Sunday, 9 May 2010

இக் கவிதை வடிவத்தை எப்படி அழைப்பர்-2?


சக்கரம் சுழல்வ தெப்படி?
திண்ணை மெழுகுவ தெப்படி?
அச்சாணியிட்டு.
.
இந்தக் கவிதை எங்கேயோ படித்த ஞாபகம்.
இக் கவிதை வடிவத்திற்கு என்ன பெயர்?
யாருக்காவது தெரிந்தால் அறியத் தரவும்.

இதைப் போன்று சில கவிதைகளை நான் எழுத எடுத்த இரண்டாவது முயற்சியால் உருவான வரிகளைக் கீழே தடவையாகத் தந்துள்ளேன்:

தென்னகம் முடிவதெங்கே
பெண் சுகம் வடிவதெங்கே
குமரிமுனையில்

மீனாட்சி குடி கொண்டதெங்கே
காதலர் இன்பம் காண்பதெங்கே
கூடலில்

தமிழின் புகழ் அடங்கியதெங்கே
காங்கிரஸ் கட்சி அடங்கியதெங்கே
பாவாடைக்குள்

நடிகன் பணம் தேடுவதெப்படி
பறவைகள் சரணடைவதெங்கே
வேடந்தாங்கலில்

இதன் முதலாம் பாகம் காண இங்கு சொடுக்கவும்

4 comments:

VELU.G said...

நல்லாயிருக்கு

Anonymous said...

காங்கிரஸ் எந்தப் பாவாடைக்குள் அடங்கியிருக்கிறது?????

Barari said...

இந்த கவிதைக்கு எதிர்ச்சொல் அலங்காரம் என்று பெயர்.

Anonymous said...

சோனியா காந்தியின் பாவாடைக்குள்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...