சிவந்தன் உரையாற்றுகிறார்.
23 ஜூலை 2010 இலன்று சிவந்தன் ஜெனிவாவில் உள்ள ஐநா அலுவலகத்தை நோக்கித் தனது கால் நடையை ஆரம்பித்தார். கறுப்பு ஜூலையை நினைவு கூரவும் சிவந்தனை வழியனுப்பவும் பிரித்தானியாவின் இலண்டன் நகரில் 5000 முதல் 7000 வரையிலான மக்கள் குழுமி இருந்தனர். இலண்டனின் அன்று புலிக்கொடி எதுவும் பிடிக்கப் படவில்லை. அதற்கு முதல் 2010 மே மாதம் பிரித்தானியப் பாராளமன்றத்தின் முன் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூர நடந்த நிகழ்வில் புலிக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. சென்ற வெள்ளிக் கிழமை ஜெனிவாவில் சிவந்தனை வரவேற்க மக்கள் கூடிய போது பல புலிக் கொடிகள் அங்கு பறந்து கொண்டிருந்தன.
சிவந்தனின் ஆயிரம் மைல் நடைப் பயணத்தில் பிரித்தானியத் தேசியக் கொடி பிரெஞ்சுத் தேசியக் கொடி ஐநா கொடி ஆகியவற்றை அவ்வப் போது தாங்கிச் சென்றார்.
வியாழக் கிழமை மாலை எழுமணிக்கு இலண்டனில் இருந்து புறப்பட்ட நான் மறுநாள் பிற்பகல் 1-30இற்கு ஜெனிவாவை அடைந்தேன். சொகுசு வாகனத்தில் பயணம் செய்த எனக்கே பலத்த களைப்பு. சிவந்தன் அவ்வளவு தூரத்தையும் எப்படி நடந்தார்?
சிவந்தன் முன்வைத்த கோரிக்கைகள்:
• இலங்கை அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது மானுடத்திற்கெதிரான முறையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களிற்கான சுதந்திரமான சர்வதேச விசாரணை.
• சிறை வைக்கப்பட்டுள்ள போராளிகளை பார்வையிடுவதற்கான படிமுறைகள், போரினால் இடம் பெயர்ந்து நிர்க்கதி நிலையில் உள்ள தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தல்.
• இலங்கை அரசு சர்வதேச சட்டங்களை மதிக்கும்வரை அதனை புறக்கணித்தல்.
இவை அடங்கிய கோரிக்கை கடிதத்துடன் ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகழக அதிகாரியைச் சந்தித்தார். சிவந்தன் தமிழ் மக்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகளை அவரிடம் எடுத்துச் சொல்லியபோது அவர் கண்ணீர் மல்கினாராம்.
சிவந்தனின் நடை பயணத்தின் இறுதி நாள் நிகழ்வுகளின் காணொளியை காண இங்கு சொடுக்கவும்
16 comments:
ஒரு இலட்சியத்துக்காக அவர் அந்தப் பயணத்தை தன்னிச்சையாக ஆரம்பித்தார்!அவர் பிரான்ஸ் ஊடாக பயணம் செய்த போது,புறநகர்ப் பகுதியான"செவ்றோன்"என்ற இடத்திலுள்ள ஒரு பூங்காவில் 1958-முதல் விடுதலை வேண்டி உயிர் நீத்த"அத்தனை"தமிழ் மக்களுக்காகவும்,உலகிலேயே ஒரேயொரு இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடத்தில் கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்தினார்!போராளிகள் இலட்சியத்துக்காக உயிரையே கொடுத்தார்கள்!உலக மக்களிடத்தில் எங்களுக்கு தார்மீகப் போராட்டமும் கைவருமென்று சிவந்தன் நிரூபித்திருக்கிறார்!இவ்வாறே லண்டனில் உண்ணா நோன்பிருந்த பரமேஸ்வரனும் நிரூபித்திருக்கிறார்!என்ன செய்து என்ன?உலகு ஆயுதங்களிலேயே நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது!!!!
போராளிகள் உயிரை கொடுத்தார்கள்..ஆனால் அவர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கும் ஏன் இயிரை கொடுக்கிரோமென்று... அவர்கள் என்ன செய்வார்கள்? அவ்ர்கள் உயிர் கொடுக்காவிடில் அவர்கள் குடும்பங்களுக்கு பின்னிருந்த தலைவர்களின் துப்பாக்கி வெடித்து விடுமே.. தன் குடும்பத்துக்காக தன்னை இழ்ந்த போராளிகள் தன் சொகுசுக்காக தன் இனத்தையே அழித்த தலைவர்கள். போராளிகள் மாயும் போதும் தன் இன மக்கள் அழியும் போதும் உசுப்பேத்தியவர்கள், தன் நேரம் நெருங்கும் போது வெள்ளைக்கொடியுடன் போய் காலில் விழுந்தனர். இவர்களுக்காக கூசா தூக்கியது போதும். போய் பிள்ளைகளையாவது படிக்க வைங்கப்பா....
நீங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்தியா என்ற ஒரு கேவலமான நாடு இருக்கும் வரை உங்களால் எதுவும் செய்ய முடியாது. இந்தியா சிங்களவர்க்ளோடு இணைந்து உங்களை அழித்தபடியே இருக்கும்...
மொஹமெட் சரியாக கூறினீர்கள்.
/*போராளிகள் உயிரை கொடுத்தார்கள்..ஆனால் அவர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கும் ஏன் இயிரை கொடுக்கிரோமென்று... அவர்கள் என்ன செய்வார்கள்? அவ்ர்கள் உயிர் கொடுக்காவிடில் அவர்கள் குடும்பங்களுக்கு பின்னிருந்த தலைவர்களின் துப்பாக்கி வெடித்து விடுமே.. தன் குடும்பத்துக்காக தன்னை இழ்ந்த போராளிகள் தன் சொகுசுக்காக தன் இனத்தையே அழித்த தலைவர்கள். போராளிகள் மாயும் போதும் தன் இன மக்கள் அழியும் போதும் உசுப்பேத்தியவர்கள், தன் நேரம் நெருங்கும் போது வெள்ளைக்கொடியுடன் போய் காலில் விழுந்தனர். இவர்களுக்காக கூசா தூக்கியது போதும். போய் பிள்ளைகளையாவது படிக்க வைங்கப்பா....*/
Mohamed Faaique அவர்களே, எங்க பசங்கள படிக்கவச்சா ஈழ மக்களோட எல்லா துன்பமும் போயிடுமா? எவன் செத்த எனக்கு என்னனு இருந்தா அவன் பேடி. இப்பதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல போயி இலங்கை அதிபருகிட்ட சொல்லி அமைதிய நிலை நாட்ட வையி அப்பறோம் என்ன புள்ளைகள படிக்க வைக்கிறோம்.
ஒரு ஐயம், தமிழ்மணத்துல ஈழத்த பற்றி எழுதுறவங்க பிள்ளைகள் எல்லா மாடா மேய்க்க போவுது?
மக்களுக்காக என்று நடந்தவர் இறுதியில் புலிக்கொடியுடன் புலிக்காக என்றாக்கி நடந்ததற்கான பலனை இழந்துள்ளார் என்பாதே உண்மை,ஆயிரம் தடவை சொன்னாலும் அறிவிலிகளப்பா தமிழர்,தலைமை விசுவாசமேன்ர பெயரில் தம்மினத்துக்கு என்றுமே நாசம் பண்ண இவர்களால் மட்டும்தான் முடியும்.மேலைத்தேசாம் இவர்கள் போல மூடர்களா,எழுத்தில்லாமல் கொடி பிடித்தால் மக்கள்,எழுத்துடன் கொடி பிடித்தால் புலிகள் என்று பிரிக்க!இதுவும் புலிக்கான கோரிக்கையாகி பொய்யாகிப்போனதேனோ!!மீண்டும் ஒரு தோல்வி கொடியால்!!!
sathiyanarayanan...
எனது கூற்றை இன்னும் ஒரு முரை வாசியுங்கள். பின் கொஞ்சம் யோடியுங்கள். இது இரண்டும் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்பட்டு என்ன பலன். நீங்கள் என்ன பேசினாலும் உங்கள் வீட்டு வாலிபனை படைக்கு அனுப்ப போவதில்லை. எவனோ உங்கள் இனத்துக்கு செத்து மாய வேண்டும். நீங்கள் a/c ரூமில் இருந்து உசுப்பேத்துவீர்கள். உங்களை விட எனக்கு நன்கு தெரியும் இலங்கையின் மற்றும் இலங்கை தமிழரின் நிலை. நீங்கள் செய்யும் கேலிக் கூத்துக்கள் ஒவ்வொன்றும் நமக்கு பிரச்சனையிலேயே முடிகிறது. உங்கள் சொந்த பிரபல்யத்துக்காக ஏன் நம்மை பகடைகாயாக்குகிறீர்கள். இப்பொழுதுதான் LTTE எனும் சனியன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு மேலாவது நம் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்
/*மக்களுக்காக என்று நடந்தவர் இறுதியில் புலிக்கொடியுடன் புலிக்காக என்றாக்கி நடந்ததற்கான பலனை இழந்துள்ளார் என்பாதே உண்மை,ஆயிரம் தடவை சொன்னாலும் அறிவிலிகளப்பா தமிழர்,தலைமை விசுவாசமேன்ர பெயரில் தம்மினத்துக்கு என்றுமே நாசம் பண்ண இவர்களால் மட்டும்தான் முடியும்.மேலைத்தேசாம் இவர்கள் போல மூடர்களா,எழுத்தில்லாமல் கொடி பிடித்தால் மக்கள்,எழுத்துடன் கொடி பிடித்தால் புலிகள் என்று பிரிக்க!இதுவும் புலிக்கான கோரிக்கையாகி பொய்யாகிப்போனதேனோ!!மீண்டும் ஒரு தோல்வி கொடியால்!!!*/
எவன் செத்த எனக்கு என்னனு இருந்தா அவன் பேடி. இப்பதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல போயி இலங்கை அதிபருகிட்ட சொல்லி அமைதிய நிலை நாட்ட வைத்துவிட்டு பேசு, உன்னோட பின்னாடி வரோம் அதுவரைக்கும் முட்டளவே இருக்கிறோம்.
அவனவன் முன்னாடி அவன் வீட்டு பெண்களை மாரை அறுத்தான் அவனவனுக்கு வலி தெரியும், உட்கார்ந்து எழுதுன தெரியாது.
mrs Mohamed Faaique அவர்களே,anonymous அவர்களே,
நான் உங்கள விட வயசுல சின்னவங்க தப்ப சொன்ன மன்னிச்சு கொள்ளுங்க
தமிழ் மொழி என்பது தமிழன் பேசும் மொழி
தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு மேல்
அந்த தமிழுக்காக உயிர் சிந்திய தியகியல நீங்க தலைவர்களின் அச்சுறுத்தலினால் மரித்தார்கள் என கூறுவது
ஏற்று கொள்ள முடியாத விஷயம் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
மிஸ்டர் முஹம்மத் நீங்கள் பேசும் மொழி என்ன எண்டு கேட்டல் என்ன சொல்வீர்கள் தமிழா இல்ல நீங்க முஸ்லீம் ஆச்சே நீங்க அரபி தான் பேசணும் அப்படி இல்ல நான் மதத்திற்கோ மொழிக்கோ வேறு பட்டவன் கிடையாது
நீங்க போடுற கமெண்ட் மத்தவங்கள பாதிக்காம இருக்கணும் அந்த வகேல நீங்க போட்ட கமெண்ட் தவறு தமிழ் பேசுற நாங்களே திருத்த வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கு பிறகு அவங்கள குற சொல்லி வேல இல்ல
அண்ணாanonymous தமிலன்னுக்கு வேற ஏதும் கோடி இருக்க அண்ணா இருந்தா சொல்லுங்க அவங்க ஏத்தின கோடி தவறு நான் ஒத்து கொள்ளுறன் முதல்ல எங்கள நாங்களே நிதானிச்சு பார்ப்பம் தமிழன் செய்ற பெரிய தப்பே இது தானே உயிரை கைல பிடிச்சு கொண்டு பலத்துக்குள்ள இருந்த எங்களுக்கு தான் தமில்ட அருமையும் தமிழ் தலைவன் அருமையும் தெரியும்
+
/*எனது கூற்றை இன்னும் ஒரு முரை வாசியுங்கள். பின் கொஞ்சம் யோடியுங்கள். இது இரண்டும் இல்லாமல் வெறும் உணர்ச்சிவசப்பட்டு என்ன பலன். நீங்கள் என்ன பேசினாலும் உங்கள் வீட்டு வாலிபனை படைக்கு அனுப்ப போவதில்லை. எவனோ உங்கள் இனத்துக்கு செத்து மாய வேண்டும். நீங்கள் a/c ரூமில் இருந்து உசுப்பேத்துவீர்கள். உங்களை விட எனக்கு நன்கு தெரியும் இலங்கையின் மற்றும் இலங்கை தமிழரின் நிலை. நீங்கள் செய்யும் கேலிக் கூத்துக்கள் ஒவ்வொன்றும் நமக்கு பிரச்சனையிலேயே முடிகிறது. உங்கள் சொந்த பிரபல்யத்துக்காக ஏன் நம்மை பகடைகாயாக்குகிறீர்கள். இப்பொழுதுதான் LTTE எனும் சனியன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு மேலாவது நம் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்*/
நீ நிம்மதியாக இருக்க, அதனால எம் மக்கள் எல்லாம் ஈழத்தில் நிம்மதியா இருக்காங்கனு அர்த்தமா என்ன?. இப்பதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல போயி இலங்கை அதிபருகிட்ட சொல்லி அமைதிய நிலை நாட்ட வைத்துவிட்டு பேசு.
அவனவன் முன்னாடி அவன் வீட்டு பெண்களை மாரை அறுத்தான் அவனவனுக்கு வலி தெரியும், உட்கார்ந்து எழுதுன தெரியாது.
பச்சோந்திகளுக்கு புரியாது,போராட்டம் ஏன்,ஆயுதமேந்தியது ஏனென்று!கொல்லையில் வந்து நிற்கிறான் சிங்களவன்!ஆண்டாண்டு காலமாக நாம் ஆண்ட பூமியை உலக நாடுகளின் துணையோடு பறிக்க ஆரம்பித்து விட்டான்!கடந்த காலங்களில் கொஞ்சமாகப் பறித்து இப்போது முழு நிலத்தையுமே ஆயுத முனையில் பறிக்கிறான்!கைகட்டி வேடிக்கை பார்க்கச் சொல்கிறார்கள் எடுபிடிகள்!ஆயுத பலத்துடன் இருந்த போது இருக்கும் திசையில் தலை வைத்து படுக்கவே அஞ்சிய சிங்களவன்,விடுதலைப் போரை பயங்கரவாதமாகச் சித்தரித்து உலக நாடுகளின் பிராந்திய நலனை முன்னிறுத்தி நாசகார ஆயுதங்களைப் பெற்று இன அழிப்புச் செய்தது மட்டுமல்லாமல் மீட்ட நிலமென்று உரிமை கொண்டாடுகிறான்,யூதன் பாலஸ்தீனர்களின் நிலத்தைப் பறிப்பது போன்று! பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தை சூறையாடுகிறான்! நண்பர் முகமட் பயிக்குக்கு யதார்த்தம் புரியவில்லை!ஜெனீவாவில் புலிக்கொடி பறப்பது அடிவருடிகளுக்கு தாங்கவில்லை!இப்போது கையில் ஏந்துகிறோம்!வருங்காலத்தில் ஐ. நா முன்றலில் கம்பத்தில் பறக்கும்!!!!!!!
மொஹமெட், நீங்கள் எங்களை மிக சரியாக அறிந்து வைத்துள்ளீர்கள்.
°என்ன பேசினாலும் உங்கள் வீட்டு வாலிபனை படைக்கு அனுப்ப போவதில்லை. எவனோ உங்கள் இனத்துக்கு செத்து மாய வேண்டும். நீங்கள் a/c ரூமில் இருந்து உசுப்பேத்துவீர்கள்.°
அப்பட்டமான உண்மை.நன்றி.
எனது கருத்தை ஒரு" முரை " வாசியுங்கள்!என்ன பயீக்கு ஏதோ அல்லாவோட உரை மாதிரி பில்டாப்பு கொடுக்குறீங்க? நஞ்சு தானே?ஏதோ ஈழத்தில இரிக்கிற மாதிரியும்,மகிந்தரை வணங்கினா அல்லாவை வணங்கின மாதிரி அப்பிடீன்னும் செல்லுறீகளா? நம்மாளுங்க செல்லுவாக,படிக்கிறது தேவாரம்,இடிக்கிறது சிவன் கோயிலின்னு!அந்தக் கதயாயிரிக்கி நீங்க பேசுறது!பேசுறது தமிழு,எழுதறது தமிழு!ஆனா,உண்ர்ச்சி மட்டும் வரமாட்டேங்குது!ஏன் காக்கா ஏன்?????????????????,
அன்பின் ஆசிரியருக்கும் ,முகம்மது அவர்களுக்கும் ,ஆசிரியரே
நீர் சிவநதன் நடந்தது பிழை என்கிறீரா?அல்லது தேசிய கொடி பாவித்தது பிழை என்கிறீரா? தேசிய கொடி எல்லா இனத்துக்கும் எல்லா நாட்டுக்கும் உண்டு .அதனை கொண்டு போவது எந்தவகையில் குற்றம் ?புலிகளின் கொடி வேறு தேசிய கொடி வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள் ,
மற்றது முகமது " இப்பொழுதுதான் LTTE எனும் சனியன் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு மேலாவது நம் மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் "நல்லது தமிழரது போராட்டம் விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதல்ல .வரலாற்றை பாருங்கள் .தமிழ் மக்களாகிய நாங்களும் சாக விரும்பல .உங்களது இனத்துக்கு வரும் அப்போது நீங்கள் பார்க்கலாம் எதற்காக காத்தான் குடியிலும் அம்பாறையிலும் உங்கட ஆட்கள் ஆயுதம் வைச்சிருக்கினம்?
இலண்டனில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தடை செய்யப் பட்ட இயக்கம் அதனால் அங்கு அது பதுங்கியது. சுவிசில் தடை செய்யப் படவில்லை. அதனால் அங்கு புலிக் கொடி பறந்தது.
விடுதலைப் புலிகளின் பின் தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்டீர்களா?
தமிழர்கள் மீது எந்த அளவிலான அடக்குமுறை இப்போது பாவிக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? விடுதலைப் புலிகள் "சனியன்கள்" என்றால் பலஸ்தீன விடுதலைக்காகப் போராடுபவர்களை எப்படி அழைப்பீர்கள்?
Post a Comment