
மேலான பகைவன்
நண்பன் வேண்டியவன்
பகைவன் நண்பனிலும் மேலானவன்
கடன் கேட்க மாட்டான்
பட்டது போதும்
இராமனைப் போல்
எனக்கும் ஒருதாரம்
ஒன்றுடன் பட்டது போதும்
நீயும் தெய்வம் போலே
காணிக்கை செலுத்துவதால் பிரசாதம் தருதலால்
வேண்டுதல் சொல்லுதலால் பூவைத்துப் பார்த்தலால்
மணியடித்தலால் ஆறுகாலப் பூசை செய்வதால்
பெண்ணே நீயும் ஒரு தெய்வமடி
1 comment:
களமேகத்தின் கவிதையை நினைவு படுத்துகிறது.
கட்டித் தழுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டிப்பன்னாடை இழுத்தலால்
முட்டி வாய்க்கள்ளை அருந்துவதால்
பாரப்பனையையும் வேசை எனலாமே விரைந்து.
Post a Comment