Friday, 11 June 2010
பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள்
கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அல்லது செல்வராசா பத்மநாதன் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் இப்போது தெரிவிக்கப்படுகிறன. சென்றவாரம் இலங்கை அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல உள்ளூர் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் பத்மநாதனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று தெரிவித்தார்.
பத்மநாதன் கைது செய்யப் பட்டு இலங்கை வந்தாரா? கடத்தப் பட்டாரா? அல்லது இலங்கைக்கு தனது விருப்பத்துடன் சென்றாரா? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் தடுமாறுகின்றனர். அத்துடன் அவர் ஏன் இந்தியாவிற்கு நாடு கடத்தப் படவில்லை? இந்தியா ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பல தகவல்களை அறிந்து கொள்ள அதில் முக்கியமாக ராஜீவ் காந்தி கொலைக்கும் ஆர். பிரேமதாசா அரசிற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள, விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ய நீண்ட நாட்களாக முயற்ச்சி செய்து வருகிறது. இதற்காகவே கேணல் கிட்டுவை நடுக்கடலில் வைத்து கைது செய்ய முயன்று தோல்விகண்டது. இந்நிலையில் பத்மநாதன் தொடர்பாக பல முரண்பட்ட கருத்துக்கள் இப்போது வெளிவருகின்றன.
தகவல் -1 - துரோகி பத்மநாதன்
பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்பே இலங்கை அரசின் கைப் பொம்மையாக மாறிவிட்டார். அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்கள் பல இலங்கை இந்தியக் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டன. அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரிலேயே இலங்கை சென்றார். புலிகளின் நிதிதொடர்பாக அவர் இலங்கை அரசிற்கு தகவல்கள் வழங்கினார்.
இந்த தகவலில் சில சந்தேகங்கள் உண்டு. இலங்கைக்கு உதவி செய்ய அவர் இலங்கை செல்லாமல் தொடர்ந்தும் வெளிநாட்டில் இருந்து கொண்டே விடுதலைப்புலிகளின் பன்னாட்டுக் கட்டமைப்பை சிதைக்க தொடர்ந்தும் உதவிகளைச் செய்திருக்கலாம்.
தகவல் - 2 துணைவன் பத்மநாதன்
பன்னாட்டு ரவுடிக் கும்பல் விடுதலை புலிகளை ரவுண்டு கட்டித் தாக்கி இறுதிப் போரை முடிவுக்குகொண்டு வந்த பின்னர் இலங்கை அரசிடம் பத்தாயிரம் விடுதலைப் புலி போராளிகள் அகப்பட்டுக் கொண்டனர். ஏற்கனவே இவர்களிடம் இவர்களை மீட்பதற்கு பன்னாட்டு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் உறுதி அளித்திருந்தது. இதன் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைமப் பீடமும் இலங்கை அரசும் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டன. அந்த உடனபடிக்கையின் ஒரு அம்சமாக பத்மநாதன் இலங்கை அரசிடம் சரணடைந்து விடுதலைப் புலிகளின் சொத்துக்களை இலங்கையிடம் கையளிப்பது அதற்கு கைமாறாக இலங்கை அரசிடம் அகப்பட்டுள்ள பத்தாயிரம் விடுதலைப் புலிகளைக் கொல்லாமல் அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவது.
இந்தத் தகவகளின் உண்மைத் தன்மையை பத்மநாதனுக்கு இனி என்ன நடக்கவிடுக்கிறது என்பதை ஒட்டியே அறிந்து கொள்ள முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
first of all, my understanding is that KP has gone to SL willingly when he reaslised that his drama was about to be over. Secondly, he is believed to have worked with RAW since 2006 on the promise given by mkarjee who secured his relaese after he was arrested by Bangkok. At one ponit, he must have realised that his life was at risk at the indian hand and negotiated with SL.
He also earned a lot of money for purchasing arms. It is believed that he did not send arms but empty ships and was assisted by indian navy sinking the empty ships making him to be richer.
I also belive that he told a lot of lies to LTTE leadership abouit american involvement (army coming to save Tamils in mullivakkal that is bul shits.
Karuna and Maththay were great than KP, Ram, nagulan etc.
Post a Comment