Tuesday 31 August 2010

மீண்டும் ஏமாற்றும் இந்தியா. மீண்டும் ஏமாறும் தமிழர்கள்.



இலங்கையில் "தகடு கொடுத்தல்" என்ற ஒரு சொற் தொடர் உண்டு. முன்பு மலையாளச் "சோதிடர்கள்" இலங்கைக்கு வந்து தாம் அருள் மிக்கவர் என்று சொல்லி பரிகாரத்திற்கு இயந்திரத் தகடுகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிப் பெரும் பணம் பெற்றுக் கொள்வர். இதனால் தகடு கொடுத்தல் என்பது ஏமாற்றுதல் என்று பொருள்படும். இலங்கையில் உள்ள போரினால் பாதிக்கப் பட்ட மக்களை மீள் குடியேற்றத்திற்கு அவர்களுக்கு நான்கு தகடுகளைக் கொடுத்து இதைக் கொண்டு போய் உங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அவர் தாம் வாழ்ந்த வளமான பூமிக்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. வளமுள்ள பிரதேசங்களில் சிங்களவர்களை இலங்கையும் இந்தியாவும் இணைந்து குடியேற்றம் செய்து வருகிறது. இப்போது இலங்கையில் இருக்கும் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாம ராவ் மீள் குடியேற்றத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த மீள் குடியேற்றம் தமிழர் பகுதிகளைத் துண்டாடி அவர்களை மீளா அடிமைகளாக்கும் விதத்தில் சிங்களவர்களையும் சிங்களப் படையினரையும் தமிழர் பிரதேசங்களில் குடியமர்த்துகிறார்கள். தமிழர்கையில் சில தகடுகளைக் கொடுத்து இவற்றைக் கொண்டு உங்கள் வீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான் மீள் குடியேற்றம்.

தமிழர்களுக்கு இலங்கையில் இப்போது ஒரு பிரச்சனையுமில்லை. அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு பிரச்சனை சில ஆயிரம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் இருக்கின்றனர். (அவற்றைத் தடுப்பு முகாம் என்கிறதே மஹா தப்பு. கன்னத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அவை நலன் புரி நிலையங்கள்!!!!!) அவர்களை மீள் குடியேற்றம் செய்வதுதான். இப்படி ஒரு எண்ணம் தமிழ்நாட்டில் பரப்பத் தொடங்கிவிட்டார்கள். சென்ற வாரம் ஆனந்த விகடனில் இப்படி ஒரு கேள்வி பதில்:
விகடனின் கேள்வி:
சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றிருக்கிறாரே பழ.நெடுமாறன்?"

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பதில்

"நிச்சயமாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. காரணம், மத்திய அரசு ஈழத்தில் இருக்கும் தமிழர்களுக்காக எல்லாவிதமான நன்மைகளையும் செய்து வருகிறது. இப்போதுகூட 50,000 வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்திருக்கிறது. அகதி முகாம்களைப் பார்வையிட புதிய குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதையெல்லாம் நம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்!"

ஆனால் இலட்சக்கணக்கான விடுகளை அழிக்க ஆயுதம் கொடுத்தது யார்? பயிற்ச்சி கொடுத்தது யார்? படை கொடுத்தது யார்?

தாம் பிறந்து வளர்ந்த முற்றத்தை பார்க்கும் உரிமையைக் கூட பறிக்கப்பட்ட மக்களுக்கு தகடு கொடுத்து வீடு கட்டிக் கொடுப்பதால் என்ன பயன்? தமிழினத்தைக் கெடுத்து அழித்தவர்கள் வீடு கட்டப் போகிறார்களாம்!!! அதற்கு 20,000 இந்தியர்களைக் இலங்கைக்கு கொண்டுவரப் போகிறார்களாம்!!!

தமிழனின் வாழும் உரிமையைப் பறித்தது யார்?

வன்னியில் ஒரு வாலி வதைப் படலத்தை நிறைவேற்றியது யார்? தமிழனை பின்னால் இருது முதுகில் குத்திய துரோகிகள் யார்?

ராஜீவ் காந்தி(கான்) ஒரு கொலை வெறிப்படையை அனுப்பி இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் என்று முழங்கியது. அது இதுவரை நிறைவேற்றப் படவில்லை. அது பற்றி இப்போது யாரும் கதைப்பதில்லை. இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அதிக சிங்கள மக்களைக் குடியேற்றி அங்கு அவர்களைச் சிறுபான்மையினராக்கிய பின் இந்த திருத்தம் நிறைவேற்றப் படுமா? இது பற்றி ஆராயத்தான் இலங்கை இந்தியா இப்போது கைகோத்து நிற்கிறதா?

இலங்கையில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபாமா ராவ் ஒரு சில தெரிந்தெடுக்கப்பட்டவர்களைமட்டும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அவரிடம் யாழ்ப்பணத்திலும் வன்னியிலும் வைத்து இந்தியா தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம் பற்றி மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இவர்களை இனி யார் காப்பாற்றுவார்களோ தெரியாது!!!

பாவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தமிழ் கட்சியில் இருந்த தமிழின தீவிர உணர்வாளர்களை இந்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க அக்கட்சியிலிருந்து ஓரம் கட்டப் பட்டனர். தமிழத் தேசியக் கூட்டமைப்பு இப்போது தமிழர்களின் பிரச்சனை பற்றிக் கதைக்கக்கூடாது என்று இந்தியா உத்தரவிட்டுள்ளதாம். இந்தியாவின் பின்னால் சென்ற தமிழ் சகல அரசியல்வாதிகளும் இறுதியில் துரோகிகளாகவே மாறினார்கள்.

பாவம் சிதம்பரம் ஐயா
சிவகங்கைத் தொகுதியில் ஏதோ எல்லாம் செய்து தேர்தலில் வெற்றி பெற்ற சிதம்பரம் ஐயா அண்மையில் வீராப்புடன் பேசினார் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய உதவி அவர்களுக்கு நேரடியாகவே கையளிக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகவே இந்தியாவால் வைப்பிலடப் படும் என்று முழங்கினார். மறுநாள் இலங்கையின் ஒரு சாதாரண அமைச்சர் அப்படிச் செய்ய அனுமதிக்க முடியாதென்றார். இப்போது போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான இந்திய "உதவி" இலங்கை அரசினூடாகவே வழங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

இந்தியாவின் இப்போதைய கவலை சீனா தனது அபிவிருத்தித் திட்டம் என்ற போவையில் பல சீனர்களை இலங்கையில் இறக்கி விட்டது. இவர்களில் செம்படையைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்தியாவும் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். இதற்கு தமிழன் மேல் சாவாரி செய்வதுதான் இந்தியாவின் நோக்கம். இலங்கையில் வீடு கட்டிக் கொடுப்பது என்ற போர்வையில் முதலில் 20,000 இந்தியர்கள் இலங்கையில் வந்து இறங்கப் போகிறார்கள். இவர்களின் நோக்கங்களில் ஒன்று இலங்கையில் இனி தமிழ்த் தேசிய போராட்டம் தலை தூக்காமல் பார்த்து கொள்வதாகவே இருக்கும். இந்தியா மீண்டும் தமிழர்களை ஏமாற்றுகிறது. தமிழர்களும் ஏமாறுகிறார்கள்.

1 comment:

Anonymous said...

இவாகள் எம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்து கொண்டும் ஏமாறும் அப்பாவித் தமிழர்களை என்ன செய்வது? இந்திய கொலைவெறி அரசு காலகாலமாகவே தமிழினததை ஏமாற்றியும் தமது ஆயுதபலத்தால் அழித்தும் வந்தது. தற்போது எஞ்சியிருக்கும் மக்களையும் இந்த பாவிகள் அழிக்க நினைத்துவிட்டது நன்றாகவே புரிகிறது? நிரூபமா வந்தது அகதிகளுக்காகவா அல்லது வியபார நோக்கத்திற்காகவா? கருணாய்நிதி என்னும் பொய்யனுடன் சோந்து மறுபடியும் ஒரு இனவழிப்பை செய்ய முயல்கிறதா பாப்பன நாடு? இந்த நாய்களை இனியும் நம்புவதை விடுத்து ஏன் நாம் சீனாவுடன் கைகோர்க்கக் கூடாது? யாழ்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...