Wednesday, 27 October 2010
எச்சரிக்கை: ஐ-போனில் கிருமி(bug)
ஐ-போனில் உள்ள மென்பொருள் குறைபாடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் போனைத் திருடுபவர் கடவுச் சொல் இல்லாமலேயே உங்கள் ஐபோனில் இருந்து அழைப்புக்களை விடுக்க முடியும். இதன்படி உங்கள் ஐ-போனில் இருந்து ஒருவர் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் ஐ-போனில் இருந்து அழைப்புக்கள் விடமுடியும், உங்கள் ஐ-போனில் உள்ள உங்கள் படங்களைப் பார்க்க முடியும்.
சென்ற ஆண்டும் ஆகஸ்ட் மாதம் இதே போன்ற் ஒரு கிருமி வைரச் பரவவிடப்பட்டது. அதை ஆப்பிள் நிறுவனம் தனது மென்பொருள் மூலம் சரி செய்தது. நேற்றில் இருந்து 4-iphone software ஐப் பாதிக்கும் இன்னொரு கிருமி(bug) கண்டறியப்பட்டுள்ளது. முன்பு வெளியிட்ட கிருமி(bug) மூலம் குறுந்தகவல்களையும் அனுப்பலாம் ஆனால் நேற்று பரவவிடப்பட்டுள்ள கிருமி படங்களைத் திருட்டுத் தனமாகப் பார்க்கவும் அழைப்புக்களை விடவும் மட்டுமே பயன்படுத்தப் படும். மெக்சிக்கோவைச் சேர்ந்த ஐ-போன் பாவனையாளர் இந்த கிருமி(bug) பரவியுள்ள்மையை கண்டறிந்துள்ளார்.
இந்த கிருமி(bug) பற்றி ஆப்பிள் நிறுவனம் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆப்பிள் இது தொடர்பாக திருத்த மென்பொருளை விரைவில்வெளிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐ-போன் பாவனையாளர்கள் தமது மென்பொருளை update செய்வதன் மூலம் இந்த கிருமி(bug) இருந்து தமது ஐபோன்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment