Friday, 26 November 2010
அக வணக்கம் செலுத்த எனக்கு அருகதையில்லை
கோட்டையைப் பிடிக்கவுமில்லை
கொக்காவிலைச் சரிக்கவுமில்லை
கொக்கட்டிச்சோலையில் மார்தட்டி நிற்கவுமில்லை
அக வணக்கம் செலுத்த எனக்கு அருகதையில்லை
சாஹரவர்த்தனாவை மூழ்கடிக்கவுமில்லை
நெல்லியடியில் தவிடுபொடியாக்கவுமில்லை
பூநகரியை எதிரிக்கு புதைகுழியாக்கவுமில்லை
மலர் வணக்கம் செலுத்த தகுதி எனக்கில்லை
ஆனையிறவில் ஆணிவேரோடு அறுக்கவுமில்லை
சீக்கியைரை சிதறடிக்கவும் இல்லை
கூர்காக்களை கூறு போடவுமில்லை
அஞ்சலி செலுத்த ஆண்மை எனக்கில்லை
நீள் கடலெங்கும் நிமிர்ந்து நிற்கவுமில்லை
அம்பாறையில் மறைந்திருந்து தாக்கவுமில்லை
அம்பாந்தோட்டையில் அவர்களை துணிவோடு தூக்கவுமில்லை
உண்ணாமல் உறங்காமல் ஊருக்கு உழைக்கவுமில்லை
மன்னித்துவிடுங்கள் மாவீரர்களே
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
20 comments:
இயக்க வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து இயக்கத்தவர்களின் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் எளியோனின் வீர வணக்கங்கள்!
முதலில் அகால மரணமடைந்த அனைவருக்கும் அஞ்சலிகள் .
சனங்கள் நின்மதியாய் இருக்கிறது பிடிக்காமல் வேல் தர்மாவின் கவலைகள் .
முழுக் கொலை வெறி ====>தாங்கள் பாதுகாப்பான இடங்களில இருந்து கொண்டு .====>அங்க வெடிக்க வேணும் .... சனம் சாக வேணும்====>எங்களுக்கு பொழுது போகவேணும் ...... என்ன கொடுமையடா இது ======>
இனி மிஞ்சி மிஞ்சி போனால், நெடியவன் கூட்டம் தாங்கள் (வெளிநாடுகளில) காசு பிடுங்கிறத்துக்காக ,......... யாரையாவது பிடிச்சு ஒரு கைக்குண்டை வெடிக்கவைக்கும் அவ்வளவு தான் .... அப்பாடா சனங்கள் தப்பிச்சுது ......
சில ஈழத் தமிழர்கள் ஒரு கதை சொல்லுவினம்; இந்திய ராணுவம் புலிகளிட்டை தோத்தது எண்டு. அடப் பாவிகளா!!!!!! ஆட்சி மாற்றத்தால் மட்டுமே இந்திய ராணுவம் வெளியேறியது.... இல்லாவிட்டால் இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு கிடைத்த சுதந்திரம் அண்டைக்கே கிடைத்திருக்கும். இந்திய ராணுவம் எதிர்பார்த்ததை விடப் புலிகள் பலமாக இருந்தது உண்மை, ஆனால் இந்திய ராணுவத்திலும் பார்க்க பலமாக அல்ல .......They fought well, but they must have lost with dignity that's all
இறந்தவர்கள் பாவம், அதிலும் இளவயதினர் அதிகம் பாவம்.
ஆனால் எனது கேள்வி இது தான் ?
மாவீரர்களுக்குள் பின்வரும் பெரும்பான்மையினர் அடங்குவது எப்படி என்பது தான் !
1. சாப்பிட வழி இல்லாததால் இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
2. அப்பா/ஆசிரியர் அடிச்சுப்போட்டினம் எண்டு இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
3. குடும்பச் சூழ்நிலை காரணமாக் இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
4. துவக்குத் தூக்க ஆசைப்பட்டு (சிறு பிள்ளைத் தனமாக) இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
5. "வந்திட்டம் இனிஎன்ன செய்ய" என்ற மனநிலையுடன் இயக்கத்தில் இருந்தவர்கள்
6. தங்கள் குடும்ப அங்கத்தவர்களைக் காப்பாற்ற (மு.கு: புலிகளிடமிருந்து காப்பாற்ற) (குறிப்பாக கடைசியில்) இயக்கத்தில் சேர்ந்தவர்கள்
7. கதறக் கதற பலாத்காரமாக (குறிப்பாக கடைசியில்) இயக்கத்தில் சேர்ர்க்கப்பட்டவர்கள்.
இந்த இடத்தில் புலிகளால் உயிருடன் எரியூட்டப்பட்ட ஆயிரக்கணக்கான புளொட் இயக்க சகோதரர்களுக்கு எனது வீர வணக்கங்கள்.
மேலுள்ள பினூட்டங்களில் எமது போராட்டம் தோற்றதற்குக் காரணமான சில கசப்பான உண்மைகளும் அடங்கிஉள்ளன.
வேல் தர்மா, அடிப்பம், வெட்டுவம், பிடுங்குவம் எண்ட கதையளை விட்டுட்டு, வாழ்வில் அனைத்தையும் தொலைத்து விட்டு நிற்கும் உறவுகளிற்கு ஏதாவது முஞ்சதைச் செய்யுங்கோ (உங்கள் சொந்தக் காசில்)
சீக்கியச் சகோதரர்கள் பாவம் வேல் தர்மா, ஒன்றும் செய்து விடாதீர்கள். (அவர்களைக் கண்டால் அந்த இடத்திலேயே உங்களுக்கு ஒண்டுக்குப் போகும் எண்டதை நான் யாரிடமும் சொல்ல மாட்டன்)
அகவணக்கம் செலுத்த எனக்கு அருகதை இல்லை, உண்மைதான்.
உங்களை உசுப்பேத்தி சாக விட்டுட்டு நாங்கள் வெளி நாடல்லவா வந்தோம்.
புலிக்கொடியைக் காட்டினால் ஒரு நாடும் உதவாது எண்டு தெரிஞ்சும், அதை தூக்கிப் பிடிச்சு உங்களில் பலரை நாமல்லவா சாகக் கொடுத்தோம்.
" சாகத் துணிந்தவன் சரித்திரம், சாகப் பயந்தவன் தரித்திரம்" என்று வெளினாடுகளில் இருந்து எழுதி எழுதி உங்களை சரித்திரம் ஆக்கிய தரித்திரம் நாங்களல்லவா
லண்டனில் நடந்த 2010 மாவீரர் நாள் நிகழ்ச்சி ஏற்பாட்டுச் செலவு இலங்கைக் காசில் கோடிக்கணக்கில் என்று கேள்வி !!!!அங்கே உணவு, உடை இன்றி துடிக்கிறாள், போரினால் அனைத்தையும், அனைவரையும் இழந்த சிறுமி ஒருத்தி .
வேல் தர்மா, நம்ப முடியவில்லை, தீவிர புலி ஆதரவாளரான நீங்கள், மற்றவர்கள் சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி உள்ளீர்கள். இதல்லாம் கூடாது , பல உண்மைகள் வெளியேவருவதால் நாற்றமடிக்கிறது. என்ன செய்வது இவர்களை பொட்டர் இருந்தாலாவது போட்டுத் தள்ளலாம்.
வேல் தர்மா, எனக்கு ஒரு சந்தேகம். தலைவரின் தீவிர விசுவாசியான நீங்கள் அவரைப்போல் கோவணம் கட்டுவீர்களா ? இல்லை புலிக் கொடியில் செய்த underwear அணிவீர்களா ? இல்லை தமிழீழக்காற்று போய்வர வசதியாக ஒன்றுமே போட மாட்டீர்களா ?
============================================================================================================================================================================================
மறந்த/மறைக்கப்பட்ட/மறுக்கப்பட்ட ஒரு வீரவணக்கம்
============================================================================================================================================================================================
தமிழர் விடுதலைப் போராட்டத்தை தரைமட்டமாக்கிய தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்.
பல பல ஆயிரம் தமிழர்கள் சாகக் காரணமான் தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்.
சகோதரப் படுகொலையில் சாதனை செய்த தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்.
தன்னை தலைவர் என்று ஏற்காத அனைவரையும் துரோகியாக்கிய தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்.
ஈழத் தமிழர்களின் வாழ்வை சிதைத்த தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்.
தான் நினைப்பது மட்டுமே சரி என்று நினைக்கும் தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்.
தன் சுயநலத்திற்காக தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை தெரிவுசெய்யாத தலைவரிற்கு எனது வீரவணக்கங்கள்
ஈழத் தமிழ் அன்பர்களுக்கு ஒரு இந்தியத்திரு நாட்டுத் தமிழனின் வேடுகோள்:
தயவு செய்து உங்கள் தீவிரவாதச் சிந்தனையை எம்மவர்கள் மத்தியில் விதைக்காதீர்கள். விதைக்க வைக்காதீர்கள் (சீமான், வைக்கோ போன்றவர்கள் ஊடாக), எங்களை வாழ விடுங்கள், நல்ல மனிதர்களாக, இந்தியத் திருனாட்டின் நற் பிரஜைகளாக. இங்கேயும் ஒரு இரத்த ஆறு ஓட வைக்காதீர்கள்! தொப்பிழ் கொடி உறவென்று சொல்லி உங்கள் வன்முறை நிறைந்த மனனோயை எமக்கும் பரப்பாதீர்கள்.
Please leave us alone
சோத்துப் பார்சல் கும்பலுக்கு இறந்த தமது இயக்கத் தோழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இந்தப் பதிவுதான் உதவி கிடைத்துள்ளது.
மற்றும்படி சந்ததியார் போன்னவர்களை அவர்கள் கொன்றதுடன் மறந்து விட்டார்கள்...படுபாவிங்க...
Darling, we may have killed only one "சந்ததியார்" BUT how many academics / resourceful people/ great writers tigers killed . They are no.1 in every thing. In including mastering the art of suicide bombing.
Simple, how can a LTTTTTTTTTTTTTTE supporter talk about killing. using peoples' kindness towards pregnant to target SL Army commander via a suicide bomb was an act of pure barbarism.
Vel tharma, pls answer some of these feedback, otherwise they/others think they are correct,
இந்திய நாட்டு தமிழ்த் திருமகனே... நீ தமிழன் என்று சொல்ல உனக்கு என்ன அருகதை இருக்கு. வீர மறத் தமிழன் வாந்த மண்ணில் அவனின் சந்ததியாய் இருக்கின்றாய் என்று வெட்கப்படு. தினமும் மூன்று வேளை மூக்கு முட்ட தின்று புளிப்பேறிக் கிடக்கும் நீ ஈழத் தமிழர்களின் மூத்திரத்தை குடி. இந்தியாவை திருநாடு என்று வேறு பிதற்றுகிறாய். மூடனே...
வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கேவலம் மகிந்தவின் காசுக்காக பல கீழ்த்தரமான பின்னூட்டங்களை இட்டு தமிழின போராட்டத்தை கேவலப்படுத்தும் (இதே தொழிலாக கொண்டுள்ள) கணிணி படைத்த தமிழ் கயவஞ்சகர்களே..... என்னிடம் மட்டும் நீங்கள் மாட்டினால் உங்கள் இரத்தத்தை உறிந்துவிட்டு சிங்களவனின் சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டேன. கேடு கெட்டவர்களே....
Post a Comment