
சிவகங்கைத் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் உதவியால் வெற்றி பெற்ற சிதம்பரம் தமிழ் மக்களை வைத்துக் ரெம்பத்தான் காமெடி பண்ணுகிறார். காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அடிகளார் மகளிர் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில்தான் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பல காமெடிகள் உதிர்த்துள்ளார்.
காமெடி - 1 - இந்தியாவில் உள்ளது போல் இலங்கையிலும் சுயாட்சி உள்ள மாநிலங்கள் அமைக்கப்படும்.
எவன் சொன்னான் இந்தியாவில் சுயாட்சியுள்ள மாநிலங்கள் இருக்கின்றன என்று? அரசியலமைப்பு நிபுணர்கள் சொல்கிறார்கள் இந்திய மாநில அரசு என்பது ஒரு மினுக்கப் பட்ட நகரசபை என்று- A glorified Municipal Council. இந்தியாவில் மாநிலங்களுக்கு சுயாட்சி இருந்தால் ஏன் அறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார். 1987-ம் ஆண்டு ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தத்தின் தமிழருக்குச் சாதகமான ஒரு அம்சத்தைக் கூட இதுவரை நிறைவேற்றாத இந்திய அரசு தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தரப் போகுதாம். ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் இந்த மாதிரியெல்லாம் காமெடி அடிக்கச் சொல்லிக் கொடுப்பார்களா?
காமெடி - 2 - இடம் பெயர்ந்த மக்கள் யாவரும் இவ்வருட இறுதிக்குள் மீள் குடியேற்றப் படுவார்கள்.
ஏற்கனவே முகாம்களில் இருந்து வெளியே வந்தவர்கள் வாழ்வாதாரம் இன்றித் தவிக்கிறார்கள். நீங்கள் சொன்னீர்கள் என்று ராஜபகசக்கள் முதல் வேலையாக தமிழர்களை மீள் குடியேற்றம் செய்யப்போகிறார்கள். இந்தக் காமெடியை இத்தாலிப் பாவாடைக்குள் இருந்து பெற்றீர்களா?
காமெடி - 3 - இலங்கையில் இனப்பிரச்சனை 1984இல் வெடித்தது.
இலங்கை சரித்திரம் என்பது சிங்கள தமிழ்ப் போர் மயமானது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கைசுதந்திர மடைந்த பின் 1956, 1958, 1962, 1972 1977, 1983, 2000, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்தன. மகளிர் கல்லூரியில் ஆயிரக் கணக்கான இளம் பெண்களுக்கு முன் பேசும் போது இப்படி காமெடி விடுவது மன்னிக்கக்கூடியதே.
மகளிர் கல்லூரிக்குப் போனமா பிகர்களைப் பார்த்தமா என்றுஇல்லாமல் என் இந்தக் காமெடி எல்லாம்?
4 comments:
எல்லாமே தெரியும். இவருக்கு எப்போது புரியும்?
சனியனின் பாவாடைக்குள் அடங்கிய நாதாரிப் பயல்
தமிழனை எதையும் சொல்லி ஏமாற்றலாம்...
படித்திருந்தும் தமிழரை வாழவைக்க மறந்தான். ஒரு இத்தாலியாள் காலடியில் தவம் கிடக்கின்றான்.
Post a Comment