
யாதார்த்தம் தேவை
நல்ல திரைப்படம்
பின்னணி இசை
அமைத்த வாழ்க்கை
பின்தங்கல்
உலகப் பிரச்சனைகளின்
வளர்ச்சிக்கு ஈடாக
மனிதர் சிந்தனை
வளர்வதில்லை.
மாறிக் கொண்டே இரு
வித்தியாசமானவரைப் பார்த்துச் சிரிப்போம்
வித்தியாசயமாய் இல்லாதவரையும் பார்த்தும் சிரிப்போம்
ஆராய்வு
விண்ணை ஆராய்ந்து பார்த்து
நடக்கப் போவதைச் சொன்னான் சோதிடன்
நடந்ததைச் சொன்னான் விஞ்ஞானி
இருவருக்கும் ஒரு ஒற்றுமை
அடிக்கடி கருத்துக்கள் மாறும
அனுபவம்
நான் பயந்தவை எல்லாம்
தேவையற்ற பயங்கள்
நான் ஆசைப்பட்டவை எல்லாம்
வீணான ஆசைகள்
ஒரு பிரச்சனைக்கு கண்ட தீர்வு
மறுபிரச்சனைக்கு வழி வகுத்தது
அனுபவம் தந்த பாடம்
திருப்தி
மனம் நிறைவடையும்
ஆசைகள் சிறுக்கும் போது
வளர்ச்சி
வேகமாக வளர்கிறது
தகவல் தொழில் நுட்பம்
வளரவில்லை தகவல்கள்
1 comment:
anubaman... nantra ullathu.
Post a Comment