அது ஒரு ஆறு மாடிக் கடை அங்கு மணமகன் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்தது. அங்கு ஒரு பெண் மணமகன் வாங்கச் சென்றாள். அங்கு மணமகன் வாங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டிருந்தன. மணமகன் வாங்க வருபவர் ஆறு மாடியில் ஒரு மாடிக்கு மட்டும் செல்ல முடியும். ஆறு மாடிகளிலும் மணமகன்கள் அவர்களின் தரவரிசைக்கு ஏற்ப ஒவ்வொரு மாடியிலும் விற்பனைக்கு உண்டு. கீழ் மாடியில் விற்கப் படுபவர்களின் தரத்திலும் பார்க்க மேல் மாடியில் இருக்கும் தரம் உயர்ந்தது.
மணமகன் வாங்கச் சென்ற பெண் முதலாம் மாடியில் எப்படிப் பட்ட ஆண்கள் இருக்கிறார்கள் என்று வினவினாள். முதலாம் மாடியில் நல்ல வேலையுள்ள ஆண்கள் இருக்கிறார்கள் என்று பதிலளிக்கப்பட்டது.
இரண்டாம் மாடியில் எப்படி என்று வினவினாள். இரண்டாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள ஆண்கள் என்று பதில் கூறப்பட்டது.
சரி இரண்டாம் மாடிக்கு போவோம் என்று கூறிய அப்பெண் திடீரென மனம் மாறி முன்றாம் மாடியில் எப்படி என்றாள். மூன்றாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள கட்டழகானஆண்கள் உள்ளனர் என்று பதில் கூறப்பட்டது.
சரி மூன்றாம் மாடிக்கு போவோம் என்று கூறிய அப்பெண் திடீரென மீண்டும் மனம் மாறி நாலாம் மாடியில் எப்படி என்றாள். நாலாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள வீட்டு வேலைகள் கச்சிதமாகச் செய்யக் கூடிய கட்டழகானஆண்கள் உள்ளனர் என்று பதில் கூறப்பட்டது. அப்பெண் மிக மகிழ்ச்சியடைந்து சரி சரி அங்குதான் கட்டாயம் போக வேண்டும் என்றாள்.
திடீரென மீண்டும் மனம் மாறி ஐந்தாம் மாடியில் எப்படி என்றாள். ஐந்தாம் மாடியில் நல்ல வேலையுள்ள குழந்தைகளைப் பராமரிக்கக் கூடிய திறனுள்ள வீட்டு வேலைகள் கச்சிதமாகச் செய்யக் கூடிய கட்டழகான காதல் மன்னர்கள் உள்ளனர் என்று பதில் கூறப்பட்டது.
ஐய்யோ! ஐய்யோ!! எனக்கு கட்டாயம் அப்படி ஒருவன் தான் தேவை என்று துள்ளிக் குதித்த பெண் ஆறாம் மாடியில் இன்னும் நல்ல ஆண்கள் இருப்பார்களே அது எப்படி என்று பரபரப்ப்புடன் கேட்டாள். அது அங்கு போய்ப் பார்த்தால்தான் தெரியும் என்று பதில் கூறப்பட்டது.
அந்தப் பெண் பாய்ந்து கொண்டு ஆறாம் மாடிக்கு ஓடினாள். அங்கு அவளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவள் அங்கு போனதும். நீங்கள் இங்கு வரும் 6,975,853,327வது வருகையாளர். இங்கு ஆண்கள் எவரும் இல்லை. பேராசை பிடித்த பெண்களுக்கு ஒரு பாடமாக இருக்கவே இந்த ஏற்பாடு. எமது நிபந்தனைப்படி நீங்கள் வெளியே செல்லலாம் என்று சொல்லி வெளியேற்றப் பட்டாள்.
இந்தக் கதையின் நீதி: பெண்கள் கிடைக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்று அறிந்து கொள்வதே மேல் அல்லது காலமெல்லாம் கன்னியாகவே கழிக்க வேண்டி வரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
5 comments:
அடி செருப்பால!பொம்பிளையள வம்புக்கு இழுக்காட்டி பொழுதே போகாதோ?"ஆவதும் பெண்ணால,அழிவதும் பெண்ணால"தெரியாதோ?!
He He He .....Nice
soopar
very nice
யோவ்! இது பொம்பிளைகளுக்கு மட்டுமல்ல! எங்களையும் நக்கலடிச்சு இருக்கு
Post a Comment