
சென்னைக்கு பயணம் செய்த இலங்கைத் தமிழர் கனகலிங்கம் அங்குள்ள பூம்புகார் கடைக்குச் சென்றார். அங்கு ஒரு ஐம்பொன்னில் செய்த எலியின் அழகிய சிலை ஒன்று விற்பனைகிருந்தது. அதன் விலை என்ன என்று ஆர்வத்துடன் வினவினார். அதன் விலை ஐந்து ரூபாக்கள் அதன் கதையின் விலை ஐயாயிரம் ரூபாக்கள் என்று பதிலளிக்கப் பட்டது. "இஞ்சை பாருங்கோ! எனக்கு உந்தக் கதை கிதை ஒண்டும்வேண்டாம். எலியை மட்டும் உந்த விலைக்குத் தாங்கோ!" என்றார் அந்த இலங்கைத்தமிழர். அப்படியே அவருக்கு அந்த எலியிலன் சிலை ஐந்து ரூபாக்களுக்கு விற்கப்பட்டது.

கனகலிங்கம் அந்த அந்தச் சிலை கையால் தடவியபடியே கடையில் இருந்து வெளியேறினார். என்ன ஆச்சரியம் அவரைத் தொடர்ந்து சுமார் நூறு எலிகள் அருகிலுள்ள சந்துக்களில் இருந்து அவரைத் தொடர்ந்தன.
கனகலிங்கத்திற்கு ஆச்சரியம் சற்று விரைவாக நடந்தார். இப்போது மேலும் சில நூறு எலிகள் அவரத் தொடர்ந்தன.
இப்போது கனகலிங்கம் ஓடத் தொடங்கினார். இப்போது ஆயிரக் கணக்கான எலிகள் அவரைத் தொடர்ந்தன.
இப்போது கனகலிங்கம் ஓர் ஆட்டோவில் ஏறி விரைந்தார். ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். இப்போது தமிழ் நாட்டில் உள்ள அத்தனை எலிகளும் அவர் பின்னால்!!!

கனகலிங்கம் ஆட்டோவை கூவம் நதிக்கு செல்லும்படி பணித்தார். கூவக்கரையில் நின்று கொண்டு மூக்கை பொத்தியபடி அந்த எலிச் சிலையை கூவத்துக்குள் வீசினார்.
இப்போது ஆச்சரியத்தின் உச்சக் கட்டம். அவர் பின்னால் வந்த அத்தனை எலிகளும் கூவத்துக்குள் பாய்ந்து இறந்து விட்டன.
இப்போது கனகலிங்கம் மீண்டும் பூம்புகாருக்குச் சென்றார். அவரைக் கண்டதும் அங்கு இப்போது எலியின் கதையை வாங்க வந்தீர்களா என்று கேட்டனர்.
"இல்லைத் தம்பி! அதே கதையோடை காங்கிரசுக்காரர் ஐம்பொன் சிலை உங்களிட்டை இருந்தா தாங்கோ. என்ன விலையெண்டாலும் தாறன்." என்றார் கனகலிங்கம்
1 comment:
கலக்கல் கதை
Post a Comment