Thursday 6 January 2011

12 வயதிற்கு முன் பூப்படையும் பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவார்களாம்


பிரித்தானியாவில் உள்ள பிறிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி பதினொரு வயது ஆறு மாதத்திற்கு முன் பூப்படையும் பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்களின் பூப்படைவதற்கு உகந்த வயது 12வருடம் 6 மாதம் என்றும் தெரிவிக்கின்றனர். Avon Longitudinal Study of Parents and Children என்ற பெயரில் 2184 பெண்களிடை நீண்ட கால அடிப்படையில் செய்த ஆய்வில் இருந்து இந்த முடிவை ஆய்வுத்தலைவர் Dr Carol Joinson வெளியிட்டுள்ளார். பதினொன்றரை வயதிற்கு முன்னர் பூப்படையும் பெண்கள் 13, 14 வயதளவில் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பதின்முன்றரை வயதிற்கு பிறகு பூப்படையும் பெண்கள் மிகக்குறைந்த அளவிலேயே மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பூப்படைவது பெண்களின் உடலிலும் உள்ளத்திலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது.
The study found that girls who mature early are more vulnerable to developing depressive symptoms by the time they reach their mid-teens. This suggests that later maturation may be protective against psychological distress.

மாற்றமடையும் ஹோமோன்களும் பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடுகளும் தனது உடல்பற்றிய உருவப் பதிவும் பூப்படையும் பெண்களைப்பாதிக்கிறது. இவை சிறு வயதில் பூப்படையும் பெண்களுக்கு பல மன உளைச்சல்களைக் கொடுக்கிறது.

Dr Joinson concluded: 'If girls who reach puberty early are at greater risk of psychological problems in adolescence, it may be possible to help them with school- and family-based programmes aimed at early intervention and prevention.'

பிற்கால வாழ்க்கையிலும் இளவயதில் பூப்படைதல் மன அழுத்தத்தை கொண்டுவருமா என்பதை பற்றி அறிய இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

2 comments:

Anonymous said...

இந்தப் படத்தைப் பார்த்து எனக்கு மன அழுத்தம் வந்து விட்டது...

Philosophy Prabhakaran said...

அடிக்கடி ஆங்கிலத்தில் பேசி கடுபேத்துறீன்களே மை லார்ட்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...