Monday, 16 August 2010

உலகின் சிறந்த நகரங்கள் - சிங்காரச் சென்னையைக் காணவில்லை.


உலகப் பொருளாதாரத்தின் 30% உலகெங்கும் உள்ள நூறு நகரங்களிற்கு சொந்தமானவை. 21-ம் நூற்றாண்டில் நாடுகளல்ல நகரங்கள்தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றனவாம். உலகமக்களின் அரைப்பங்கினர் பெருநகரங்களில் வாழுகின்றனர். ஆ ஊ ன்னா ஒரு மஞ்சள் பையைத் தூக்கிக் கொண்டு நகரத்துக்கு வந்துவிடுவார்களோ?

தேராட்டம் காரினிலே
ரொம்ப திமிரோட போறவரே

எங்க ஏரோட்டம் நின்னு போனா

உங்க காரோட்டம் என்னவாகும்


என்ற கேள்விக்கு என்ன விடை?
பட்டணத்தான் வாங்காவிடில் உங்க ஏரோட்டம் என்னவாகும் என்பதோ?

நியூ யோர்க் நகரப் பொருளாதாரம் ஆபிரிக்காவைச் சேர்ந்த 46 நாடுகளின் ஒன்றிணந்த பொருளாதாரத்திலும் பெரியது. ஹொங்ஹொங் நகரத்திற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தொகை இந்தியாவிற்கு வரும் உல்லாசப் பிரயாணிகளின் தொகையிலும் கூடியது. உலகமயமாக்கலின் எந்திரங்களாக நகரங்கள்தான் திகழ்கின்றனவாம்.

சிறந்த 65 நகரங்கள்
கலாச்சாரம், பொருளாதாரம், கண்டுபிடிப்புக்கள், உலகச் சந்தையுடன் ஒருங்கிணைப்பு பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கை சஞ்சிகை உலகின் 65 சிறந்த நகரங்களைத் தெரிவு செய்துள்ளது:

  1. நியூயோர்க்
  2. இலண்டன்
  3. டோக்கியோ
  4. பாரிஸ்
  5. ஹொங் ஹோங்
  6. சிக்காக்கோ
  7. லொஸ் எஞ்சல்ஸ்
  8. சிங்கப்பூர்
  9. சிட்னி
  10. சியோல்
ஆசிய நகரங்கள் நான்கு இதில் இடம்பெற்றுள்ளமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
சீன பீஜிங் நகர் 15ம் இடத்திலும் , ஷாங்காய் நகர் 21ம் இடத்திலும் இருக்கின்றன. வகன நெருக்கடியில் இலண்டனிலும் பார்க்க சிங்கப்பூர் பல மடங்கு சிறந்தது. குற்றச் செயல்களை வைத்துப் பார்த்தால் சிங்கப்பூர் நியூயோர்க்கிலும் பலப்பல மடங்கு சிறந்தது.

இரசியாவின் மாஸ்கோ நகர் பரிதாபகரமான 25ம் இடத்தில் இருக்கிறது.

பாங்கொக் நகர் 36-ம் இடத்தில் இருக்கிறது.

களவாணிப்பயலுக மதராசிப் பட்டணத்தை என்ன பண்ணினாங்க?
இந்தியத் தலைநகர் டில்லி 45, மும்பை 46, பெங்களூர் 58. மலேசிய நகர் கோலலும்பூரை(48) இரு இந்திய நகரங்கள் முந்தியது முக்கியமானதாகும். இந்த 65 நகரப் பட்டியலில் சிங்காரச் சென்னை இடம்பெறவில்லை. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையை ஆயி போற இடமாக்கியதாலோ? ஆளவந்தவர்கள் வாழவந்ததாலோ?

பாவம் பாக்கிஸ்த்தான்
பங்களாதேசின் டாக்கா 64ம் இடத்தைப் பெற்றுள்ளது. பாக்கிஸ்த்தானியப் பட்டினங்கள் எதுவும் இதில் இடம்பெறவில்லை. ராஜபக்சவின் கொழும்பு பாதாளத்திலோ?

2 comments:

Anonymous said...

nice article and punching reality

bandhu said...

சென்னை மனிதர்கள் வாழ தகுதி இல்லாத நகர் பட்டியலில் இருக்கும். அங்கு எப்படியும் Top 10 -இல் இருக்கும்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...