உலகக் கிண்ண கால்பந்தாட்ட முடிவைச் சரிவரச் சொல்லி எட்டுக்கால் சோதிடரான ஆக்டபஸ் உலகைக் கலக்கியதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மூட நம்பிக்கை வளர்க்கும் செய்தி ஜேர்மன் பல்கலைக் கழகத்தில் ஒரு பேராசிரியரிடம் இருந்து வந்துள்ளது. "அதிஷ்டம் தரும் பொருட்களையோ ஆடைகளையோ அணிவதால் விளையாட்டு வீரர்களின் திறன் உளரீதியாக அதிகரிக்கும் என்று University of Colonge இன் Dr. Lysann Damisch என்னும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் Lysann Damisch தனது கருத்துக்கு முன் வைக்கும் ஆதாரங்கள்:
- டைகர் வூட்ஸ் ஞாயிற்றுக் கிழமைகளில் சிவப்பு மேலாடை அணியும் போது பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்.
- ஷெரீனா வில்லியம்ஸ் ஒரு டெனிஸ் போட்டியில் தொடர்ந்து ஒரே காலுறையை அணிந்திருந்தார்.
- இங்கிலாந்து கால்பாந்தாட்ட வீரர் பேரூந்தில் ஒரே இருக்கையை மட்டும் எப்போதும் பாவிப்பாராம்.
- பொபி மூர் என்னும் 1960களில் இங்கிலாந்துக்கு விளையாடிய கால்பந்தாட்ட போட்டிகளுக்கு முன் வீரர்கள் ஆடை மாற்றும் அறையில் தான் கடைசியாக காற்சட்டை மாற்றுவாராம்.
- இன்னொரு இங்கிலாந்து கால் பந்தாட்ட வீரரான கரி நெவில் ஒரே பின்-சவர பூச்சைப் பாவிப்பாராம். அத்துடன் ஒரே இடுப்புப் பட்டி, ஒரே காலணி பாவிப்பாராம்.
- அமெரிக்க பந்தாட்ட வீரரான மைக்கேல் ஜோர்டன் தனது ஒரே காற்சட்டையை எப்போதும் தனது காற்சட்டைக்குள் அணிவாராம்.
Richard Lustberg என்னும் மனோதத்துவ நிபுணர் மனப்பயம் தன்னம்பிக்கையின்மை உடையவர்கள் அதிஷ்டம் தரும் என்று சொல்லப்படும் பொருட்களைத் தம்முடன் வைத்திருக்கும் போது பயம் நீங்கப் பெறுவர். தன்னம்பிக்கை அடைவர் என்று சொல்கிறார்.
No comments:
Post a Comment