணைப்பில் காணலாம்.
இரண்டு மணிதியாலமும் ஐம்பத்தைந்து நிமிடமும் கொண்ட இந்தக் காணொளியில் அவரது மொக்கை உரை 1-08 இல் ஆரம்பமாகிறது. கீழே சொடுக்கவும்.
ஐநாவில் இந்திய மொக்கை
இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொல்ல உதவிய இந்தியாவிற்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்.
பாக்கிஸ்த்தானிய பதுகாப்புத்துறை இணையம் இப்படிக்கிண்டலடித்தது:
"Maybe Portugal has outsourced its speech to Bangalore," read one message on social networking site.
பிரித்தானியப் பத்திரிகை வாசகர் இப்படிக் கூறினார்:
Reading another delegate's speech and not realising it after 3-minutes shows that Krishna didn't have a read through beforehand, never wrote it himself and would read anything put in front of him. Just another UN representative who is coasting through to the end of the month when they get their massive pay cheque.
இன்னொருவர் கருத்து:
India's political show is run by bureaucrats,civil servants. Politicians are only fighting when in the government for minister posts and influential portfolios, so they can earn lots of monies for their children and family. (இங்கு இவர் சின்ன வீடுகளை விட்டிட்டார்.)
ஐநா சபையில் நீண்ட நேர உரை யாற்றிய பெருமை இந்தியாவின் வி கே கிருஷ்னமெனனுக்கு உண்டு. 23-01-1957இல் 7மணித்தியாலம் 48 நிமிடம் உரையாற்றிய பின்னர் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் மீண்டும் வந்து உரையாற்றினார் மேலும் ஒரு மணித்தியாலம்.
பாது காப்புச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்.
பாது காப்புச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் தேடிச் சென்றவர் ஐநாவின் சரித்திரத்தில் ஒரு மொக்கை உரையாற்றிய பெருமையை நிரந்தரமாகப் பெற்றுக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
8 comments:
இந்தியாவிற்கு மானம் இருந்தால்தானே கப்பல் ஏறுவதற்கு. இந்தியாவின் மானத்தை ஏற்கனவே சிங்களவன் பாக்குநீரிணையில் முற்றாக மூழ்கடித்துவிட்டான்.
ஏற்கனவே இந்தியாவின் மானத்தை விஜய் நம்பியார் கப்பலேற்றி விட்டான்
பிள்ளையார் சுழி அல்லது ஸ்ரீஇராமஜெயம் எதுவும் எழுதி இருக்கவில்லையோ???/
unga velaya paarunga da.. unga aalu rajapaksay va neengaley viratureenga london la.. avan ungalaye suduraan ,,bomb vaikkiraan
இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் அணு ஆயுதப் போர் நடந்தால் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பாக்கிஸ்தானில் போடவேண்டிய குண்டைத் தமிழ் நாட்டில் போடும்படி உத்தரவுட்டுத் தொலைக்கப் போகிறான்.
shame, he must resign
இத்தாலியள் ஆட்சியில் இதெல்லாம் சாதாரண நிகழ்வு...
இவர் தவறை ஒப்புக் கொள்ளவுமில்லை. இது ஒரு சாதாரண நிகழ்வு என்று சொல்வது வேடிக்கையானது
Post a Comment