Friday, 11 June 2010
செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்த பிரித்தானியத் தமிழ்த் தொலைக்காட்சிகள்
இம்மாதம் 23-ம் திகதி ஆரம்பமாகவிருக்கும் உலகத் தமிழ செம்மொழி மாநாட்டிற்கு பல தமிழ உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். செம்மொழி மாநாடு ஈழத்தில் பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் அவலத்துக்கு உள்ளாகி இருக்கும் இவ்வேளையில் தேவைதான என்பதும் இவர்கள் எதிர்ப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. இபோது அவர்கள் அவலங்களைத் துடைப்பத விட்டு தமிழுக்கு விழா எடுப்பதா என்பதும் ஒரு கேள்வி.
பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் இந்தியாவிற்கு பெரும் பங்கு உண்டு. இதை பல சிங்கள அமைச்சர்கள் பலதடவை தெரிவித்து விட்டனர். இதை இந்திய அரசு மறுக்கவுமில்லை. இந்திய அரசில் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு அங்கம். இதனால் இலங்கைத் தமிழர்களின் அவலத்திற்கு திரு மு கருணாநிதிக்கும் அவரது கட்சிக்கும் பல இலட்சம் இலங்கைத் தமிழர்களை அவலத்திற்குள்ளாக்கியதில் பொறுப்பு உள்ளதை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது.
ஈழத் தமிழர்கள் பெரும் அழிவைச் சந்தித்து, வதை முகாங்களில் இருக்க உலகத் தமிழாராய்ச்சி அல்லது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பொருத்தமானதா என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் கேள்வி விடுத்துள்ளது. "பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட்ட போது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா" என்று மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி விமர்சித்துள்ளார். யாழ் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் அமைப்பு செம்மொழி மாநாட்டைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.
இலங்கையில் இனக் கொலை நடந்த போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜி என்ற சிங்களவர்களின் உற்ற நண்பன் எந்த வகையில் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்? செம்மொழி மாநாட்டு அமைப்பாளர்களின் மிக முட்டாள்த் தனமான முடிவு பிரணாப் முஹர்ஜியை அழைத்தது.
பிரித்தானியாவில் உள்ள சில "தமிழ் அறிஞர்கள்" கருணாநிதியின் செம்மொழி மாநாட்டிற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தமிழ்தொலைக்காட்சிகளை அணுகி தங்களைப் பேட்டி காணும்படி கோரினார். அதற்கு இரு தொலைக்காட்சிச் சேவைகளும் மறுத்துவிட்டன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
5 comments:
the same way we should boycott the Fetna - cine dance function too.
the same way we should boycott the Fetna - cine dance function too.
//cine dance function too. //
It is immature to say so. Please visit fetna.org to see the people attending. I don't know in which movie Prof. Boyle, Ellyn Shander or Thamarai or Parveen Sultana or performing arts professor Arumugam danced. Learn before you comment! If you do not want to see Trisha, just close your eyes :)) It is unfortunate that there has to be some cine faces to pull the crowd. No Tamil event in North America can survive with just classical artists! Get to reality!
See the selection of artists at their website:
http://fetna.org/index.php
Tickets are selling fast, register soon! Last year hundreds of people did not get ticket in Atlanta. So hurry up and register! FeTNA is OUR organization, YOUR organization and every Tamil's own organization. Be a proud part of it!
ஆம் நண்பரே - ப்ரியா மணி, சாதன சர்கம், லட்சுமி ராய், த்ரிஷா போன்ற தமிழ் அறிஞர்கள் தங்கள் குத்து நடனம் பாடல் மூலம் தமிழ் வளர்க்கும் விழா இது.
ஈழத்தில் தொப்புள் கொடி உறவு வருத்தப் படும் சம காலத்தில் , தமிழை நாம் வளர்ப்போம் ப்ரியாமணி, சாதனா சர்கம் உதவியுடன்.
தமிழர் கொண்டாட்டங்கள் முள் வேலிகளிலும் ஒளி பரப்ப படுமா,
Post a Comment