
உன் கண்கள் அனுப்பும்
குறுந்தகவல்களால்
நிரம்பி வழியுது
என் இதயம் என்னும்
உள்பெட்டகம்.
உன் விழிதரும் உணவு
என் இதயத்தின் அமுது
நீயே வாழ்வின் தொடக்கம்
நீயே வாழ்வின் நடப்பு
நீயே வாழிவின் முடிவு
நீ அருகிருந்தால்
விண்ணை என்ன
பிரபஞ்சத்தையே
தாண்டுவேன் நான்
நீ என் முன் நின்றாலும் சுவை
நீ என்னைப் பிரிந்தாலும் சுவை
நின் நினைப்பே பெரும் சுவை
கைது செய்வது நீயானால்
மரணதண்டனைக் கைதியாவேன்.
3 comments:
உங்கள் காதல் கை கூடட்டும் தர்மா ...
வாழ்த்துக்கள் முன்னரே ...
கவிதை அருமை. வாழ்த்துக்கள்
நல்லாயிருக்கு நண்பரே
Post a Comment