
பழைய நண்பர்களைத் தேடியறிந்து கொள்ளவும் புகைப்படங்களை நண்பர்களுடன பகிர்ந்து கொள்ளவும் என்று ஆரம்பிக்கப்பட்ட Facebook இப்போது உலகெங்கும் மிகப் பிரபலமடைந்துள்ளது.
தேடு பொறி வலைத்தளமான Googleஇனின் பிரபல்யத்தை சமூக வலைத்தளமான Facebook முந்திவிட்டது. 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலாக அமெரிக்காவில் எடுத்த கணிப்பின்படி மொத்த வலைப் பணங்களில் கூகிள் 7.2%ம் ஆனால் முகப்புத்தகம் 8.9%. ஆறு வருடங்களில் Facebook உலகின் சிறந்த வலைத்தளமாக மாறி விட்டது. தற்போது அரை பில்லியன் பாவனையாளர்களை Facebook கொண்டுள்ளது. Facebookஐ ஆரம்பித்த Mark Zuckerberg 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ரைம்ஸ் சஞ்சிகையால் தெரிந்தெடுக்க்ப்பட்டுள்ளார். அத்துடன் இவரை அடிப்படையாக வைத்து ஹொலிவூட் திரைப்படமும் எடுக்கப் படவிருக்கிறது.
வலைப் பாவனையாளர்கள் பலர் இப்போது தேடு பொறிகளைப் பாவிப்பதைத் தவிர்த்து தங்கள் நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளும் முறையைப் பின்பற்றுவதால் இப்போது Googleபாவனையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.
Facebookஇல் பாவனையாளர்கள் தொடர்பான தகவல்கள் திருடப்படுவதாக குறை கூறுவோரும் உண்டு. Facebook நீங்கள் பகிரங்கப் படுத்தும் உங்கள் மின்னஞ்சல் முகவரி தொடர்பாக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த முகவரியை நீங்கள் Facebookஇற்கு மட்டும் பாவிப்பது நல்லது. அல்லது இதற்கென்று உருவாக்கிய ஒரு மின்னஞ்சலை பவிப்பது நல்லது. உங்கள் உறைவிட விலாசத்தை பகிரங்கப்படுத்துவதையோ அல்லது உங்கள் அன்றாட நடவடிக்கை பற்றி Facebookஇல் பகிரங்கப் படுத்துவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விடுமுறையில் வேறு இடத்திற்கு செல்வதை Facebookஇல் பகிரங்கப் படுத்தினால் உங்கள் விட்டில் திருட்டுப் போகலாம். உங்கள் வங்கி நடவடிக்கைகளுக்கு நீங்கள் பாவிக்கும் மின்னஞ்சலை Facebookஇல் எந்தச் சந்தர்ப்பத்திலும் பகிரங்கப் படுத்தக் கூடாது.
1 comment:
Post a Comment