

அமெரிக்க கடற்படை ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பாய்ந்து நூறு மைல் தொலைவில் உள்ள இலக்கை இருபது இறாத்தல் எடையுள்ள குண்டால் தாக்கும் துப்பாக்கியை உருவாக்கியுள்ளது. ஒலியைவிட ஏழு மடங்கு வேகம் என்னும் போது மணிக்கு 5376மைல்கள் அல்லது 8600கிலோ மீற்றர்கள்.
Railgun எனப்படும் இந்தத் துப்பாக்கிவீசும் குண்டுகள் 33 megajoules உந்துவிசையுடன் 100 மைல் தொலைவில் உள்ள குண்டுகளைத் தாக்கும். இந்த 100மைல்களையும் சில நொடிகளில் பயணித்துவிடும். ஒரு megajule என்பது ஒரு தொன் எடையுள்ள வாகனம் ஒன்று மணித்தியாலத்திற்கு நூறு மைல் வேகத்தில் மோதுவதற்கு ஒப்பானது.
Railgun எனப்படும் இந்தத் துப்பாக்கி இலக்கை மிகத் துல்லியமாகவும் தாக்கவல்லது. இதனால் எதிரிப் படைகளின் வெடி பொருட்கள் உள்ள இடத்தில் இதன் குண்டுகள் தாக்கும் போது விளைவு படு பயங்கரமானதாக இருக்கும். தற்போது அமெரிக்கக் கடற்படையினரிடம் உள்ள துப்பாக்கிகள் 13மைல்கள் மட்டுமே பாயக்கூடிய குண்டுகளை வீச வல்லன. Railgun எனப்படும் இந்தத் துப்பாக்கிகளைத் தாயாரிக்கும் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா 211மில்லியன் டொலர்களை செலவிட்டது.
இப்படியான ஆயுதங்களை சதாம் ஹுசைன் தயாரிக்கக்கூடாது அமெரிக்கா தயாரிக்கலாம்.
No comments:
Post a Comment