Wednesday, 22 December 2010
பெண்களைக் கொன்று தின்ற குற்றவியல் மாணவன்
குற்றவியலில் கலாநிதிப்பட்டம் பயின்று வந்தவனுக்கு தானும் ஒரு தொடர் கொலையாளியாக மாற வேண்டும் என்ற விபரீத ஆசை வந்துவிட்டது. ஸ்றீfன் கிறிfஇத் (Stephen Griffiths) என்னும் கொலையாளி குற்றவியப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் பிரபலமடைந்த இன்னொரு தொடர் கொலையாளியான Yorkshire Ripper Peter Sutcliffe ஐப்போல தானும் செயற்பட வேண்டும் என்ற விபரீத ஆசை வந்துவிட்டது.
Stephen Griffiths எத்தனை பேரைக் கொன்றான் என்ற விபரம் இதுவரை கிடைக்கவில்லை. மூன்று பெண்களைக் கொன்றதற்கான ஆதாரங்களைப் பிரித்தானியக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதில் இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டி சிலதுண்டுகளை சமைத்து உண்டுள்ளான். ஏனையவற்றை அண்மையில் உள்ள அயிர் ஆற்றில் வீசியுள்ளான். தான் ஆறு பெண்களைக் கொன்றாதாக அவன் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
Stephen Griffiths கொல்லப் பாவித்த ஆயுதமும் விபரீதமானது. வில்லும் அம்பும் (Crossbar) அவன் பாவித்த ஆயுதங்கள். பிரித்தானியப் பத்திரிகைகள் இப்படிப்பட்ட பயங்கரக் குற்றவாளிகளுக்கு ஒரு பட்டம் வைப்பது வழக்கம். இந்தக் கொலையாளிக்கு வைத்த பட்டம் "Crossbow Cannibal" - "வில்லேந்திய மாமிச பட்சணி" என்று தமிழில் சொல்லலாம்!!!
Stephen Griffithsஇன் இறுதிக் கொலை கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகளில் (CCTV) பதிவாகியுள்ளது. அவனது வீட்டிலிருந்து தப்பி ஓடிய சூசன் என்னும் பெண்ணை அவன் இழுத்துக் கொண்டு வந்து அம்பு எய்து கொன்றான். அது ஒளிப்பதிவு செய்யப்படுவதையும் அவன் அறிவான். தான் செய்து முடித்ததை வெற்றி குறியாக இரு விரல்களை ஒளிப்பதிவுக் கருவிக்கு காட்டியுமுள்ளான். பின்னர் மதுக் கிண்ணத்தையும் கொண்டு வந்து ஒளிப்பதிவுக் கருவிமுன் வெற்றி எனக்காட்டியுள்ளான். அதைத் தொடர்ந்து அவன் விட்டிலிருந்து பைகளுடன் அடிக்கடி வெளியே சென்று வருவதும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவரைக் காவல்துறையினர் கைது செய்தபோது தான் ஒசமா பின்லாடன் என்றாராம் இவர்.
இவரால் கொல்லப்பட்ட மூன்று பெண்கள் சிவப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இவருக்கு இன்று ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
4 comments:
பகிர்வுக்கு நன்றி..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
He badly needed a practical lesson...
அன்புடைய பதிவருக்கு வணக்கம்,
தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...
அன்புடன்,
வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com
வலைச்சர பதிவருக்கு எனது வாழ்த்துக்கள்...
Post a Comment