Friday, 28 May 2010

Microsoft ஐ முந்திவிட்டது Apple




இலண்டனில் ஐ-பாட் கோலாகல ஆரம்பம்
இலண்டனிலும் வேறு பல நகரங்களிலும் ஐ-பாட் வாங்குவதற்காக பலமணி நேரங்களுக்கு முன்னதாகவே வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். இலண்டனில் இன்று காலை 8மணிக்குத் திறந்த ஆப்பிள் கடைக்கு நேற்று நண்பகலில் இருந்தே மக்கள் வரிசையாகக் காத்திருக்கக்த் தொடங்கிவிட்டனர்.

பிரபல நகச்சுவை நடிகர் Stephen Fry முன்கூட்டியே பதிவு செய்து ஒரு ஐ-பாட் வாங்கினார். ஏற்கனவே அமெரிக்காவில் ஒன்றை அவர் வாங்கியிருந்தார். இப்போது மீண்டும் வேறு ஒரு மாதிரி ஐ-பாட் வாங்கியுள்ளார். இதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று நிரூபர்கள் கேட்டதிற்கு நான் இதைக் கொண்டு போய் தடவப் போகிறேன் என்றார். ஆம் தொடு திரைத் தொழில் நுட்பம் தடவுவதன் மூலம் இயங்கும். அதை அவர் அப்படி நகைச் சுவையாகச் சொன்னார்.

ஐ-பொட், ஐ-போன், ஐ-பாட் ஆகியவற்றை வெற்றீகரமாகச் சந்தைப் படுத்தியதால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பெரும் பெறுமதி மதிப்புயர்வைப் பெற்றுள்ளன. கடந்த் 10 ஆண்டுகளில் அவற்றின் மதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளின் மொத்த மதிப்பு இப்போது 222பில்லியன் அமெரிக்க டொலர் ஆக உயர்ந்துள்ளது. இதனால்தொழில்நுட்ப நிறுவனங்களின் பெறுமதி வரிசையில் இதுவரை முதலாம் இடத்தில் இருந்த மைக்ரோசொfர் இப்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப் பட்டு ஆப்பிள் முதலாம் இடத்தை அடைந்துள்ளது. மைக்ரோசொfரின் சந்தை மதிப்பு 119பில்லியன்கள்.

2 comments:

VELU.G said...

சுவையான தகவல் நன்றி

VELU.G said...

சுவையான தகவல் நன்றி

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...