Monday, 26 April 2010
இதிகாச காலத்தில் தொலைக்காட்சிச் சேவைகள் இருந்திருந்தால்!!!!!
பாரதப் போர் நடந்த போது அதை தான் நேரடியாகப் பார்க்க முடியாமல் இருப்பதையிட்டு கண்பார்வையற்ற திருதராட்டினன் மிகவும் வருந்தினான். வியாச முனிவரை அழைத்து தன் ஆதங்கத்தை திருதராட்டினன் தெரிவிக்க அவர் திருதராட்டினனின் உதவியாளர் சஞ்சயன் குருசேத்திரத்தில் நடக்கும் போரை உடனுக்குடன் காணும் ஏற்பாட்டை அமைத்துக் கொடுக்க அதை சஞ்சயன் ஒரு நேரடி வர்ணனைய மூலம் திருதராட்டினனுக்குத் தெரியப் படுத்தினான். அப்போதே தொலைக்காட்சித் தொழில் நுட்பம் இந்தியாவில் இருந்திருக்கிறது. அதில் நீள் தொடர் நாடகங்களை உள்ளடக்கி அதை ஒரு வர்த்தக ரீதியில் மக்களை ஏமாற்றிச் சுரண்டும் முயற்ச்சியில் யாரும் ஈடுபடவில்லை. அக்காலத்தில் வர்த்தகத் தொலைக்காட்சிகள் இருந்திருந்தால் என்ன நடத்திருக்கும்?
சீதைமீது இராவணன் பாலியல் வல்லுறவு புரியும் காணொளிக்காட்சிகளை மண் ரீவி அடிக்கடி ஒளிபரப்பி பரபப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியதால் அயோத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இராமரது அரசு எந்த நேரமும் கவிழலாம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அயோத்தி பங்குச் சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
காட்டுக்குச் செல்ல முன் ஊடகவியலாளர்களுக்கு பேட்டியளித்த சீதை தான் அப்பழுக்கற்றவள் என்றும் தனது பார்வையாளர் தரவரிசையை அதிகரிக்க மண் ரீவி வேண்டுமென்றே போலியான ஒரு காணொளியை தனது தொழில் நுட்ப அறிவைப் பாவித்து தயாரித்து தன் வாழ்வைக் கெடுத்துவிட்டது என்றும் ஆத்திரத்துடன் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த சீதை தனது உடல் கறைபடியாத உடல் என்றும் காட்டுக்கு போவது தனக்கு ஒன்றும் புதிது அல்ல என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அனுமாரிடம் வினவிய போது அவர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார். இலட்சுமணன் தான் ஒரு முறை காட்டுக்குப் போய் பட்டது போதும். சீதையுடன் தான் காட்டுக்குச் செல்லமாட்டேன் என்று மட்டும் கூறினார்.
சீதையின் கூற்றை மறுத்த மண் ரீவியினர் தமது காணொளி உண்மையானதென்றும் அது இராவணன் சீதைமீது பாலாத்காரம் பிரயோகித்தபோது திரிசடை அதை மறைந்திருந்து தனது ஐ-போனில் காணொளிப் பதிவு செய்ததாகவும் தெரிவித்தனர். அந்தப் பதிவு உண்மையானதென்று எந்த அரச சபையிலும் தாம் நிரூபிக்கத் தாயார் என்றும் கூறுகின்றனர் மண்ரீவியினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment