
பாடாத பாட்டொன்று காதில் கேட்கிறது
தெரியாத அழகொன்று கண்ணில் தெரிகிறது
காதல் வந்தது.
பாடத்திட்டம் முடிப்பவர் சிலர்
பள்ளியிலேயே இறப்பவர் பலர்
அனுபவப் பாடசாலை
உணவு பற்றி தீர்மானிக்கின்றன
நாலு சிங்கங்களும் ஒரு ஆடும்
தேர்தல்
தேவையில்லாதவன் ஏற்பது
தேவையற்றவன் மறுப்பது
அறிவுரை
அறியக் கடினமானது
ஏற்றுக் கொள்ள சிரமமானது
யாதார்த்தம்
நீண்ட ஆயுள் வேண்டுமா
நல்லதைச் செய் நல்லதைச் சொல்
வள்ளுவனும் காந்தியும் இறக்கவில்லை
பயன்படுத்தினால் பெருகும்
தவறவிட்டால் கிடைக்காது
சந்தர்ப்பம்
பல மூடர்களைன் வெற்றி
சில அறிவாளிகளின் தோல்வி
மக்களாட்சி
No comments:
Post a Comment