
கண்களில் உருவெடுத்து
கன்னங்களை வருடிக்கொடுத்து
உதடுகளில் உறைவதால்
காதலும் கண்ணீர் போலே
உன்னையும் என்னையும்
நாமாக்கிய காதல்
என்னை மட்டும்
ஏன் வதைகிறது
தவிக்கும் உள்ளங்கள்
அகதித் தஞ்சம் கோருமிடம்
அன்புள்ளம்
நிலைக்காதது அன்புமல்ல
நீடிக்காதது காதலுமல்ல
எவள் உருவம்
உன் இதயத்திற்கு
தெரிகிறதோ
அவளே உன் காதலி
எவள் குரல்
உன் இதயத்தில்
விழுகிறதோ
அவளே உன்னவள்
எவள் தொடுகை
உன் இதயத்தை
வருடுகிறதோ
அவளே உன் தேவதை
1 comment:
Nice Poem... Keep continue this...
My Blog1
My Blog2
by
Siva
Post a Comment