
ஒரு இசுலாமியத் தொலைக்காட்சி பிரிதானிய தகவல் துறை அதிகார சபையான OFCOM இன் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. 2007-ம் ஆண்டு இதே தொலக்காட்சி பிரித்தானியச் சட்ட வரம்புகளை மீறியதற்காக முப்பதினாயிரம் பவுண்கள் தண்டப் பணமாகச் செலுத்தியது.
நேற்றைய தினம் OFCOM ஒரு இசுலாமியத் தொலைக்காட்சி மூன்று ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக கண்டித்துள்ளது.
1. கணவன் மனைவியுடன் அவள் விருப்பத்திற்கு மீறி உடலுறவு வைக்கலாம் என்று சென்ற ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கூறப்பட்டதை OFCOM தவறு எனக் கூறுகிறது. பிரித்தானியச் சட்டப்படி கணவன் மனைவிய அவள் விருப்பத்திற்கு மாறாக உடலுறவு கொள்வதை marital rape எனக் கருதப்பட்டு அது தண்டனைக்குரிய குற்றம் எனக் கொள்ளப் படுகிறது. இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் ஒரு பெண்ணாகும்.
2. ஷேக் அப்து மஜீத் அலி என்பவர் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிதார். இவர் பெண்களை பல முறைகளில் மரியாதையாக நடத்துங்கள் என்று கூறிய போதும். பெண்களை சில விதங்களில் உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளாக்குவது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று கூறினார். அத்துடன் பொது இடங்களில் வாசனைத் திரவியங்கள் பூண்டு வரும் பெண்களை விபச்சாரிகள் என்று வர்ணித்தார்.
3. பல நிகழ்ச்சிகளில் மத்திய கிழக்குத் தொடர்பாக ஒருதலைப்பட்சமான கருத்து முன் வைக்கப் பட்டதாக இந்த இசுலாமியத் தொலைக்காட்சி மீது குற்றம் காணப்பட்டது.
பிரித்தானியாவின் பல ஊடகங்களிலும் ஊடக மேற்பார்வைகளிலும் யூத சக்திகளின் ஆதிக்கம் நிறைந்து விட்டதாக சில இசுலாமியர்கள் கருதுகின்றனர்.
1 comment:
பிரித்தானியா போன்ற ஆதிக்க சக்திகளிடமிருந்து இதைத் தவிர வேறு எதை எதிர்பார்கிறீர்கள்?
Post a Comment