Tuesday, 30 March 2010

அடுத்த ஈழப் புரட்சிக்கான சூழல்


தமிழர்களால் மேற்கொள்ளப் படவேண்டிய ஒரு ஆயுதப்புரட்சிக்கான சூழல் 1950களில் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு மரபுவழிச் சமூகத்தில் மாற்றத்துக்கு உட்படுத்துவது கடினம். அந்த வகையில் ஆயுதப் போராட்டம் உருவாக1970வரை சென்றது. அன்று தொடங்கி வளர்ந்து வந்த ஆயுதப் போராட்டம் இந்தியாவை நம்பித் தொடங்கப்பட்டது. எதிரியை நண்பனாகக் கருதியதால் போராட்டம் வழிதவறியது.
தமிழர்களின் ஆயுத போராட்டத்திற்கு இலகுவாக பயங்கரவாத முத்திரை குத்தப் பட்டது.

இப்போது ஒரு ஆயுத போராட்ட மரம் மீண்டும் முளைத் தெழுவதற்கான சகல விதைகளும் ஈழத்தில் விதைக்கப் படுகின்றன.

  • விரக்தியின் உச்சக் கட்டத்தில் மக்கள்
  • இனவாதத்தின் கோர முகம்.
  • வர்க்க பேதம்
  • மோசமான அரசாங்கம்
  • ஏமாற்றுதலும் குடும்ப ஆட்சியும்
  • பேரினவாதிகளின் கொக்கரிப்பு
  • ஆயுத அடக்குமுறை
  • நிதி மோசடி
இவையாவும் ஆயுதப் புரட்சிக்கான சூழலை உருவாக்கும்
முகாம்களில் மக்களை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியமை. மக்களுக்கு மலம் கலந்த உணவைக் கொடுத்தமை. எல்லாம் ஒரு ஆயுதப் புரட்சிக்கான விதைகளே. தமிழ்மக்கள் இனிக் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியப் பேரினவாதிகளின் கொக்கரிப்பு மக்களை ஆயுதம் ஏந்திப் போராடத் தூண்டிவிட்டிருக்கும்.

இந்தியாவிலும் இணைந்து எதிரொலிக்கும்.
தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாகப் பல சோகங்களுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றனர். அவர்களின் விடுதலைக்கான தலைவன் ஏற்கனவே பிறந்திருக்க வேண்டும். ஆயுதப் புரட்சி அங்கு ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

"Those who make peaceful evolution impossible make violent revolution inevitable." அமைதி வழியில் மாற்றம் ஏற்படுவதை அசாத்தியமாக்குபவர்கள் வன்முறைப் புரட்சியை தவிர்க்க முடியாததாக்குகின்றனர். இது எந்த கம்யூனிஸ்ட்டுக்களாலும் சொல்லப் படவில்லை. ஒரு முதலாளித்துவக் காவலனாக இருந்த ஜோன் F கெனடியால் கூறப் பட்டது.


முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு ஒரு மாற்றம் அவசியமாக இருந்தது. அந்த மாற்றம் நடைபெறாமல் இருக்கு ஆரிய சிங்களக் கூட்டமைப்பு சகல வழிகளிலும் தடைகள் போடுகின்றன. ஈழத்தில் வன்முறைப் போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.


அறிகுறிகள்
  • கிளிநொச்சியில் பாடசாலை மாணவியை தமது முகாமிற்கு இழுத்துச் சென்ற சிங்களப் படையினரிடம் இருந்து சகல தமிழ மக்களும் ஒன்று கூடி மீட்டுச் சென்றனர்.
  • சாவகச்சேரியில் இளைஞனைக் கடத்திச் சென்று கப்பப் பணம் கேட்டுக் கொன்ற இந்திய அடிவருடிகளான ஈபிடிபியின் முகாமை மக்கள் அடித்து நொறுக்கினர்.
ஆரியப் பேய்களின் முன்னேற்பாடு
ஈழத்தில் அடுத்த ஆயுதப் புரட்சி ஏற்படாமல் இருக்க இந்திய உளவுத்துறை சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அதன் முன்னேற்பாடாக அது இப்போது தமிழர்களைப் பலகூறுகளாகப் பிரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...