
The Grand Design என்னும் தமது புதிய நூலில் Stephen Hawking, Leonard Mlodinow ஆகிய பிரபல விஞ்ஞானிகள் இந்தப் பிரபஞ்சத்தை கடவுள் படைக்கவில்லை அது ஈர்ப்புச் சக்தியால் உருவானது என்கிறார்கள்.
Stephen Hawking 1988இல் வெளிவிட்ட தனது A Brief History of Time என்னும் நூலில் இறைவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் புதிய நூலில் கடவுள் இந்தைப் பிரபஞ்ச உருவாக்கத்தில் தேவைப்பட்டிருக்கவில்லை என்கிறார்.
ஈர்ப்பு விசைத் தத்துவங்களிற்கு ஏற்ப பிரபஞ்சம் தானாகவே தோன்றியது என்பது தான் Stephen Hawking, Leonard Mlodinow ஆகிய விஞ்ஞானிகளின் கருத்து. ஈர்ப்புவிசையைக் கண்டுபிடித்த ஐசாக் நியூட்டன் கடவுள் பிரபஞ்சத்தை உருவாக்கியதை ஏற்றுக் கொண்டிருந்தார். 1992இல் மற்ற நடசத்திரங்களைச் சுற்றியும் கிரகங்கள் இருக்கின்றன என்று கண்டு பிடித்ததைத் தொடர்ந்து நியூட்டனின் கோட்பாடான ஒரு சூரியன் பிழைத்து விட்டது. அதற்கு முன்னர் பூமி மனிதர்கள் வாழ்வதற்கென்று சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட ஒன்று என்று நம்பப்பட்டது. இப்போது எமது பூமியைப் போல் பல கோடி இப்பிரபஞ்சத்தில் இருகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Leonard Mlodinow ஆகிய பிரபல விஞ்ஞானிகள் இப்போது M-theory என்பதை முன்வைக்கிறார்கள். அது இந்தப் பிரபஞசம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் விளக்கும் என்கிறார்கள் Leonard Mlodinow ஆகிய பிரபல விஞ்ஞானிகள்.
Stephen Hawking பிரபஞ்சத்தின் வேறு பகுதிகளில் பூமியில் உள்ள மனிதர்களைப் போல் அறிவுள்ள உயிரினங்கள் இருக்கிறது என்று நம்புகிறார். அத்துடன் பிரபஞம் என்பது ஒன்றல்ல பல இருக்கின்றன. அவை அழிந்து மீண்டும் தோன்றுகின்றன.
அண்மையில் Stephen Hawking மனிதர்கள் பூமியில் இருந்து விலகி வேறு சூரிய மண்டனங்களில் உள்ள கிரகங்களுக்கு செல்ல வேண்டும் என்றார்.
2 comments:
பிரபஞ்ச வரலாறு பெருமலை என்றால் விஞ்ஞான வரலாறு சிறு கடுகு.
விஞ்ஞானம் வளர இன்னும் பல பகுத்தறிவு விடைகள் கிடைக்கும்....
மனிதனின் மூளை முட்டைக்குள் இருக்கும் குஞ்சை போன்றது என்றால், (சிறிய வட்டம்..) பிரபஞ்சம் என்பது உலகம் போன்றது. புரிந்து கொள்வது ரொம்ப சிரமமே... இன்று உண்டு அன்பதை நாளை இல்லை என்பர்.. இன்று இல்லை என்பதை நாளை உண்டு என்பர். அவர்களின் இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற அறிக்கைகள் தேவை படுகிறது..
Post a Comment