Saturday, 2 October 2010

இலண்டன் கானாப் பாடல் - என்னடா உலகம்


Central London நகரினிலே
Marks & Spencer கடையினிலே
Tillஇல் ஒருத்தி இருந்தாளே
Billஐப் payபண்ணச் சொன்னாளே
சிரித்துக் கொண்டு பார்த்தாளே - நான்
என்னையும் மறந்தேன்
Credit card pinஐயும் மறந்தேன்

விம்பிள்டன் கோவிலிலே
விநாயகர் வாசலிலே
பக்தியோடு நின்றேன
பாவை அங்கு வந்தாளே
ஓரக் கண்ணால் பார்த்தாளே
உதட்டோரம் சிரித்தாளே - நான்
பக்தியை மறந்தேன் - பரவச
முத்தியை அடைந்தேன்

Oxford circusஇலே
Restaurant ஒன்றினிலே
மெழுகுதிரி ஒளியினிலே
சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டினாளே
என் இதயத்தைத் தட்டினாளே
என் உணர்வெல்லாம் முட்டினாளே

West End theatreஇலே
Pantomime show ஒன்றிலே
பக்கத்திலே இருந்தாளே
சரசப் பார்வை பார்த்தாளே
உரசி உரசி அசைந்தாளே - நான்
Pantomime எங்கே பார்த்தேன் - பரவசத்தின்
உச்சம் கண்டேன்

தேம்ஸ் நதியின் ஓரத்திலே
வில்லோ மர நிழலினிலே
கட்டியணைத்து இருந்தோமே
முத்தமழை பொழிந்தோமே
என்னத்தை சொல்வேன் - சுகம்
என்னென்று சொல்வேன்

Victoria Stationஇலே
வேலை நேர நெரிசலிலே
கையில் coverஉடன் வந்தாளே - தன்
கல்யாணப் பத்திரிகை என்றாளே
கட்டாயம் வரச்சொன்னாளே
என்னடா உலகம் - இது
என்னடா உலகம்

5 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

சுவையாகச்சொன்னீர்கள் அருமை

செழியன் said...
This comment has been removed by the author.
செழியன் said...

கவிதை நல்லா இருக்கு...ஆனா காதல்....?

Anonymous said...

பல காதல்கள் இப்படித்தான்..

Meru_News said...

Venba
Kuraisolla villainaan kumbittuk
ketkindren
sarnjaramaai vaarthaiyile
sadugudhan aadugiraai
Varampetra thamizhkkavidhai
vagaiyunara vendumenil
Marabile kaviyezhudhip Paar

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...