
Remote contolஇல் தொலைக்காட்சியை புகுத்தியுள்ளது SAMSUNG நிறுவனம். நீங்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது வேறு சனலில் இன்னொரு நிகழ்ச்சியை இந்த Remote contolஇல் பார்க்கலாம். இன்னும் ஒரு பிரச்சனையை இந்த புதிய Remote contol தீர்த்துவைக்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியை நீங்கள் இடையில் சமையலறைக்கோ கழிப்பறைக்கோ செல்லும் போது இந்த Remote contolஐ உங்களுடன் எடுத்துச் செல்வதன் மூலம் தொடர்ந்து பார்க்கலாம். இது பலருக்கு உள்ள பெரிய பிரச்சனை. இனிமேல் நீங்கள் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் போது சமையலறையில் இருந்து எரிந்த மணம் வந்தவுடன் எழுந்து ஓட வேண்டியதில்லை.
இது இப்படியிருக்க பிரித்தானிய நிறுவனமொன்று ஐ-போனை Remote contolஆக மாற்றும் புளூ ருத்தைக் உருவாக்கியுள்ளது. இந்த புளூ ரூத்தை உங்கள் வீட்டின் ஒரு இடத்தில் வைத்துவிட்டு இலவச செயற்படுமென் பொருள் ஒன்றை (application) உங்கள் ஐ-போனில் தரவேற்றம் செய்துவிட்டால் உங்கள் வீட்டில் உள்ள சகல கருவிகளுக்குமான Remote contolஆக உங்கள் ஐபோனைப் பாவிக்கலாம்.
இது தொடர்பான காணொளிக்காட்சி:
No comments:
Post a Comment