Monday, 24 May 2010
இந்தியத் திரைப் படவிழா இலங்கையில்நடந்தால் என்ன! இந்தியாவில் நடந்தால் என்ன!!
இந்தியத் திரைப்படவிழா இலங்கையில் நடக்கக்கூடாது என்று சிலதரப்பில் இருந்து பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பியவண்ணமே இருக்கின்றன. இந்தியத் திரைப்படங்களுக்கு உலகளாவிய வரவேற்பு உண்டு. ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் தயாராகின்றன.
இலண்டனில் முதல் தடவையாக இந்தியத்திரைப்படவிழா நடந்த பின்பு பிரித்தானியாவில் இந்தியப் படங்களுக்கான வருமானம் 35% அதிகரித்தது.
2008ம் ஆண்டு தாய்லந்து தலைநகர் பாங்கொக்கில் இந்தியத் திரைப்படவிழா நடந்ததைத் தொடர்ந்து அதிக இந்தியப் படங்கள் அங்கு தயாரிக்கப் படுகின்றன. இப்போது இந்தியாவிலும் பார்க்க தாய்லாந்தில் அதிக இந்தியப் படங்கள் தாயாரிக்கப் படுகின்றன.
இம்முறை இந்தியத் திரைப்பட விழாவை தமது நாட்டில் நடாத்தும்படி தென் கொரியா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டின. ஆஸ்கார் விருது விழாவிற்கு அடுத்தபடியான உலகப் பெரும் விழாவாகக் கருதப்படும் இந்தியத் திரைப்படவிழாவை தமது நாட்டில் நடாத்துவதால் தமது நாட்டிற்கான உல்லாசப் பிரயாணத்துறையை மேம்படுத்துவதையும், இந்தியாவுடனான வர்த்தகத்தை வளர்ப்பதையும் கருத்தில் கொண்டு இந்த நாடுகள் ஆர்வம் காட்டின. இருந்தும் இலங்கையை இதற்கு தெரிவு செய்ததில் வர்த்தகக் காரணங்கள் மட்டுமல்ல அரசியல் காரணங்களும் உண்டு. சிங்களவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் இந்திய எதிர்ப்பு விரோதத்தை சரிப்படுத்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு உண்டு. இலங்கைக்கு தனது உல்லாசப் பிரயாணத்துறையை சீர் செய்ய வேண்டும். உலக அரங்கில் நாளுக்கு நாள் வரும் புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் மூலமாக சிதைந்து கொண்டிருக்கும் தனது மதிப்பைக் காப்பாற்றஇலங்கைக்கு ஒரு அவசர முதலுதவி தேவைப்படுகிறது. இந்திய வர்தக சம்மேளனமும் இந்தியத் திரைப்படத்துறையும் இணைந்து இந்தியத் திரைப்பட விழாவை இலங்கையில் நாடாத்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றன. தென் கொரியா, கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகளில் நடாத்துவதால் கிடைக்கும் பொருளாதார நலன்களிலும் பார்க்க இலங்கையில் பெரிதாகக் கிடைக்கப் போவதில்லை. இருந்தும் இத்திரைப்பட விழாவை இலங்கையில் நடாத்த அவை அடாவடியாக நிற்பது திரை மறைவில் பல கொடுக்கல் வாங்கல்கள் நடந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது. வாரம் தோறும் இலங்கைப் பிரச்சனையை எழுதிவரும் விகடன் பத்திரிகைக் குழுமங்கள் கூட மௌனமாக இருப்பது அவர்கள் வாய் ஏதோ கொடுக்கல் வாங்கல் மூலம் அடைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இலங்கையில் ஏன் நடத்தக் கூடாது?
இலங்கையில் ஏன் நடத்தக் கூடாது என்ற கேள்விக்கான விடை இலங்கை அரசு தமிழர்களைக் கொன்றது என்பதாகும். இந்தியாவும் சேர்ந்துதான் தமிழர்களைக் கொன்றது. மகாபாரத்தில் கண்ணனே பின்னணியில் இருந்து சகல கொலைகளையும் செய்தது போல் இலங்கையில் நடந்த சகல கொலைகளுக்கும் பின்னணியில் இருந்தது இந்தியாவே. தமிழனைப் பொறுத்தவரை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தியாவின் தமிழ் மீனவர்களைக் இலங்கை அரச படைகள் கொல்வதற்கு எதிராக இந்திய அரசு எதுவும் செய்யாது என்று நீதிமன்றில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எந்த இரு நாடுகளுக்கும் இடையில் எல்லையைத் தாண்டுபவர்கள் கொல்லப்படுவதில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிக்கையில் அப்படி நடக்கலாம். எல்லையைத் தாண்டுபவர்களைக் கொல்வதோ அல்லது நிர்வாணமாக்கித் தாக்குவதோ எந்த நாட்டிலும் நடப்பதில்லை. தமிழ் மீனவர்களைக் கொல்லும் இலங்கைக்கு எதிராக இந்தியா ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழனுக்கு இந்தியா எதிரியே. அந்த எதிரியின் திரைப்படவிழா எங்கு நடந்தாலும் தமிழனுக்கு ஒன்று தான். இலங்கையில் நடக்கும் திரைப்படவிழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் இந்தியாவில் நடக்கும் சகல விழாக்களையும் புறக்கணிப்பார்களா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
6 comments:
You are right man...
India under Sonia is the worst enemy of Tamils...
brilliant ... vel... keep it. up i m with you...
both are devils...
India will never let Tamils live in peace...
இந்தியக் கோமாளிகளை இலங்கைக்கு ரெம்பப் பிடிக்கும்....
Post a Comment