Thursday 16 December 2010

விக்கிலீக் ஜூலியான் அசங்கேயிற்கு பிணை வழங்கப்பட்டது.


சற்று முன்னர் விக்கிலீக் நிறுவனர் ஜூலியான் அசங்கேயிற்கு பிரித்தானிய நீதி மன்றில் பிணை வழங்கப்பட்டது.

ஜூலியான் அசங்கே தனது விக்கிலீக் இணையத்தளமூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை சம்பந்தமான பல இரகசிய உரையாடல்களை அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது அவர்மீது அமெரிக்க அரசிற்க்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர்மீது கற்பழிப்பு குற்றம் சுவீடனில் அவருடன் விரும்பு உடலுறவு கொண்ட இரு அழகிகளால் சுமத்தப்பட்டது. அவரை பிரித்தானியாவில் இருந்து கைது செய்து நாடுகடத்த வேண்டும் என்று சுவீடன் பன்னாட்டு காவல் துறை மூலம் வேண்டியது. இதனால் அவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பிணை வழங்குவதை சுவீடன் அரச சட்டவாளர்கள் எதிர்த்தனர். ஆனாலும் அவருக்கு இன்று பிணை வழங்கி வெளியே வந்துவிட்டார்.

இன்று சுவிடன் அரச அதிகாரிகள் விக்கிலீக் நிறுவனர் ஜூலியான் அசங்கேயிற்கு பிணை வழங்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்று அறிவித்துள்ளனர். அவரின் பிணை சம்பந்த்மில்லாத ஒன்று என்றும் தெரிவித்தனர். அவரது பிணைக்கு முடிக்குரிய வழக்குத் தொடுநர்தான் எதிர்த்ததாகவும் அவர்க்ள் கூறுகின்றனர். பிரித்தானிய நீதி மன்றம் 14-ம் திகதி பிணையில் விடுதலை செய்வதாக அறிவித்தது அதை சுவீடன் எதிர்ப்பதாகத் தெரிவித்து பிணை மறுக்கப்பட்டது. அப்படியாயின் பிணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது அமெரிக்க சதியா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. எப்படியோ இப்போது விக்கிலீக் நிறுவனர் ஜூலியான் அசங்கே வெளியில்.

வித்தியாசமான சட்டங்களைக் கொண்ட சுவீடன்.
சுவீடன் தேசத்துச் சட்டங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் வித்தியாசமானவை. சுவீடனில் ஜூலியான் அசங்கே தனது இணையம் விக்கிலீக்கில் அமெரிக்க இரகசியங்களை வெளிவிடுவது குற்றம் ஆகாது. அதனால் அவர் அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள சுவீடன் அரசிடம் விண்ணப்பித்திருந்தார். சுவீடனில் கற்பழிப்புச் சட்டங்களும் விநோதமானவை. ஆகஸ்ட் மாதம் 11-ம் 18-ம் திகதிகளில் ஜூலியான் அசங்கே இரு பெண்களுடன் அவர்களின் சம்மதத்துடன் மேற்கொண்ட உடலுறவு அவருக்கு எமனானது. முதற் பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பாவித்த ஆணுறை கிழிந்து விட்டது. இரண்டாவது பெண் ஆணுறை அணியச் சொல்லியும் ஜூலியான் அசங்கே ஆணுறை அணியாமல் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது உடலுறவு கொண்டாராம். இவை இரண்டும் சுவிடன் நாட்டுச் சட்டப்படி குற்றமாகுமாம். ஆனால் இரு பெண்களும் தங்கள் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இரு பெண்களும் ஜூலியான் அசங்கேஇற்கு அமெரிக்காவால் வைக்கப்பட்ட பொறியா?

1 comment:

pichaikaaran said...

வினோதமான சட்டங்கள் !!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...